கல்லூரிக் கால நினைவலைகளை புத்தகமாய் மாற்ற சிற்பியாய் மாறி ஒவ்வொரு பக்கங்களையும் செதுக்கி சிலையாய் வடித்துக் கொடுத்ததோடு அழகான அழைப்பிதழையும் வடிவமைத்து தந்த வாத்தியாருக்கு நன்றிகளை கூறிக் கொண்டு என் அழைப்பை ஏற்று என்னையும் என் உணர்வுக் குழந்தையையும் வாழ்த்த வந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி கூற விழைகிறேன்..
சிற்சில தவிர்க்க முடியாத காரணங்களால் விழாவிற்கு வர இயலாமல் சில நட்புள்ளங்கள் பின்வாங்க, இந்த புத்தகம் உருவாக்க நினைத்த நாளில் இருந்து ஒவ்வொரு தினமும் பல மணி நேரங்கள் எனக்காய் செலவிட்டு, விழாவன்று முழு தினமும் என்னை அழைத்துக் கொண்டு அவருடைய செல்ல வாகனத்தில் பவனி வந்த பாலகணேஷ் சாருக்கு மீண்டும் என் நன்றிகள். வாழ்த்துரை எழுதியதோடு நில்லாமல் விழா தினம் விடுப்பெடுத்து துணையாய் நின்று நிகழ்ச்சியை துடிப்போடும், நகையோடும் தொகுத்து வழங்கிய நண்பன் சீனுவுக்கு என் நன்றிகள்..
இப்போ ஆவிப்பா புத்தக வெளியீட்டு நிகழ்வில் இருந்து சில துளிகள்..
வரவேற்புரை வழங்கிய ஆர்.வி. சரவணன், வழக்கம் போல துறுதுறுப்புடன் ஒவ்வொரு விருந்தினர்களையும் வரவேற்க வேண்டி பல ரிஸர்ச்சுகள் செய்து பத்து பதினைந்து பக்கங்களுடன் இறங்கினார்.. பின்னர் நேரமின்மை காரணமாக அதன் சாறை மட்டும் பிழிந்து அழகுடன் வரவேற்றார்.
இதுவரை அவரிடமிருந்து ஓரிரு சொற்களே வெளிப்பட்டு பார்த்திருக்கிறோம். அன்று மடை திறந்த வெள்ளம் போல் நம்ம ஸ்கூல் பையன் வாழ்த்துரை வழங்கிய போது ஆச்சரியமும் சந்தோஷமும் அரங்கில் நிறைந்திருந்தது.
பின்னர் வாழ்த்த வந்த "மெட்ராஸ்பவன்" சிவகுமார் அவர் எழுத்துகளைப் போலவே வார்த்தைகளையும் ரசனையுடனும் ரசிக்கும்படியும் கோர்த்துத் தந்தார். விழா முடிந்த பின் தானாகவே முன் வந்து விழா சிறப்புடன் நடைபெற்றதை தன் பாணியில் "நச்" என கூறிச் சென்றார்.
புலவர் ராமானுசம் ஐயா புத்தகத்தை வெளியிட என் தந்தை பெற்றுக் கொண்டார். பின்னர் பேசிய புலவர் ஐயா ஆவிப்பா முயற்சியை வாழ்த்திவிட்டு மரபுக் கவிதை போல் புதுக்கவிதைகளும் அழகுதான் என்று கூறினார்..
பின்னர் பேசிய சுப்புத்தாத்தா "நாங்களும் இஞ்சினியர் தான்" தொடரை தான் ரசித்து படித்ததை கூறிவிட்டு அதுபோல் இதுவும் நன்றாக இருக்கும் என்று வாழ்த்தினார்..
இதுவரை அப்பாவை அருகில் பார்த்திருந்த எனக்கு ஓய்வுபெற்ற தமிழாசிரியர் தான் பேச்சிலும் அசத்த முடியும் என வைத்த கண் வாங்காமல் அவர் பேச்சை கேட்க வைத்தார்.
வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த யாரும் வாழ்த்திப் பேசலாம் என சீனு அழைத்த போது முதல் ஆளாக விருப்பம் தெரிவித்து நீண்ட உரை ஆற்றி ஆவிப்பாவுக்கு பெருமை சேர்த்தார் "இரவின் புன்னகை" வெற்றிவேல்.
கவிஞர் செல்லப்பா அவர்கள் கூறும்போது எல்லா பக்கங்களிலும் நஸ்ரியாவே ஆக்கிரமித்து இருப்பதால் இன்று இந்த புத்தகத்தை வீட்டிற்கு வாங்கிச் செல்ல முடியாதென வருத்தம் தெரிவித்தார்.. ;-)
என் எல்லா படைப்புகளையும் முதல் ஆளாக வாசித்து கருத்து சொல்லும் வாசகி என் தங்கை மேடையில் பேசியபோது மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்திருந்தேன்.
என் வேண்டுகோளை ஏற்று வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த பதிவர் அனன்யா, பதிவர் கீதா ஆகியோரும் வாழ்த்திச் சென்றனர். தான் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அண்ணனின் வெளியீட்டு விழாவுக்கு கார்த்திக்கை அனுப்பி வைத்திருந்தார் மற்றொரு தங்கை காயத்ரி. கடைசி நிமிட அழைப்பை ஏற்று விழாவுக்கு வந்து பெருமைப் படுத்தினார் கவிஞர் மதுமதி.
புத்தகம் வாங்க வந்த இடத்தில் ஆவிப்பா வெளியீடு நடப்பது கண்டு தானும் கலந்து கொண்டு வாழ்த்தி புத்தகத்தையும் வாங்கிச் சென்றார் நண்பர் "கூத்துப்பட்டறை" ராஜன்.
காற்றுக்கும் தன் காதுக்கும் மட்டும் கேட்கும் வண்ணம் பேசும் ரூபக் கூட உரத்த குரலில் ஆவியுடன் தன் நட்பு உண்டான கதையை கூறி அதிசயம் நிகழ்த்தினார். பின்னர் அவையோருக்கு நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்.
மொத்த நிகழ்ச்சியையும் ஓர் தேர்ந்த தொகுப்பாளருக்கு உரிய பாணியில் அசத்தினார் எழுத்தாளர் சீனு. ஆங்காங்கே நகைச்சுவையோடும், துள்ளலோடும் கூறிய விதம் சிறப்பாக அமைந்தது..
ஆவிப்பா நிகழ்ச்சிக்கு வர முடியாவிட்டாலும் தொலைவிலிருந்து வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி..
******************************
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றிங்க அப்பாதுரை சார்..
Deleteவணக்கம்
ReplyDeleteபதிவை பார்த்த போது மிகச் சிறப்பாக நடை பெற்றது மிக்க மகிழ்ச்சியான விடயம்... மேலும் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்..... ஆவி..அண்ணா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கு நன்றி ரூபன்..
Deleteவாழ்த்துக்கள் பாஸ் / ச்சே வாழ்த்துக்கள் பாவேந்தரே
ReplyDelete"பாவேந்தரா" - தமிழ் சங்கமே ஒண்ணா சேர்ந்து என்னை ஓட ஓட விரட்டி அடிக்க வைக்கலாம்னு பார்க்கறீங்களா? ;-)
Deleteஎழுத்தாளர் சீனு//
ReplyDeleteபயபுள்ள அமவுண்ட் கொடுத்து எழுத சொன்னானா???
ச்சேச்சே... அப்படியெல்லாம் இல்லை.. (ஐ மீன் அமௌன்ட் எல்லாம் கொடுக்கலை.. சும்மாதான் எழுத சொன்னார்..) ;-)
Deleteதக்காளி எப்படி கோர்த்து விடுறான் பாருங்க
Delete//காற்றுக்கும் தன் காதுக்கும் மட்டும் கேட்கும் வண்ணம் பேசும் ரூபக் //
ReplyDeleteகவித கவித
கவிதை இல்லப்பா ஹைக்கூ.. !! :)
Deleteவாழ்த்துக்கள் ஆவிப்பா சீச்சீ நஸ்ரியாப்பா:))
ReplyDeleteநன்றிங்க..
Deleteவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லையே என்றும் வருத்தத்தை போக்கியது பகிர்வு... வாழ்த்துக்கள் ஆவி...
ReplyDeleteஎனக்கும் அந்த வருத்தம் இருந்தது DD.. வாழ்த்துக்கு நன்றி..
Deleteபடங்களையும் விடாம, நிகழ்வுகளையும் விடாம அழகா தொகுத்திருக்கே ஆனந்து! இத... இத... இதத்தான் எதிர்பார்த்தேன்! ஸ்.பை.யும் ரூபக்கும் அன்று ஆற்றிய உரை நிச்சயம் எதிர்பாராத சர்ப்ரைஸ்தான்! முன்தயாரிப்புகள் எதுவுமின்றி வெற்றிவேல் அசத்தியதும் அனறைய தினத்தின் மற்றொரு ஆசசர்யம்! அப்புறம்... நான் ஏன் ‘வாத்தியார்’ ஆனேன்னு எனக்கே தெரியாம இருந்தப்ப, அதை மேடைல வெளியிட்டது சீனுதான், நானல்ல...! நான் ஆவிக்கும் எனக்கும் உண்டான நட்பு ஏற்பட்ட விதம், அது இறுகிய விதம் பற்றிப் பேசினேன் ஐயா!
ReplyDelete//படங்களையும் விடாம, நிகழ்வுகளையும் விடாம அழகா தொகுத்திருக்கே ஆனந்து! இத... இத... இதத்தான் எதிர்பார்த்தேன்! //
Deleteதேங்க்ஸ் ஸார்!!
//ஸ்.பை.யும் ரூபக்கும் அன்று ஆற்றிய உரை நிச்சயம் எதிர்பாராத சர்ப்ரைஸ்தான்!//
Deleteஸ்பை கூட காரில் கொஞ்சம் பேசிக் காட்டினார்.. ரூபக் தான் எனக்கு ஆச்சர்யம் அளித்தவர்.. :)
நான் ஆவிக்கும் எனக்கும் உண்டான நட்பு ஏற்பட்ட விதம், அது இறுகிய விதம் பற்றிப் பேசினேன் ஐயா!
Delete//
கரெக்ட் கரெக்ட்..
///நிகழ்ச்சியை துடிப்போடும், நகையோடும் தொகுத்து வழங்கிய நண்பன் சீனுவுக்கு என் நன்றிகள்..///
ReplyDeleteசொல்லவே இல்லியே ஆவி...! எத்தனை பவுன் நகை?
அவருடைய புன்னகைக்கு ஈடாகுமா ஏதாவது பொன்னகை?
Delete(இதுக்கு தனி பேமன்ட் தம்பி..)
இனிமேலாவது நஸ்ரியாவிடமிருந்து விடுதலை பெறுவீர்களா?
ReplyDeleteஅவ்வளவு தான் சார்.. இனி நஸ்ரியா கிடையாது..!! எத்தனை ரசிகர்கள் காணக் காத்திருப்பார்கள் ன்ற ஒரு பொறுப்பே இல்லாம பத்தொன்பது வயசுலேயே கல்யாணம் செய்துகிட முடிவு செஞ்ச அந்த பொண்ணு வேணாம்னு முடிவுபண்ணிட்டேன் சார்..:) :)
DeleteI wish I was there in coimbatore. Missed the event.
ReplyDeleteBoss, Event held in Chennai.. We missed you too.. அடுத்த பங்ஷன்ல பாத்துக்கலாம்..
Deleteகுழந்தையின் சுவற்று கிறுக்கலை, ஓவியம் என பாராட்டுவது தகப்பனின் கடமை.
ReplyDeleteசுவற்றிலிருந்துதான் பிக்காஸோ எனும் ஒவியன் தன் பயணத்தை தொடங்கினான்.
பயணத்தை தொடர்ந்து, சிகரங்களை தொடுவது தனயனின் கடமை.
சிகரம் தொட தனயனை வாழ்த்துகிறேன்.
உங்க வாழ்த்துகள் பலிக்கட்டும் சார்!! :)
Deleteகூட்டத்தில் அன்று வெற்றிவேல் பேசியதும் அதற்கான சிவாவின் பாராட்டும் (positive vibration) இன்னும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது. வாழ்த்துக்கள் ஆவி...
ReplyDeleteநன்றி ஸ்.பை.
Deletenaan இந்த vilaavirkku வருவதற்கு நிறைய முயற்சி எடுத்தும் கடைசி நேரத்தில் எனது வேலையின் தன்மை காரணமாக வர இயலவில்லை..... படங்களை பார்க்கும்போது மிஸ் செய்து விட்டோம் என்ற வருத்தம் இருந்தாலும் ஆவிப்பா உங்களை அடுத்த படிக்கு எடுத்து சென்று இருக்கிறது என்பது புரிகிறது, வாழ்த்துக்கள் ஆவி !
ReplyDeleteஆமா நண்பா, கொஞ்சம் பொறுப்புகள் கூடி இருக்கிறத இப்போ உணர்கிறேன்.. அடுத்த புத்தக வெளியீட்டுக்கு கூப்பிடறேன்.. கண்டிப்பா வந்திடுங்க.. :)
Deleteவிழாவிற்கு வரமுடியல எனும் வருத்தம் இருக்கிறது....மீன் குஞ்சுக்கு நீந்த கத்துக் கொடுக்கனுமா ? அப்பாவை சிறப்பித்த விதம் பாராட்டுக்கு உரியது.
ReplyDeleteபரவாயில்ல சார். வர முடியலேன்னாலும் அங்கிருந்தே வாழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது..
Deleteமனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் சகோதரா சிறப்பாக நிகழ்ந்து முடிந்த புத்த வெளியீட்டுக்கும் தொடரவிருக்கும் பயணத்திற்கும் .
ReplyDeleteநன்றி சகோ..
Deleteவாழ்த்துகள் ஆவி. புத்தகம் சிறப்பாக வந்திருக்கிறது.
ReplyDeleteநன்றி சார்
Deleteசிறப்பான நிகழ்வு. வாழ்த்துகள் ஆவி.
ReplyDeleteநன்றி சிவா..
DeleteThanks kku Thanks ppaaaaaaaaaaaaaa....!
ReplyDelete:)
Deleteஓவ் வார்த்தைக்கு வார்த்தை எழுத்தாளர் எழுத்தாளர் சொல்லி இருக்கிறே இத எதிர்க்கட்சிகாரன் பார்த்தா நிலைமை என்ன ஆகுறது..
ReplyDeleteஅப்போ தம்பி கட்சி தொடங்கீட்டீங்கன்னு சொல்றீங்க..
Deleteஅப்பப்பா...
ReplyDeleteஆவிப்பா...
அடேங்கப்பா...
அசத்திட்டீங்கப்பா
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
தேங்க்யு தாத்தா..
Deleteநீண்ட நெடுந்தூரத்திலிருந்து வாழ்த்துக்கள்.நிகழ்வுத் 'தொகுப்பும்' அருமை!
ReplyDeleteநன்றிங்க..
Deleteவாழ்த்துக்கள் ஆவி! விழாவுக்கு வர முடியவில்லை! ஆவிப்பாக்களை முகநூலில் படித்திருக்கிறேன்! புத்தகம் விரைவில் வாங்கி படித்துவிடுகிறேன்! மேலும் பல நூல்கள் எழுதி வளர உயர வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பா!!
DeleteVisit : http://thillaiakathuchronicles.blogspot.com/2014/02/Aavippaa-Kovaiavee.html
ReplyDeleteநன்றி DD
Deleteமிக்க நன்றி கோவை ஆவி அவர்களுக்கு! என்னால் வர இயலாத தருணமாகிவிட்டதால் என்னுடன் எழுதும் தோழி கீதா எங்கள் சார்பில் கலந்து கொண்டு விழா பற்றி எனக்கு விவரித்தார். புத்தகமும் எனக்கு அனுப்பிக் கொடுத்தார்!
ReplyDeleteபுத்தகமும் அருமை....பாக்களும் அருமை! இனிமை!
தாங்கள் இன்னும் மேலும் மேலும் வளர எங்கள் இதம் கனிந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
தங்கள் எழுத்திற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு!
மீண்டும் நன்றி!
மிக்க நன்றி நண்பரே.. உங்க வாழ்த்துகளும் ஆதரவும் ஊக்கமளிப்பதாய் உள்ளது.. :)
DeleteDD க்கு மிக்க நன்றி எங்கள் வலைத்தளத்தில் ஆவிப்பா பற்றி எழுதியதை ஆவிக்குத் தெரியபடுத்தியதற்கு!
ReplyDeleteஉங்கள் விமர்சனம் படித்து மகிழ்ந்தேன்.. மிக்க நன்றி..
Deleteவிழாவிற்கு வரமுடியாத என் போன்றவர்களுக்காக விழாவை விலாவாரியாக தொகுத்து படங்களுடன் இங்கே வெளியிட்டமைக்கு நன்றி, ஆவி!
ReplyDeleteமேலும் மேலும் பல புத்தகங்கள் எழுதி வெற்றி பெற மனமார்ந்த ஆசிகள்.
நன்றி அம்மா..
Deleteநல்ல இடுகை!
ReplyDelete+1
நன்றி பாஸ்..
Deleteமனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்..
Deleteவாழ்த்துகள் ஆவி....
ReplyDeleteநானும் அன்று விழாவில் கலந்து கொள்ள வேண்டியது - சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் முடியாமல் போனது.....
மேலும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்.
நன்றி வெங்கட் ஸார்.. கலந்துக்காட்டியும் உங்க புத்தக விமர்சனத்தில் நல்லா குறிப்பிட்டிருந்தீங்க.. நன்றி சார்..
ReplyDeleteVisit : http://wordsofpriya.blogspot.com/2014/03/blog-post_7.html
ReplyDelete