Wednesday, July 23, 2014

ஆவி டாக்கீஸ் - அஞ்சான் Music Review.
1) Bang Bang Bang - கமலுக்கு வேட்டையாடு விளையாடு வில் கிடைத்தது போல் ஒரு அருமையான இன்ட்ரோ ஸாங்.. ரிப்பீட் மோடில் போட்டு கேட்டு ரசிக்கலாம்.. ரஞ்சித் கம்பீர குரலில் அசத்தியிருக்கிறார்..

2) ஒரு கண்ஜாடை - காதல் பாடல் பாஸ்ட் பீட்டில்.. பென்னி தயாள் உச்சஸ்தாயியில் காதலை அலற விட்டிருப்பதும் ஸ்வேதா பண்டிட்டின் மென் குரலும் ஓரிரு கேட்டலுக்கு பின் பிடிக்கிறது.. பயணத்தில் அலுப்பின்றி கேட்க சிறந்த பாடல்.

3) சிரிப்பு என் - மானசியின் கவர்ச்சிக் குரலில் ஒரு ஐட்டம் நம்பர்.. சி சென்டர் ரசிகர்கள் ரசித்து மகிழ..

4) ஏக் தோ தீன் - சுமார் ரகம்.. சூர்யா சொந்தக் குரலில் பாடியிருக்கும் பாடல்.. ரஜினி, கார்த்தி, குரல்களோடு ஒப்பிடுகையில் நல்லாவே பாடியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.. அவர் "உயரம்" தெரிந்து தொடர்ந்து பாடாமல் இருப்பது அவருடைய இமேஜுக்கு நல்லது.. ஆண்ட்ரியாவின் குரலில் இது போன்ற பல பாடலை கேட்டு விட்டதால் அவ்வளவாக சிறப்பு ஏதுமில்லை. ஆனால் தியேட்டரில் ரசிகர்களின் ஆர்பாட்டம் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும்..

5)  காதல் ஆசை - ஆல்பத்தின் சிறந்த பாடல்.. யுவனின் குரலில் ஜில்ஜில் மெலடி.மொத்தத்தில் Yuvan Back with a Bang!!


*********** **************

Friday, July 18, 2014

ஆவி டாக்கீஸ் - வேலையில்லா பட்டதாரி


இன்ட்ரோ  
                           ஆதர்ச நாயகன் தம் அடிக்கலாமா? தண்ணி அடிக்கலாமா? ரசிகர்களை கெடுத்து விடாதா என்று மக்கள் கேட்கக் கூடும். அந்த இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கேரக்டருக்கு தேவை என்ன என்பதை மட்டும் பார்த்து நடிப்பது சிறப்பு.. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு தான் போவேன் என்று அமர்ந்திருந்தால் நாட்டில் நிறைய வி.ஐ.பிக்கள் அதிகரித்துவிடுவர். இந்தப் படத்தை இரண்டு மணி நேர பொழுதுபோக்காய் மட்டும் பார்த்தால் இன்ஜினியர்களுக்கு நலம் பயக்கும்.


                          
கதை
                             வேலை கிடைக்கவில்லை என்பதற்கு காரணம், தான் படித்த துறையிலேயே வேலை கிடைக்க வேண்டும் என்று காத்திருப்பது தான். கிடைத்த வேலையை பார்த்து வாழ்வில் முன்னேறியவர்களையும், உடன் பிறந்த தம்பியையும் கூட போட்டியாக நினைக்கும் ஒரு  வி.ஐ.பி, தன்னுடைய சொந்த கம்பெனி என்ற போதும் மகனை உடனே வேலைக்கு அமர்த்தாமல் அனுபவம் கிடைத்த பின் பணியில் அமர்த்தும் ஒரு பிஸினஸ்மேனுடன் மோதி அவனுக்கு கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவது எப்படி என உணர்த்தும் கதை/ லாஜிக் நிச்சயம் புதுசு கண்ணா புதுசு.! 

                             இப்படி வெட்டியாக பக்கத்து வீட்டு ஆன்ட்டியுடன் சீரியல் பார்க்கும் ஒரு துடிப்பான பையனை லவ்வ ஒரு லூஸு ஹீரோயின் வேண்டுமே.. அதுவும் இருக்கிறது..! இப்படி எதுவுமே சரியாக இல்லாத ஒரு கதையை ரசிக்க வைப்பது இசையும், தனுஷின் இயல்பான நடிப்பும்..!

        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                            தனுஷ்- தன்னை மட்டுமே நம்பி எடுத்திருக்கும் படம். முதல் பாதியில் ஈகோ இல்லாத ஹீரோயிசம்.. (உதாரணம் : சரண்யாவின் கையால் விளக்குமாறால் அடி வாங்குவது.) காமெடி, ரோமென்ஸ், ஹீரோயிசம் சரிவிகிதத்தில் கலந்து ஆடியன்ஸை திரையிலிருந்து கொஞ்சம் கூட கண்ணிமைக்காமல் ரசிக்க வைத்தது தனுஷின் அசத்தல் நடிப்பு. இருபத்தி ஐந்தாவது படத்தில் இவ்வளவு மெச்சூர்டாக நடிக்கும் இவர் தன் ஐம்பதாவது படத்திற்குள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு தன்னை தகுதியாக்கிக் கொள்வார் என்ற நம்பிக்கை கொடுக்கிறார். அமலா பால்- மைனாவிற்கு பிறகு கொள்ளை அழகு பிளஸ் நடிப்பு. இவர் திருமணத்துக்கு பின்னும் நடிக்கலாமே என்று யோசிக்கும் போதே இரண்டாம் பாதியில் வரும் பாடல் அது தவறு என நமக்கு உணர்த்திவிடுகிறது.

                              சமுத்திரகனி - நடுத்தர வர்க்க அப்பாவை ஜெராக்ஸ் எடுத்து வைத்தது போல் இருக்கிறார். "என்ன இருந்தாலும் நீ அடிச்சிருக்க கூடாது" என்று சரண்யாவிடம் சொல்லும்போது நெகிழ வைக்கிறார். சரண்யா இதிலும் அம்மா கேரக்டர் தான். ஆனால் இதிலும் போர் அடிக்கவில்லை.. அதிலும் இரண்டாம் பாதியில் இவர் கண்களை வியர்க்க வைக்கிறார். வில்லனைப் பார்த்து தனுஷ் - உன்னை  பார்த்த வில்லன் மாதிரியே இல்லன்னு சொல்வார்.. நமக்கும் அதே பீலிங் தான்.

இசை- இயக்கம்
                             அனிருத்தின் இசைதான் படத்தின்  முதல் ஹீரோ, இரண்டாம் பாதியில் ரசிகன் தூங்கி விழும்போதெல்லாம் அடிவயிற்றில் பசியோடு, அரை மணி நேரம் காத்திருந்தவன் "பரோட்டா எங்கடா" என்று கேட்கும் தொனியில்  "வேலையில்லா பட்டதாரி" என்று அலறி எழுப்பி விடுகிறார். பாடல்கள் படத்திற்கு பலம்.. வேல்ராஜ் இயக்கம் ஒக்கே.. முதல் பாதியில் ரேஸ் காரில் பயணம் செய்துவிட்டு பெட்ரோல் காலியாகிவிட இரண்டாம் பாதியில் கரகாட்டக்காரன் வண்டியில் ஏற்றி விடுகிறார். "Poetu" தனுஷ் மனதில் இடம் பிடிக்கிறார். 


                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                அம்மா பாடல், போ இன்று நீயாக, ஊதுங்கடா சங்கு எல்லாம் அருமை - பாடல் மற்றும் படமாக்கிய விதம். தனக்கு முதல் ப்ராஜெக்ட் கிடைத்ததும் மொட்டை மாடியில் அமர்ந்து தனுஷ் நடிக்கும் காட்சி சிறப்பு.

                            ஹீரோ தான் பெரிய இஞ்சினியர் என்று ப்ரூவ் பண்ணுவது பக்கத்து வீட்டு பிகரின் பெட்ரூமை எட்டிப் பார்க்க டெலஸ்கோப் செய்வதிலும், மொட்டை மாடியில் கூரை வீடு கட்டுவதிலும் தான்!!  அவ்வளவு பெரிய ப்ராஜெக்ட், அஸ்திவாரம் போட்டு பில்லர் எழுப்பி RC போடும் வரை தவறாக இருப்பதை கண்டுபிடிக்காதது நிச்சயம் ஒரு நல்ல இஞ்சினியருக்கு அழகல்ல.. இந்த லாஜிக் எல்லாம் மறந்துவிட்டு பார்த்தால் வி.ஐ.பி அடுத்த வீட்டுப்பையன்..!                   Aavee's Comments -  One Man Show!

Sunday, July 6, 2014

ஆவி டாக்கீஸ் - தொட்டால் தொடரும் (Music Review)

                          "துவார்" சந்திரசேகர் தயாரிப்பில் கேபிள் சங்கர் இயக்கி, தமன் அருந்ததி நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் "தொட்டால் தொடரும்". டைகர் ஆடியோஸ் வெளியிட்டிருக்கும் இந்த ரொமேன்டிக் த்ரில்லர் படத்தின் ஆடியோ சமீபத்தில் சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இதன் பாடல்கள் எப்படியிருக்குன்னு பார்ப்போம்..
1. படத்தின் டீசராய் முன்பே வெளிவந்து மக்களின் அபிமானத்தை பிடித்த பாடல் "Bossu Bossu".  இயந்திரமயமாகிவிட்ட உலகில் தான் தன் சுகம் என்று வாழப் பழகிவிட்ட மனிதர்களையும், சமூக அவலங்களையும் கேஷுவலாக சொல்லும் பாடல்.. அந்தோணி தாசன் குரல் பாடலுக்கு பெரிய ப்ளஸ். சாக்ஸபோனில் ஆரம்பித்து, ட்ரம்ஸ், கீபோர்ட் என ஒரு கலக்கல் ஜுகல்பந்தி வைக்கிறார் இசையமைப்பாளர் பி.சி. சிவன். முதல் முறை கேட்கும்போதே எல்லோரையும் ஈர்க்கும் பாடல்.

2. பூப்போல..பூப்போல - கணேஷ் வெங்கட்ராமன், பத்மலதா பாடியிருக்கும் டூயட் பாடல். பாடலின் வரிகளை சிறிதும் பாதிக்காத வண்ணம் ஒலிக்கும் இசை கேட்பதற்கு இசைவாய் உள்ளது. ஆயினும் பாடல் படமாக்கிய விதத்தில் தான் ரசிகன் தியேட்டரில் அமர்ந்து கேட்பதும், கேண்டீனில் பப்ஸ் வாங்க செல்வதும் இருக்கிறது.

3. Kiss of the Fate - இசையமைப்பாளர்கள் தங்கள் படங்களில் ஒரு பாடல் பாடும் கலாச்சாரம் இதிலும் தொடர்கிறது. பி.சி. சிவன் தானே இசையமைத்து பாடிய பாடலிது. இரண்டரை நிமிடமே ஒலிக்கும் இந்த மெலடி தாளம் போட்டு ரசிக்கும்படி உள்ளது.. புதிதாய் காதல் பூத்த ஒருவனின் மனத்துள்ளல் இசையின் அசைவில் துளிர்ப்பதை காணலாம்.

4. காரத்திக், வந்தனா ஸ்ரீநிவாசன் குரல்களில் வசீகரிக்கும் பாடல் "பெண்ணே.. பெண்ணே". காதலில் விழுந்த நாயகனும் நாயகியும் காதலால் உண்டான கெமிஸ்ட்ரி மாற்றங்களை பகிர்ந்து கொள்ளும் பாடல். ஒக்கே ரகம்.

5. "யாருடா மச்சான்" - ஆல்பத்தின் அசத்தல் பாடல். பண்பலைகளில் இனி சில மாதங்கள் முதலிடம் பிடிக்கப் போகும் பாடல். சத்யபிரகாஷ், வந்தனா ஸ்ரீநிவாசன் பாடியிருக்கும் இளமை துள்ளும் பாடல். சாமி படத்தில் வரும் "அய்யய்யோ பிடிச்சிருக்கு"  பாடலின் சாயல் ஆங்காங்கே தெரிந்தாலும் பாடல் இனிமையாக இருக்கிறது..

"காதல் என்ன தாய்ப்பாலா அழுதவுடனே கிடைக்க.. 
                காதல் என்ன கடலலையா ஓடிவந்து ஓடிவந்து காலை நனைக்க.."

                போன்ற வரிகள் பாடலை மெருகேற்றுகிறது..  

6. Kiss of the Dragon  (தீம் மியூசிக்) -  விறுவிறுவென ஹைபிட்சில் ஒலிக்கும் இசை நிச்சயம் பின்னணியில் நம்மை ரசிக்க வைக்கும்.


                     மொத்தத்தில் "தொட்டால் தொடரும்" இசை தொடர்ந்து கேட்க வைக்கிறது..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...