கிராபிக்ஸ் கலக்கல் : 'வாத்தியார்' பாலகணேஷ்
300 வது பதிவு:
இதுவரையிலும், இனிமேலும் எனக்கு ஆதரவு கொடுக்கும் எனது வாசக கண்மணிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். முன்னூறு பதிவுகளில் முத்தான பதிவு என்று வாசகர்களால் பாராட்டப்பட்ட பதிவுகள் ஒரு எழுபத்தி ஐந்திலிருந்து நூறு வரை நிச்சயம் இருக்கும். ஆவி டாக்கீஸ் (சினிமா), ஆவி's கிச்சன் (சமையல்), பயணத்தின் சுவடுகள் (பயணக் கட்டுரை), தொடர்கதைகள், சிறுகதைகள், விளையாட்டு, அனுபவம் என எழுதிய என் தளத்தில் அரசியல் பதிவுகளை இதுவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு காரணம் அரசியல் பிடிக்காது என்பதல்ல.. அரசியல் தெரியாது என்பதே காரணம் என தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். 300 ன்னு சொன்னதும் அட்டகாசமா ஆவி ட்ரிபிள் செஞ்சுரி போட்ட படத்தை கற்பனை செய்து வரைந்து கொடுத்த வாத்தியாருக்கு டேங்க்ஸு..!
ஆவி (ஆனந்த விகடன் அல்ல!) வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி..!
. ஆவிப்பா புத்தகத்தினை அமெரிக்காவில் விற்பனை செய்யும் உரிமத்தினை பெற்றுக் கொண்டதோடு, ஆவிப்பாவின் விற்பனை வரலாற்றிலேயே அதிக பிரதிகளை வாங்கிக் கொண்டு அமெரிக்கா செல்லும் அன்பு நண்பன் CJ என்று எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் Jayaraj Chandrasekaran அவர்களின் அமெரிக்க பயணம் சிறப்பாய் அமைய வாழ்த்துகள். அமெரிக்க வாழ் நண்பர்கள் சிலருக்கு மட்டும் தான் இந்த முறை அனுப்ப முடிந்தது.. அடுத்த முறை மீதமுள்ள நண்பர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.. ஆவிப்பாவை வாசிக்க விருப்பமுள்ள நண்பர்கள் "ஆ" ன்னு ஒரு குரல் கொடுங்க, அனுப்பி வைக்கிறேன்.. :)
சமீபத்தில் ரசித்த பாடல் வரிகள்:
எழுதியவர்: பா.விஜய்
படம் : யான்
"ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்கள்
ஒன்றாகவே சிலிர்க்கும் நீ பார்வை ஒன்றை வீசினாலே
நியுரான்களும் சிணுங்கும், புரோட்டான்களும் மயங்கும்
என் பெண்மையும் கிறங்கும் நீ முத்த வார்த்தை பேசினாலே"
அவள் பறந்து போனாளே:
கோடை வெயிலில் சுடும் மணலில்
யாருமில்லா பாலை வன தேசத்தில்
நா வறண்டு போயிருந்த எனக்கு
தாகம் தணிக்க வந்த நீர்ப் பரப்பாய்
நீ என் கண்ணில் தெரிய,
வறண்ட இதழ்களை நனைத்துக் கொள்ள,
ஆசை தீரப் பருகிக் கொள்ள,
வெட்கம் நாணம் விட்டு, கரணங்கள் பல போட்டு
உனை நெருங்கி நான் வந்த நேரம் தான் உணர்ந்தேன்
நீ பசி மாற்றும் பொய்கையல்ல,
எனை ஏமாற்றும் கானல் நீரென்று..!
நக்கல் கார்னர்:
இப்போ வர்றேன் அப்போ வர்றேன் ன்னு அவர் அரசியல் பிரவேஷம் மாதிரியே அவர் படமும் "பாச்சா" காட்டிகிட்டு இருக்குது. இப்போ படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு "கோச்சா பீம்" என்ற பெயரில் வெளிவர இருக்கிறதாக தகவல். (லேட்டஸ்டும் இல்லே அப்புறம் ஏன் லேட்டு? #டவுட்டு)
கொசுறு: இந்த படத்துடன் வெளியிட பயந்து மே 23 அன்று வெளியாகவிருந்த மற்ற படங்கள் பின்வாங்கிவிட்டன.. பின்ன இதுகூட போட்டி போட்டா டேமேஜ் யாருக்கு?
சூப்பர்ய்யா....
ReplyDeleteஇப்படி பொதுவுல சூப்பர் ன்னு சொன்னா எதுக்குன்னு எடுத்துக்கறது நண்பா? :)
Deleteஅருமை!!
ReplyDeleteநன்றி ஐயா!
DeleteCongrats Aavee !! All your posts are really good and I enjoyed reading it !! Wishing you to soon touch the 500 mark !
ReplyDeleteதேங்க்ஸ் நண்பா!!
Deleteமகிழ்வான நல்வாழ்த்துகள் ஆனந்து! அவள் பறந்து போனாளே கவிதை சூப்பர்ப். யான் படப் பாடல் வரிகளும் ரசனை. தொடர்ந்து அடித்து ஆடி பல செஞ்சுரிகள் குவிக்க மீண்டும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
ReplyDelete//அவள் பறந்து போனாளே கவிதை சூப்பர்ப். // கவிதைன்னு ஒத்துகிட்டதுக்கு நன்றி..
Delete//. தொடர்ந்து அடித்து ஆடி பல செஞ்சுரிகள் குவிக்க மீண்டும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.// எல்லாம் உங்க ஆசிர்வாதங்களோட தான் ஸார்..
"ஆ" ன்னு ஒரு குரல் கொடுங்க, அனுப்பி வைக்கிறேன்.. :)
ReplyDeleteபடிச்சு முடிச்சோன்ன ஆஆஆஆஆஆ ன்னு கத்துபவர்களுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைப்பீங்களா ஆஆஆஆஆஆஆஆஆவி பாஸ் ? // டவுட்டு :)
அ.ப.போ- கவித கவித ...
முன்னூறு - அடிபொலி அடிபொலி ...
ஜீவன் சுப்பு ...இந்த ஆஆஆஆ ல உள்குத்து இல்லியே
Deleteநல்லவேளை ஆம்புலன்ஸ் மட்டும் கேட்டீங்க.. !
Deleteசதீஷ் உள்குத்து இல்லாட்டியும் எடுத்து குடுப்பீர் போலிருக்கே
Deleteபிரமாதம்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி DD
Deleteமுன்னூறு .....வாழ்த்துக்கள் ஆவி.
ReplyDeleteநன்றி சதீஷ்
Deleteமுன்னூறு அடித்ததற்கும் பல ஆயிரம் பதிவுகள் எழுதுவதற்கும் வாழ்த்துக்கள்... அவள் பறந்து போனாளே கவிதை சூப்பர்....
ReplyDeleteநன்றி ஸ்.பை
Deleteவாழ்...வாழ்த்து...வாழ்த்துக்கள்!
ReplyDeleteதேங்க்ஸ் பாஸ்..
Deleteமுன்னூறாவது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநன்றி அம்மா
Deleteவாழ்த்துக்கள் ஆவியாரே.. எல்லாம் ஓகே பதிவுலக கிசுகிசு எப்போ எழுதப் போகிறீர்...
ReplyDeleteஇந்த வெற்றியை ஒருவார வெ(ற்)றி விழாவாக கொண்டாடியிருக்க வேணாமா என்ன :-)
கிசுகிசுவா நல்ல ஐடியாவா இருக்கே.. சீனு-கலா கிசு கிசுல இருந்து ஆரம்பிக்கவா? ;-)
Deleteவெற்றி விழா எல்லாம் ஐந்நூறுக்கு எடுத்திடலாம்..
Delete300-வது பதிவிற்கு வாழ்த்துகள் ஆவி......
ReplyDeleteமேலும் பல அசத்தலான பதிவுகள் வெளியிட வாழ்த்துகள்.
நன்றி சார்
Deleteகிளிக்கிக் கண்டேன் கிராபிக்ஸ் கலக்கல் ..இருவருக்கும் பாராட்டுக்கள் !
ReplyDeleteத ம 6
தேங்க்ஸ் ஜி..
Deleteவாழ்த்துகள் அண்ணா... கொஞ்ச நாள் இந்த பக்கம் எட்டி பாக்காம இருந்துட்டு எப்படி டக்குன்னு உங்க 300-வது பதிவுல வந்தேன் பாத்தீங்களா?
ReplyDeleteஇன்னைக்கு பாலகணேஷ் சார் தளத்துல உன் கமென்ட் பார்த்துட்டு எங்க என் சைட்டுக்கு மட்டும் தங்கச்சி வரலேன்னு கேக்கலாம்னு இருந்தேன்.. வந்தாச்சு.. அண்ணாச்சி ஹேப்பி.. :)
Delete300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களைப்போன்ற இளைஞர்கள் அரசியல் தெரியாது, புரியாது என்று சொல்லலாமா?
உங்கள் கவிதைப் புத்தகம் அமெரிக்காவிலும் கொடிகட்டிப் பறக்கப் போகிறது என்று அறிய மகிழ்ச்சி!
நன்றி அம்மா..
Deleteஅரசியல் இதுவரை ஈடுபாடு காட்டலை.. இந்தமுறை தான் கொஞ்சமா கவனிச்சுட்டு வர்றேன்.. :)
300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! கடைசியில் ரஜினி பட குறும்பு ரொம்பவே கலக்கல்!
ReplyDeleteநன்றி நண்பா..
Delete300 க்கு வாழ்த்துக்கள் நண்பா நீங்கள் இன்னும் அடைய வேண்டிய வெற்றிகள் நிறைய இருக்கிறது
ReplyDeleteஆமா நண்பா.. நீங்க எல்லாம் உடனிருக்கும் போது எவ்வளவு தூரம் வேணும்னாலும் போகலாம்.. :)
Delete300-ஆவது பகிர்(திவு)வுக்கு வாழ்த்துக்கள்,ஆ.வி.சார்!நிழற்குடை நன்று!///எனக்கும் தான் 'அவ' பறந்து போனது "சோகம்"!அதுக்காக,(ஆவி)'பா' எல்லாம் நான் எழுதுறதா இல்ல!ஏன்னா...........நான் ஆ.வி. இல்ல,ஹ!ஹ!!ஹா!!!#கவித சூ..ஊ..ஊ..ஊ....ப்பர்!
ReplyDeleteநன்றிங்க..நீங்களும் எழுதுங்களேன்.. "ஆவியே" எழுதும் போது நீங்க எழுத முடியாதா.. ஹஹஹா :)
Delete300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்§ ஆவிப்பா பாரிசுக்கும் வருமா பறந்து உருகி!ஹீ
ReplyDeleteஆஹா.. பாரிசுக்கா.. ஆவிப்பா கடல் கடந்து போறதுல மகிழ்ச்சிதான்.. உங்க முகவரி சொல்லுங்க.. அனுப்பறேன். :)
Deleteஆஹா! கிரிக்கெட் மட்டையுடன் நிற்கும் தங்கள் முகம் சேர்க்கப்பட்ட படம் அருமை! வாழ்த்துக்கள்! ஆவி! இன்னும் மேலும் மேலும் தங்கள் எழுத்துகள் பவனி வர வேண்டும்!
ReplyDeleteஆவிப்பா அமெரிக்கா செல்லுவது குறித்து மிகவும் சந்தோஷம்! அமெரிக்கா மட்டுமல்ல எல்லா நாடுகளுக்கும் பயணிக்கட்டுமே!
"ஆ" என்று சொல்லுங்கள் 'வி'ஷ் கென்று அனுப்பி வைப்பார் ஆவி?!!!
நஸ்ரீயா கவிதைகள் இன்னும் முடியவில்லையா ஆவி!!?!!