Sunday, April 27, 2014

கடுப்பேத்துறார் மை லார்ட்..!


                         ஐ.பி.எல் போட்டிகளின் இடையே ஒளிபரப்பப்படும் சில விளம்பரங்கள் பார்த்தபோது கடுப்பேற்றிய சில விளம்பரங்கள் இவை.


                          விளம்பரம்1 : அமேசான்... கணவன் மனைவி இருவரும் அமர்ந்து கிரிக்கெட்டை ரசித்துக் கொண்டே தங்களுக்குள் பெட் (Bet) வைத்துக் கொள்கிறார்கள். சிக்ஸ் அடித்தாலோ, அல்லது பவுண்டரி அடித்தாலோ மனைவி தான் விரும்பிய பொருள் ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். அவுட் ஆகிவிட்டால் கணவன் தனக்கு இஷ்டமானதை வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் மனைவி வென்று பேக், ஷூ, போன்றவற்றை ஆர்டர் செய்கிறார். தான் ஜெயித்தால் கேமிங் கன்சோல் ஒன்று வாங்க விரும்பிய கணவன் ஒவ்வொரு முறையும் தோற்க, ஒரு முறை விக்கெட் விழுகிறது. சந்தோஷத்தில் வெற்றிக் குறியிட்டு கணவன் அதைக் கொண்டாட அம்பயரோ அதை நோ-பால் என அறிவிக்கிறார். கணவனின் சில நொடி சந்தோஷங்களை பார்த்துக் கொண்டிருந்த அந்த மனைவி இப்போது அந்தத் தோல்வியை கொண்டாடும் விதமாக "யெஸ்" என்று பொறாமையுடன் கூறி ஆனந்தப்படுகிறார்.


                     

                         விளம்பரம் 2: ஹேவல்ஸ் மிக்ஸி... கணவன் சாப்பிடுவதற்காக டேபிளில் அமர்கிறான். மனைவி அவன் தட்டில் இட்டிலிகளை வைக்கிறாள். அதைப் பார்த்ததுமே அவன் "சாப்டா இருக்கு இட்லி" என்று பாராட்டுகிறான். பின் இட்டிலிக்கு தொட்டுக் கொள்ள அந்த மனைவி கொஞ்சம் சாம்பார் ஊற்ற முகம் வாடும் கணவன் தன்னுடைய அம்மா தனக்கு பல வித சட்னி செய்து கொடுத்ததை நினைவு கூர்ந்து கொண்டே இட்லியை உண்கிறான். அந்த பாராட்டை ரசிக்காத மனைவி உள்ளே சென்று மிக்ஸியை எடுத்து வந்து அவன் முன்னே வைத்துவிட்டு "பல வகை சட்னி அரைக்க தேவையான பொருட்கள் இங்கே இருக்கு. அரைச்சுக்கோங்க" என்று கூறிவிட்டு எதிரில் அமர்ந்தவாறே "சட்னியா, பத்னியா(மனைவியா)" என்று கேட்பது போல் முடியும். கடைசியில் "Respect Woman" என்ற வாசகம் வேறு.

                                     

                            மேற்சொன்ன இரண்டு விளம்பரமுமே ஆண்-ஆதிக்கம் (ஆதிக்கம் செய்யப்படும் ஆண்கள் எனக் கொள்க ) நிறைந்த விளம்பரங்கள்.. வியாபார உக்தி என்று கொண்டாலும் மீடியாவில் வரும் இதுபோன்ற விளம்பரங்களால் இன்றைய இளைய தலைமுறை பெண்களின் மனப்பாங்கு மாறுவது மிகச் சாதாரணமாய் நிகழ்வது தவிர்க்க முடியாததாகிறது..


14 comments:

 1. வணக்கம்

  நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் இறுதியில்.... பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. சிந்தனைக்கு உரிய வரிகள் நண்பரே

  ReplyDelete
 3. :)))))

  சங்கம் அமைச்சுடலாமா... போராடலாமா... வாங்க ஆவி...!

  ReplyDelete
  Replies
  1. நம்ப ரெண்டு பேர் மட்டும் சேர்ந்து சங்கம் அமைச்சா எப்படி ஸார்.. கூட்டம் சேர வேண்டாமா? ஹஹஹா

   Delete
 4. Replies
  1. அப்போ Content சரியில்லையா? ;-) ;-)

   Delete
 5. Respect Man என்று இனி வருங்காலத்தில் வரலாம்...[!]

  ReplyDelete
 6. இன்னும் ஐ.பி.எல்லில் ஒரு மேட்ச் கூட பார்க்கவில்லை! இந்த விளம்பரங்களும் பார்க்கவில்லை!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்.. நல்லவேளை தப்பிச்சீங்க..

   Delete
 7. பல விளம்பரங்கள் ரொம்பவே கஷ்டப்படுத்துகின்றன ஆவி - ஹேவல்ஸ் - இன்னுமொரு விளம்பரமும் உண்டு - சட்டையை Iron செய்து தரும்படி வரும்....

  ReplyDelete
  Replies
  1. இஸ்த்ரி-ஸ்த்ரி விளம்பரம் தானே.. ஒரு முடிவோட தான் இப்படியெல்லாம் எடுக்கறாங்க போல..

   Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...