Friday, March 28, 2014

ஆவி டாக்கீஸ் - நெடுஞ்சாலை


இன்ட்ரோ  
                “சில்லுனு ஒரு காதல்” போன்ற படத்தை கொடுத்த இயக்குனர் மீண்டும் அதே ஜானரில் படம் பண்ணாமல் முற்றிலும் வித்தியாசமான கதைக் களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே அவரைப் பாராட்டலாம். புதுமுக நடிகர்களை வைத்து அழுத்தமான திரைக்கதையை நம்பி களமிறங்கி வெற்றியும் பெறுகிறார்.
கதை         
                  1985-ல் நடைபெறும் கதை. நெடுஞ்சாலையில் வரும் வண்டிகளில் இருக்கும் பொருட்களை கடத்தி விற்கும் நாயகன். அதே நெடுஞ்சாலையில்  தாபா வைத்திருக்கும் நாயகி. நாயகியை காமத்துடன் பார்க்கும் வில்லன். மோதலில் ஆரம்பித்து காதலில் விழும் நாயகி, வில்லனின் குறுக்கீட்டை எதிர்த்து எப்படி ஜெயிக்கிறார்கள் என்று கபில்தேவ் காலத்து கதைதான் என்றாலும், கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதை நம்மை ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறது. அழுக்கு பையனின் மேல் அழகுப் பெண்ணுக்கு காரணமே இல்லாமல் காதல் வருவதை பலமுறை பார்த்திருப்போம். ஆனால் இதில் கொஞ்சம் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது.
 
                                                                                                                                        ஆக்க்ஷன் 
                    படத்தின் முதுகெலும்பு நாயகி ஸ்வேதா நாயர், மற்றுமொரு கேரளத்து இம்போர்ட். இவர் வரும் ஒவ்வொரு பிரேமும் ஜில்ஜில். அம்மணி அவ்வளவு ஹோம்லெக்ஸி (ஹோம்லி + செக்ஸி ஹிஹிஹி). கவர்ச்சி கோதாவில் இறங்காமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் அஞ்சலி விட்டுச் சென்ற இடத்தை பிடிக்கலாம். சசிகுமாரின் தம்பி மாதிரி இருக்கும் நாயகன் ஆரிக்கு பருத்திவீரன் கார்த்திக்கு கிடைத்த அதே வேடம். அலட்டலே இல்லாமல் வெளுத்து வாங்குகிறார். குறிப்பாக கோர்ட் காட்சியிலும் கிளைமாக்ஸ் காட்சியிலும்  நல்ல நடிப்பு. இருவருக்குமே காஸ்ட்யும் செலவு பெரிதாக ஒன்றுமில்லை. நாயகிக்கு நாலஞ்சு நீள ஸ்கர்ட்டும் டாப்ஸும், ஹீரோவுக்கு ஒரு முண்டா பனியனும், ரெண்டு அண்டர்வேரும் நாலு லுங்கி அவ்வளவே.                     நாயகன் நாயகிக்கு இணையாய் நடித்திருக்கும் இருவர் இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரம் மற்றும் திருட்டு பொருளை வாங்கி விற்கும் சலீம் காரெக்டரும் தான்.. அதிலும் சலீம் காமெடி, வில்லத்தனம் என பின்னி எடுக்கிறார். தேசிய விருது பெற்ற நல்ல உடல்மொழிக் கலைஞரை நன்றாக பயன்படுத்தியுள்ளனர். இன்ஸ்பெக்டர் சரண்ராஜை நினைவுபடுத்துகிறார். அவ்வப்போது தலை காட்டும் “தம்பி” ராமையா கிச்சுகிச்சு மூட்டுகிறார்.                                                                                                                                                                                                                    
இசை-தயாரிப்பு
                         
                        “நச்”சுன்னு கதை சொல்வதில் கிருஷ்ணா மீண்டும் ஒருமுறை வெற்றி பெறுகிறார். விறுவிறுப்பான முதல் பாதி,  இண்டர்வல் பிளாக், நிறைவான செகண்ட் ஹாப் என ஒரு நல்ல திரைக்கதைக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு சிறப்பு, அதிலும்   பாடலில் மிகவும் அருமை. சத்யாவின் இசையில் பின்னணி தேவலாம்.. ஓரிரு பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது, இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.
 
                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                       
                           இரு பாடல்கள் மற்றும் முதல் பாதியில் நாயகி வரும் காட்சிகள் எல்லாம்.. (ஆவி, கண்ட்ரோல் யுவர் ஜொள்ளுன்னு நீங்க சொல்றது கேக்குது.. மீ ஸ்டாப் ஹியர்..)

                  Aavee's Comments - Smooth Road to Travel..!


25 comments:

 1. Nala vimarsanam.. Itha padichaprom again padatha pakanum nu thonithu... Not fa d jollu matterz..:p

  ReplyDelete
  Replies
  1. ஒக்கே ஒக்கே.. நம்பிட்டேன்..

   Delete
 2. Ok.. I will try to travel aavee boooooossssssssssss :-)))))))

  ReplyDelete
 3. அடடே... எனக்குள்ளயும் இந்தப் படத்தைப் பாக்கற ஆவலைக் கிளப்பி விட்டுட்டாரே இந்த ஆவி...! தமிழுக்கு ஹோம்லெக்ஸின்னு ஒரு புது வார்ததையை வழங்கிய வள்ளல்(!) ஆவி வாலுக வாலுக...!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா பார்க்கலாம் ஸார்..

   அவ்வ்வ்வவ்.. வள்ளலா?

   Delete
 4. // கபில்தேவ் காலத்து கதை // அட...!

  நாங்க நினைச்சது கேட்காமலேயா இருக்கும் ஆவிக்கு...! ஹிஹி...

  ReplyDelete
 5. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

  http://blogintamil.blogspot.in/2014/03/seenu-day-6.html

  ReplyDelete
 6. படம் நல்லா இல்லைன்னு நிறைய ஸ்டேட்டஸ் பார்த்தேன் ....

  ReplyDelete
  Replies
  1. அவங்க கிட்ட கேட்டுப் பாருங்க ஜில்லா, வீரம் எல்லாம் நல்ல படம்னு சொல்வாங்க.. அது மசாலா விரும்பிகளுக்கு..! :) :)

   Delete
 7. நல்ல விமர்சனம். நன்றி ஆவி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி வெங்கட் சார்..

   Delete
 8. வலைச்சரம் மூலமாக தங்களின் பதிவுகளைப் பார்த்தேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வணக்கம்,ஆ.வி!நலமா?///நன்றாக .....மிக நன்றாக விமர்சித்திருக்கிறீர்கள்.இப்படியான படங்கள் இங்கே பெருந்திரையில் ரிலீசாவதில்லை(ஆமா,ரிலீசானா மட்டும்.........ஹி!ஹி!ஹீ!!!).நெட்டில் தான்!///தமிழுக்குப் புதிய வார்த்தைகள் கண்டு பிடித்து சொல்கிறீர்கள்!உங்கள் பெயர் வரலாற்றில் இடம் பிடிக்கும்!!!

  ReplyDelete
 10. பகிர்வுக்கு நன்றி
  த . ம. 995

  ReplyDelete
 11. ஹோம்லெக்ஸி! கபில்தேவ் காலத்து கதை! போன்ற வரிகள் ரசிக்க வைத்தன! சிறப்பான விமர்சனம்! நன்றி!

  ReplyDelete
 12. நெடுஞ்சாலையில் பயணிக்கலாமா என்ற தயக்கத்தை தகர்த்த ஆவிக்கு நன்றி விரைவில் பயணித்து விட்டு சொல்கிறேன்

  ReplyDelete
 13. எனக்கென்னமோ இந்தப்படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை, நேரம் கிடைத்தால் பார்க்கிறேன்...

  ReplyDelete
 14. homelexy ந உடனேயே புரிஞ்சு போச்சு! என்ன சொல்ல வர்ரீங்கனு! ஆவியின் விமர்சனம் நெடுஞ்சாலையில் பயணம் செய்யலாம் என்று சொல்வதால் பயணித்துதான் பார்ப்போமே என்று தோன்றுகிறது!


  நல்ல விமர்சனம்!

  ReplyDelete
 15. நேத்துப் பார்த்தேன்.உண்மையில் நல்லதொரு படம் தான்.ஒளிப்பதிவு தான்..............'மாளவிகா' தேறி விடுவார்,நம் இயக்குனர்கள் சரியானபடி பயன்படுத்தினால்.

  ReplyDelete
 16. ரசிக்கும் படி இருக்கு உங்கள் விமரிசனம் !

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...