Saturday, April 12, 2014

ஆவி டாக்கீஸ் - நான் சிகப்பு மனிதன்


இன்ட்ரோ  
                 "நார்கோலெப்சி" ங்கிற புது பாட்டிலில் பழைய சரக்கை ஊற்றி தங்கச்சிக்கு பதில் காதிலியை ரீப்ளேஸ் செய்து அதே "நான் சிகப்பு மனிதன்" என்ற பழைய பெயரிலேயே உரிமம் பெறாமல் "இன்ஸ்பயர்" செய்து (அந்த சொதப்பல் பிளாஷ்பேக்கை தவிர்த்து) வெளிவந்திருக்கிறது. "சமர்" திரைப்படம் தோல்வியடைந்ததற்கு காரணம் மக்கள் ஏற்றுக் கொள்ளாத அந்த கடைசி ட்விஸ்ட்.. இயக்குனர் திரு இந்தப் படத்திலும் அதே தவறை செய்திருக்கிறார். பாலிவுட்டில் வந்திருக்க வேண்டிய படம், நிச்சயம் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது கடினம்.



கதை         
                  அதிக அளவில் எந்த உணர்ச்சியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தூங்கிவிடும் "நார்கோலெப்சி" நம் நாயகனுக்கு. சிறு வயதில் விளையாட்டாய் எடுத்துக் கொண்டாலும் பின் மற்ற மனிதர்கள் சாதரணமாக செய்யக் கூடிய எந்த வேலையையும் தன்னால் தனித்து செய்வது கடினம் என்று உணரும் வயதில் வேதனைப்படுகிறார்.. வேலை கிடைக்காமல் அலையும் இவர் தன் குறைபாட்டையே பாசிட்டிவாக மாற்றி வேலை வாங்குகிறார். இவர் மேல் முதலில் பரிதாபப்படும் நாயகி பின் காதல் வயப்படுகிறார். நாயகனின் தூங்கும் வியாதியால் தன் குடும்பத்துக்கு ஒரு வாரிசு உண்டாகாது என்பதால் நாயகியின் தந்தை இவரை ஒதுக்குகிறார். நாயகி விடாமல் நாயகனின் பின்னால் சுற்றி (செக்ஸ் மட்டுமே வாழ்க்கை அல்ல என்று கூறியபடியே) நாயகன் உறங்காதிருக்கும் தருணம் கண்டறிந்து (?!!) கருவை பெற்றுக் கொள்கிறார். இருவரும் காரில் வெளியே சென்ற ஒரு நாளில் திட்டமிட்டு வழிமறிக்கும் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு கோமா நிலைக்கு செல்கிறார். உடனிருந்தும் தடுக்க இயலாமல் நாயகன் உறக்கத்தில். இங்க இன்டர்வெல்.. (பாப்கார்ன் சாப்பிட போன பாதி பேர் திரும்ப வரலேங்கிறது தனி கதை)

                      உறக்கத்திலிருந்து எழுந்த நாயகன் காதில் சோனி ஹெட்போனை மாட்டிக் கொண்டு தன் குறைபாடு வெளியே வராமல் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு வில்லனையும் தேடித் தேடி கொல்கிறார். இங்கதான் டைரக்டர் வச்சாரு ஒரு ட்விஸ்டு.. இந்த வில்லன்களை இப்படி செய்யச்சொல்லி அனுப்பியது யார் என்பது.. அது நாயகனுக்கு முன்பே தெரிந்துவிட்ட போதும் கிளைமாக்ஸ் வரும் வரை பொறுத்திருந்து அவரையும் கடைசியாக கொன்றுவிட்டு கோமாவில் கிடக்கும் காதலியோடு படுத்துக் கொள்கிறார். ஒரு உலக சினிமா பார்த்த திருப்தியோடு வெளியேறும் ஒவ்வொரு ரசிகனுக்கும் தியேட்டர் தன் செலவிலேயே காதில் வழியும் "சிகப்பை" துடைத்துக் கொள்ள பஞ்சையும் ஒவ்வொருவரும் அணிந்து கொள்ள "நான் சிகப்பு மனிதன்" பேட்ஜும் கொடுத்து அனுப்புகிறார்கள்.
                 

ஆக்க்ஷன் 
                       விஷால் சொந்தக் காசில் இந்த "ரெட்" மேஜிக்கை செய்து கொண்ட போதிலும் படத்தில் அவருடைய நடிப்பை நிச்சயம் பாராட்ட வேண்டும். குறிப்பாக மருத்துவக் கல்லூரியில் அவர் தன் குறைபாட்டை பற்றி பேசும் போது மனதை வருடுகிறார். லக்ஷ்மி மேனன் பரபரப்பை கிளப்பிய அந்த முத்தக் காட்சியை தவிர (அதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்ல) வேறொன்றும் செய்யவில்லை. சரண்யா இதிலும் ஹீரோவுக்கு அம்மா.. ஆனா முதல் முறை லக்ஷ்மி மேனனை விஷால் வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியில் அடடா,, அடடடா..!

                         ஜெகன் ஒக்கே.. சோலோ காமெடியனாக இது பத்தாது.. சுந்தர் சர்ப்ரைஸ் பேக்கேஜ் என்று நினைத்து சேர்க்கப்பட்ட கார்பேஜ். படத்தின் குருக்கேலும்பு இனியா.. கதையின் முக்கிய திருப்பம் கொடுப்பவர்.. அம்மணி, நீங்க இப்படியே நடிச்சிட்டு இருந்தா அப்புறம் விஷாலின் லிஸ்டில் நாலாவதா இருக்கிற முதல் நாள் முதல் ஷோ படத்தில் தான் அபிநயிக்க வேண்டி வரும். ரிஷி லோக்கலில் வாழும் பாரின் மாப்பிள்ளை ரோல். ஜெயபிரகாஷும் இந்தப் படத்தில் இருக்கிறார். முதல் காட்சியில் பெரிய பில்டப் எல்லாம் கொடுத்துவிட்டு கடைசியில் வில்லனை டம்மி பீஸ் ஆக்கியது ஏனென்று தெரியவில்லை.                    

                                                                                             
இசை-இயக்கம்-தயாரிப்பு
                              ஜி.வி. பிரகாஷ் இசையில் "ஒ..பெண்ணே" பாடல் ரசிக்கலாம். பின்னணி இசை ஒக்கே. விஷால் பிலிம் பேக்டரி இன்னும் நல்ல கதைகளை கேட்டு தயாரிக்க வேண்டும். இயக்குனர் திரு பாலிவுட்டில் இந்த கதையை ரீமேக்கினால் சக்சஸ் ஆக வாய்ப்புண்டு. இனியா காரெக்டருக்கு சன்னி லியோனை ஒப்பந்தம் செய்யலாம்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                "பெண்ணே ஒ பெண்ணே" மற்றும் "இதயம் உன்னைத் தேடுதே" பாடல்கள்.. விஷால் சிறுவயதிலிருந்து பெரியவனாகும் அந்த மாண்டேஜ் காட்சி..

                  Aavee's Comments - Same Blood !


23 comments:

  1. //பாப்கார்ன் சாப்பிட போன பாதி பேர் திரும்ப வரலேங்கிறது தனி கதை//

    //சர்ப்ரைஸ் பேக்கேஜ் என்று நினைத்து சேர்க்கப்பட்ட கார்பேஜ்.//

    ஆவி டச்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்..

      Delete
  2. ஆவி பாஸ்,

    ரஜினியின் நான் சிவப்பு மனிதனை ஃபிரென்ச் "narco' படத்தோட கலக்கி எடுத்து கவுத்தி கொட்டினா விஷாலின் நான் சிகப்பு மனிதனாகிடும் அவ்வ்!

    http://en.wikipedia.org/wiki/Narco_(film)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.. நான் நார்கோ படம் பார்க்கல.. பட், நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.. ;-)

      Delete
  3. நான் பார்க்கலாம்னு நெனச்சேன். தப்பித்தேன்...

    ரேப் சீன் வேற இருக்கா? ஏன் இப்புடி எடுக்கறாங்க....

    ReplyDelete
    Replies
    1. //ரேப் சீன் வேற இருக்கா? // இந்தக் கேள்வி போக வேண்டாம்னு முடிவெடுத்தவன் கேக்குற மாதிரி இல்லையே.. ;-)

      Delete
  4. பாப்கார்ன் சாப்பிட போன பாதி பேர் திரும்ப வரலேங்கிறது தனி கதை)// இந்த வரியை மிகவும் ரசித்தோம்!

    அதெல்லாம் சரி நம்ம இயக்குனர்கள் எப்ப வித்தியாசமா, சொந்தமா சிந்தித்து ஒரு நல்ல உலகத்தர சினிமா தரப்போறாங்க?!! உகள் ஆவி டாக்கீஸ் என்ன சொல்கிறது இதைப் பற்றி?!!

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க ஆட்கள் இருக்காங்க.. அவங்களுக்கு சான்ஸ் கிடைக்கிறதில்ல.. இப்போ கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமாரசாமி எல்லாரும் நல்லா வித்தியாசமான சினிமா கொடுக்கறாங்களே.. அது போல நிறைய பேர் வரணும்.. வழக்கமான காதல் மசாலாக்களை விடுத்து நல்ல படங்களை கொடுக்கணும்..

      Delete
  5. அப்போ படத்தைப் பார்த்தால் காதுல மட்டுமில்ல வாயிலயும் ரத்தம் வருமோ அவ்வவ்...

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா. வந்தாலும் வரும் அண்ணே..!

      Delete
  6. பத்தோடு 11....? பாப்கார்ன் வெளியிலேயே சாப்பிட்டுக்கிறேன்... ஹிஹி...

    ReplyDelete
  7. Nice boss👏👏👏👏👏👏🎑🎑🎑🎑🎑💃💃💃

    ReplyDelete
  8. #தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது கடினம்.#
    நான் சிகப்பு மனிதன் என்பதற்கே பொருத்தமில்லையே விஷால் !
    #லக்ஷ்மி மேனன் பரபரப்பை கிளப்பிய அந்த முத்தக் காட்சியை தவிர (அதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்ல) #
    இதை வேறு எல்லோருக்கும் தருவேன் என்று சொல்லி விளம்பரம் தேடிக்கிறான்களே..அவ்வ்வ்வ் !
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. தியேட்டர்க்குள்ள கூட்டிட்டு வர அவங்க செஞ்ச தந்திரத்துல ஒண்ணு அது..

      Delete
  9. another review - http://kanavuthirutan.blogspot.com/2014/04/blog-post_11.html

    ReplyDelete
  10. படம் பாக்கலாம்ன்னு சொல்றீங்க...
    அப்போ முத்தத்துல தித்திப்பு இல்லையா... என்னமா பில்டப்பு விட்டானுங்க..

    ReplyDelete
    Replies
    1. பாருங்க.. வழியப்போற ரத்தத்துக்கு நான் கேரண்டி இல்ல ;-)

      Delete
  11. ஆவி நெகடிவ் விமர்சனம் பார்த்து உங்களைப் பாராட்டனும் கைக் கொடுங்க ....உண்மையா உண்மையின் படி தர்மத்தின் படி நியாயத்தின் வழி எழுதி இருக்கீங்க ...

    ReplyDelete
    Replies
    1. நாமெல்லாம் சவுரிமான் ச்சே கவரிமான் பரம்பரையாச்சே. நியாயத்தை விட்டு எழுத முடியுமா?

      Delete
  12. ஆவிப்பா புத்தகத்திற்கு வாழ்த்துக்களும் கர்களும் ......


    கர்ர்ர்ரர்ர்ர்ர் எதுக்குன்னு சொல்ல மாட்டேன் ,....

    ReplyDelete
    Replies
    1. அதான் அங்க சொல்லிட்டீங்களே..

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails