ஏப்ரல் 26 வரையிலான போட்டிகளின் முடிவில் அணிகளின் நிலவரம்...
* விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிய ஒரே அணியாகவும் முதலிடத்திலும் மொஹாலி தற்சமயம் உள்ளது.
* பெங்களூரு டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதே இதுவரை அதிக விக்கெட் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம். (பெங்களூரு ராஜஸ்தானுக்கு எதிராக எடுத்த 70 ரன்களே இந்த வருடத்தில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராகும்)
* சென்னை டெல்லியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே அதிக ரன்கள் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம்.
* சென்னை எடுத்த ரன்களை 205 ஓவர்டேக் செய்து மொஹாலி எடுத்த 206 ரன்களே அதிகபட்சமாக ஒரு அணி குவித்த ரன்கள்.
* பேட்டிங்கில் மொஹாலியின் மேக்ஸ்வெல் 294 ரன்களுடன் முதலிடத்திலும், ஸ்மித் 174 ரன்களுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.
* மேக்ஸ்வெல் சென்னைக்கு எதிராக அடித்த 95 ரன்களே ஒரு வீரர் அதிகபட்சமாக அடித்த ரன்கள்.
* அதிக சிக்ஸர்கள் (17) மற்றும் அதிக பவுண்டரிகள் (30) அடித்து மேக்ஸ்வெல் முன்னிலையில் உள்ளார்.
* அதிக முறை டக் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கம்பீர் (3) உள்ளார். (நான்கு போட்டிகளில் இவர் எடுத்த மொத்த ரன்(கள்) ஒன்றே ஒன்று..)
* அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் கொல்கட்டாவின் சுனில் நரேன் ஒன்பது விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
* ஒரே ஆட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் பாலாஜி முதலிடம் பிடித்துள்ளார். (பதிமூன்று ரன்கள் கொடுத்து நாலு விக்கெட்டுகள்)
* அதிக விக்கெட் வீழ்த்திய கீப்பர்கள் வரிசையில் பெங்களூரின் பார்த்திவ் பட்டேல் தலா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் (நான்கு விக்கெட்டுகள்)
* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ரெய்னா அதிக கேட்சுகள் பிடித்தவர் வரிசையில் முதலிடம் பெறுகிறார். இவர் ஐந்து கேட்சுகள் பிடித்துள்ளார். ( கொல்கட்டாவின் க்றிஸ் லின் பெங்களூருக்கு எதிராக பிடித்த ஒரு கேட்ச்சே இந்த ஐ.பி.எல்லின் சிறந்த கேட்ச்சாக உள்ளது)
* அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை கொல்கட்டாவின் காலிஸ், மனிஷ் பாண்டே ஜோடி மும்பைக்கு எதிராக இரண்டாவது விக்கெட்டுக்கு இவர்கள் எடுத்த 131 ரன்கள் மூலம் தக்க வைத்துள்ளனர்.
மூன்று போட்டிகளிலும் மோசமாக தோற்ற மும்பை, ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள ஹைதிராபாத் மற்றும் டெல்லி அணிகள் மேலும் புள்ளிகள் எடுக்க போராட வேண்டும்.
சிறப்பாக துவங்கி பின் இரு போட்டிகளில் சரிவைக் கண்ட பெங்களூரு பேட்டிங்கில் கெயிலை களமிறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கொல்கட்டாவும், ராஜஸ்தானும் தலா இரு போட்டிகளில் வென்று இரண்டில் தோல்வி கண்டுள்ளது. இவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் கவனமாக விளையாட வேண்டும்.
சென்னை சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மொஹாலி ப்ரீத்தி ஜிந்தா கொடுக்கும் உற்சாகத்திலும் (?!!) மேக்ஸ்வெல்லின் அதிரடியிலும் முதலிடத்தில் உள்ளது.
இது முதல் பத்து நாட்களின் நிலவரம் மட்டுமே. அடுத்த வாரம் இன்னும் சில போட்டிகளின் முடிவுகளுடன் அட்டவணையை பார்ப்போம்.. வர்ட்டா..
நன்றி: ESPNCricinfo