விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடிக்க கலைப்புலி தாணு வழங்கும் அரிமா நம்பி. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நமக்கு மிகவும் பரிச்சயமான "டிரம்ஸ்" சிவமணி தாங்க. முதல் முறை ஒரு திரைப்படத்திற்கு சிவமணி இசையமைக்கும் பாடல்கள் எப்படி இருக்குன்னு பார்ப்போம்.
2. ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கும் " நீயே..நீயே.." பாடல் தெவிட்டாத தெள்ளமுது. 'அதிரடி' மன்னன் சிவமணியிடமிருந்து இப்படி ஒரு மெல்லிய இசை நிச்சயம் சர்ப்ரைஸ் கிப்ட் தான். ஆனால் இந்தப் பாடல் அம்மணி முன்பு பாடியே 'சகாயனே' பாடலின் சாயலில் இருக்கிறது.
3. "நானும் உன்னில் பாதி" - அல்மா மற்றும் ரீட்டா பாடியிருக்கும் ஐட்டம் நம்பர். கிறக்கத்துடன் ஒலிக்கும் இந்தப் பாடலின் இடையில் 'ஊலலல்லா' பாடலுக்கு இடையே வரும் டிரம்ஸ் போலவே இதிலும் வருகிறது. ஹோம் தியேட்டரில் கேட்டு மகிழ நல்ல இசைக் கலவை அது.
4. ஷப்பிர் குமார், ரிஸ்வி இணைந்து பாடியிருக்கும் "யாரோ யார் அவள்" - தன் மனம் கவர்ந்த பெண்ணை பற்றி நாயகன் பாடும் பாடல். மற்ற படங்களுக்கு சிறப்பாய் டிரம்ஸ் வாசித்த சிவமணி தான் இசையமைக்கும் படத்துக்கு என்ன செய்வார்? இந்தப் பாடலும், பாடல் நெடுக ஒலிக்கும் டிரம்ஸ் இசையும், யூத் ரசிகர்களின் மனம் கவரும் வகையில் இருக்கிறது.
A.R. ரஹ்மானின் பல படங்களுக்கு உயிரூட்டியது சிவமணியின் இசை. இந்தப் படத்தில் இவர் செய்திருக்கும் தனி ஆவர்த்தனம் நிச்சயம் ரசிகர்களால் பாராட்டப் படக்கூடும். இன்னும் பல நல்ல ட்யூன்களோடு வந்து முன்னணி இசையமைப்பாளர்களுக்கு போட்டியாய் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. மொத்தத்தில் அரிமா நம்பி- அதிரடி.
தங்களின் எழுத்துக்கள் பாடலைக் கேட்கத் தூண்டுகின்றன
ReplyDeleteநன்றி
நன்றி ஸார்!
DeleteA.R. ரஹ்மானின் பல படங்களுக்கு உயிரூட்டியது சிவமணியின் இசை//// ஏ,ஆர்,ஆர். எப்போ டைரக்டரானார்... அவர் படத்துக்கு சிவமணியின் இசை உயிரூட்ட? ஒரு வேளை அவரின் இசைக்கு சிவமணி உயிரூட்டியிருப்பாரோ.... இல்ல... சிவமணியின் இசை ஏ.ஆர்.ஆர் பாடல்களுக்கு உயிரூட்டியதுன்னு சொல்ல வர்றியா...? என்னமொ போடா கணேஷா...... உனக்கு மூளை குழம்பிடுச்சு...!
ReplyDeleteஇரண்டாவது பாடல் வியப்பு... ரசிக்க வேண்டும்...
ReplyDeleteவணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///பாடல்கள் பற்றிய விமர்சனம் நன்று!சிவமணி இசையா?கேட் /பார்ப்போம்.
ReplyDeleteதலைவி பாட்ட உடனே கேட்கவேண்டும் ....
ReplyDeleteடிரம்ஸ் இசைக்காக கேட்க வேண்டும்..... கேட்கிறேன்.
ReplyDeleteஅட சிவமணியின் இசையா.... நிச்சயம் கேட்க வேண்டுமே!
ReplyDeleteஅரிமா நம்பி - படத்தின் பெயரும் வித்தியாசமாய்....