Wednesday, October 9, 2013

ஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)



                   
                                ஆவி's  கிச்சனுக்கு ஒரு நல்ல படம் தயார் செய்து தரச் சொல்லி கேட்க நம்ம வாத்தியார் கிச்சனை விட்டு நகர முடியாதபடி திகட்ட திகட்ட ஒரு படத்தை தயார் செய்து கொடுத்து திக்கு முக்காட செய்துவிட்டார். டேங்க்ஸ் வாத்தியாரே!!
                                   
 சிக்கன் குலோப் ஜாமூன் 



தேவையான பொருட்கள்:
                              
குலோப் ஜாமூன் மிக்ஸ் -  1 பாக்கெட் ( MTR சிறப்பாக இருக்கும், ஆனால் அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது.)

பாத்திரங்கள்  - 2 ( மாவு பிசைவதற்கும், ஜீரா தயாரிப்பதற்கும்)

வாணலி  - 1

பால்                 - அரை கப்  (காய்ச்ச வேண்டாம்)

வெண்ணை  - 1/4  டீ-ஸ்பூன் மட்டும் 

சிக்கன்            - 100 கிராம்  ( பொடிப் பொடி துண்டுகளாய் வெட்டி வைத்துக் கொள்ளவும்.)

சர்க்கரை - 2 கப்

எண்ணெய் - தேவைக்கேற்ப

பட்டர் ஷீட் - 1

எலுமிச்சை - 1

ஏலக்காய் - 2



செய்முறை விளக்கம்: 
  1. குலோப் ஜாமூன் மிக்ஸ் பாக்கெட்டை பிரித்து பாத்திரத்தில் கொட்டி அரை கப் பாலை ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். 
  2. சிக்கன் துண்டுகளை குக்கரில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் வேக விடவும் (விசில் வேண்டாம் )
  3. அதற்குள் சர்க்கரைப் பாகு தயாரித்து விட்டு வந்தால் நேரம் சரியாக இருக்கும். (கீழே பார்க்கவும் )
  4.  ஊற வைத்த மாவை பந்து போல் (பட்டர் ஷீட் மேல் ) உருட்டவும். பட்டர் ஷீட் தேவைக்கு அதிகமான ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.
  5. பின்பு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். ( ரொம்பவும் சிறியதாக இருந்தால் இனிப்பு அதிகம் உறிஞ்சி விடும், ரொம்பவும் பெரியதாக செய்தால் உள்ளே வேகாமலும் வெளியே கருகிவிடும் அபாயமும் உள்ளதால் மீடியம் சைசில் பிடிக்கவும்)
  6. வேக வைத்த சிக்கன் துண்டுகளை உள்ளே வைத்து மீண்டும் உருண்டை பிடிக்கவும்.
  7. வாணலி (அ ) வடசட்டியில் எண்ணெய் ஊற்றவும். சற்று சூடான பின் ஒரு துளி மாவைக் கிள்ளிப் போட்டுப் பார்த்து சூட்டைக் கணிக்கவும்.
  8. சூடானதை உறுதி செய்த பின் உருண்டைகளை நான்கு அல்லது ஐந்து செட்களாக போடலாம். 
  9. உருண்டைகள் பொன்னிறமாக மாறும் போது எடுத்து எண்ணையை வடிகட்டி பின் மிதமான சூட்டில் கொதிக்கும் ஜீராவில் போடவும்.
  10. எல்லா உருண்டைகளும் தயாரான பின் அடுப்பை அணைத்து உருண்டைகளை சிறிது சூடு ஆற விடவும். 
  11. ஒரு மணி நேரம் சர்க்கரைப் பாகில் ஊறிய பின் வேறொரு கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்..
  12. சுவையான சிக்கன் குலாப் ஜாமூனை பரிமாறவும்..


சர்க்கரை பாகு (ஜீரா) தயாரிக்க:

  1. ஒரு அகண்ட பாத்திரத்தில் 2 கப் நீருக்கு  2 கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். 
  2. மணம் சேர்க்க பொடி செய்யப்பட்ட ஏலக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
  3. சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள பாகு கெட்டியாகாமல் இருக்கும்.
  4. மிதமான சூட்டில் இதை கொதிக்க வைத்தபடியே குலாப் ஜாமூன் ரெடி பண்ணப் போகலாம். (கம்பி பதம் தேவையில்லை )
( பி.கு) : சிக்கன் சேர்த்திருப்பதால் காலையில் செய்த பதார்த்தத்தை மாலைக்குள் முடித்து விடுவது நல்லது.

                                                   **************


40 comments:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. சிக்கன் குலோப் ஜாமூன்... Superb...!

    ReplyDelete
  3. துன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

    ReplyDelete
  4. அலோ உங்க ஆளு ’தொப்புளை’ சுத்தி,
    எல்லோரும் அடுப்பு வச்சு தீ மூட்டி ‘காஞ்சுகிட்டு’ இருக்காங்க.
    நீங்க இங்க குலாப் ஜாமூனா!...அதுவும் சிக்கன் குலாப் ஜாமூனா!!

    ReplyDelete
    Replies
    1. அது பத்தி முகநூல் ஸ்டேட்டஸ் ரெடி ஆயிட்டு இருக்கு..

      Delete
  5. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. என்ன ஆனந்த், ஸ்வீட் சிக்கன் செஞ்சி இருக்கீங்க...... ஆமாம் அதுக்கு தொப்புள் இருக்கா :-)

    ReplyDelete
  7. நான் ஜாமூன் நல்லா செய்வேன். இதுவரை சிக்கன்ல செஞ்சதில்லை. புரட்டாசி கழியட்டும் செஞ்சு பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Kandippa akka. Nalla irukkum. Try panni paarunga..

      Delete
  8. நீ போட்டிருக்கும் படத்துல கருப்பு சேலை கட்டி சமைக்கும்போது கூட வயத்துல கைவச்சிருக்குற மாதிரி போட்டு உங்காளு தொப்புளை காட்டாதுன்றதை நிரூபிக்குறியா!?

    ReplyDelete
  9. அவுங்க சமைக்கிறாப்பல போஸ் ஒன்னும் இல்லியே...

    ReplyDelete
    Replies
    1. Thanga nagai seyyura mathiri padam illaattalum nagai vilambaratha pakkareengale?

      Delete
  10. இன்று திறப்பு விழா காணும் ‘ஆ.வி கிச்சன்’ வாடிக்கையாளர்கள் ஆதரவை அமோகமாக பெற்று வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நான் சாம்பிள் டேஸ்ட் பார்த்துதான் ...லைக்

      Delete
    2. Nandri..Nandri. .Nandri. .

      Delete
  11. குலோப் ஜாமூன் மிக்ஸ் - 1 பாக்கெட்... கலக்கறதுக்கு முன்னாடி காலாவதி ஆகிருச்சானு செக் பன்னனும்.

    ReplyDelete
    Replies
    1. //கலக்கறதுக்கு முன்னாடி காலாவதி ஆகிருச்சானு செக் பன்னனும்.//

      சாப்பிட்டதுக்கு அப்புறம் கலக்காம , கலாவதியகமா இருந்தா சரி ....! :-)

      Delete
  12. வலைச்சர அறிமுகத்தில் இன்று நீங்கள்!...
    வாழ்த்துக்கள் சகோ!

    சமையற் குறிப்பு நான் பார்க்கமாட்டேன்.. அங்கே சிக்கன்.. சிக்கல்..:)))

    ReplyDelete
  13. விளம்பர போர்டு சூப்பர்.
    ஆனா உங்க கடையில ‘ஒரே ஐட்டம்தான்’ நிறைய இருக்குது...என்ற குறியீடு உங்க போர்டுல இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அதானே... ஐட்டம் என்ற‌ வார்த்தையை டிலீட் செய்யவும்.

      Delete
    3. Baskaran sir - hahaha timing..

      Delete
    4. Kalakumaran sir - adhe adhe

      Delete
  14. //துளி மாவைக் கிள்ளிப் போட்டுப் பார்த்து சூட்டைக் கணிக்கவும்.//செய்து முடித்ததும் சுவையாக இருந்தால் உங்களை நீங்களே கிள்ளி பார்க்கவும்.

    ReplyDelete
  15. சிக்கன்ல தித்திப்பா குலோப்ஜாமூனா? இதை நஸ்ரியா மட்டும்தான் சாப்பிட முடியும்!

    ReplyDelete
  16. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. நான் முதல் முறையாக உங்களுடைய வலைத்தளதிற்கு வருகிறேன்...
    வலைச்சர அறிமுகத்துக்கு வாழத்துக்கள்....

    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
    www.99likes.blogspot.com

    ReplyDelete
  18. suda suda chickenkulla... sorry, kitchenkulla pugunthacha aavi? Nice recepie.But eneela veetula seithu sappida mudiyathu (uthai vilum). AAvi veettukku varum bothu aavi's kitchen laye seithu sappittu parthuda vendiyathu than..! Hi... Hi...!

    ReplyDelete
  19. புதுசா இருக்கே....

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...