இன்ட்ரோ
“சில்லுனு ஒரு காதல்” போன்ற படத்தை கொடுத்த
இயக்குனர் மீண்டும் அதே ஜானரில் படம் பண்ணாமல் முற்றிலும் வித்தியாசமான கதைக்
களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே அவரைப் பாராட்டலாம். புதுமுக நடிகர்களை வைத்து
அழுத்தமான திரைக்கதையை நம்பி களமிறங்கி வெற்றியும் பெறுகிறார்.
கதை
1985-ல் நடைபெறும் கதை. நெடுஞ்சாலையில் வரும்
வண்டிகளில் இருக்கும் பொருட்களை கடத்தி விற்கும் நாயகன். அதே நெடுஞ்சாலையில் தாபா வைத்திருக்கும் நாயகி. நாயகியை காமத்துடன்
பார்க்கும் வில்லன். மோதலில் ஆரம்பித்து காதலில் விழும் நாயகி, வில்லனின்
குறுக்கீட்டை எதிர்த்து எப்படி ஜெயிக்கிறார்கள் என்று கபில்தேவ் காலத்து கதைதான்
என்றாலும், கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதை நம்மை ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறது.
அழுக்கு பையனின் மேல் அழகுப் பெண்ணுக்கு காரணமே இல்லாமல் காதல் வருவதை பலமுறை
பார்த்திருப்போம். ஆனால் இதில் கொஞ்சம் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது.
ஆக்க்ஷன்
படத்தின் முதுகெலும்பு நாயகி ஸ்வேதா நாயர், மற்றுமொரு
கேரளத்து இம்போர்ட். இவர் வரும் ஒவ்வொரு பிரேமும் ஜில்ஜில். அம்மணி அவ்வளவு
ஹோம்லெக்ஸி (ஹோம்லி + செக்ஸி ஹிஹிஹி). கவர்ச்சி கோதாவில் இறங்காமல் நல்ல கதையம்சம்
உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் அஞ்சலி விட்டுச் சென்ற இடத்தை பிடிக்கலாம்.
சசிகுமாரின் தம்பி மாதிரி இருக்கும் நாயகன் ஆரிக்கு பருத்திவீரன் கார்த்திக்கு
கிடைத்த அதே வேடம். அலட்டலே இல்லாமல் வெளுத்து வாங்குகிறார். குறிப்பாக கோர்ட்
காட்சியிலும் கிளைமாக்ஸ் காட்சியிலும்
நல்ல நடிப்பு. இருவருக்குமே காஸ்ட்யும் செலவு பெரிதாக ஒன்றுமில்லை. நாயகிக்கு
நாலஞ்சு நீள ஸ்கர்ட்டும் டாப்ஸும், ஹீரோவுக்கு ஒரு முண்டா பனியனும், ரெண்டு
அண்டர்வேரும் நாலு லுங்கி அவ்வளவே.
நாயகன் நாயகிக்கு இணையாய் நடித்திருக்கும் இருவர் இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரம்
மற்றும் திருட்டு பொருளை வாங்கி விற்கும் சலீம் காரெக்டரும் தான்.. அதிலும் சலீம்
காமெடி, வில்லத்தனம் என பின்னி எடுக்கிறார். தேசிய விருது பெற்ற நல்ல உடல்மொழிக்
கலைஞரை நன்றாக பயன்படுத்தியுள்ளனர். இன்ஸ்பெக்டர் சரண்ராஜை நினைவுபடுத்துகிறார்.
அவ்வப்போது தலை காட்டும் “தம்பி” ராமையா கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
இசை-தயாரிப்பு
“நச்”சுன்னு கதை சொல்வதில் கிருஷ்ணா மீண்டும் ஒருமுறை வெற்றி பெறுகிறார். விறுவிறுப்பான முதல் பாதி, இண்டர்வல் பிளாக், நிறைவான செகண்ட் ஹாப் என ஒரு நல்ல திரைக்கதைக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு சிறப்பு, அதிலும் பாடலில் மிகவும் அருமை. சத்யாவின் இசையில் பின்னணி தேவலாம்.. ஓரிரு பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது, இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
இரு பாடல்கள் மற்றும் முதல் பாதியில் நாயகி வரும் காட்சிகள் எல்லாம்.. (ஆவி, கண்ட்ரோல் யுவர் ஜொள்ளுன்னு நீங்க சொல்றது கேக்குது.. மீ ஸ்டாப் ஹியர்..)
Aavee's Comments - Smooth Road to Travel..!