Monday, November 15, 2010

மன்மதன் அம்பு - முதல் பார்வை..





              தலைவர் கமல்ஹாசனின் அடுத்த படைப்பான மன்மதன் அம்பு படத்தின் முதல் பார்வை இதோ உங்களுக்காக...




              மன்மதன் அம்பு படத்தின் பெரும்பாலான காட்சிகள் கப்பலில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரத்தில் பாடல்களும், டிசம்பரில் படமும் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை படங்களில் ஒன்றாக இது நிச்சயம் இருக்கும். கமல், மாதவன், த்ரிஷா, சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை DSP . கதை, திரைக்கதை கமல்ஹாசன், இயக்கம் கே. எஸ். ரவிக்குமார்.


( கவனிக்க:: டைட்டிலில் காதல் சின்னமாக விளங்கும்  ஐபில் டவர் அம்பாக மாறி வீரத்தை பறைசாற்றும் கலோசியத்தை தாக்குவதாக கற்பனை செய்திருப்பார்கள்) 

Monday, November 8, 2010

சர்தார்ஜி ஜோக்ஸ்- 2



பேருந்தில் நடத்துனரிடம்..


சர்தார்ஜி :      கண்டக்டர், ரெண்டு டிக்கெட்.
நடத்துனர்:    நீங்க ஒருத்தர் தானே ஏறினீங்க, எதுக்கு ரெண்டு டிக்கெட்?
சர்தார்ஜி :     ஒண்ணு தொலைஞ்சு போச்சுன்னா இன்னொன்னு.
நடத்துனர்:   அப்போ, இன்னொன்னும் தொலைஞ்சிடுச்சுன்னா?
சர்தார்ஜி :     என்கிட்டதான் பாஸ் (Pass ) இருக்கே!!




தன் பைக்கில் தன்னோடு இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சர்தார்ஜியை வழிமறித்த டிராபிக் போலீசிடம்..


சர்தார்ஜி: ஸாரி சார்! ஆல்ரெடி ரெண்டு பேர் வண்டில இருக்காங்க! உங்களுக்கு இடம் இல்லே..


துப்பறியும் அதிகாரி பணி தேர்வில்..

தேர்வாளர் :  மகாத்மா காந்தியைக் கொன்றது யார்?
சர்தார்ஜி:        இந்த பணிக்கு என்னை தேர்வு செய்ததற்கு நன்றி.. காந்தியை கொன்றவர்களை பற்றி நான் விசாரிக்கிறேன்..


பார்க்கில் ஒரு அழகிய பெண்ணிடம்..


சர்தார்ஜி: சுனிதா உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்.
சுனிதா:     நான் உன்னைவிட ஒரு வயது பெரியவள்!
சர்தார்ஜி: அப்போ, நான் உன்னை அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்கிறேன்.


பள்ளியில் ஆசிரியரிடம்..


ஆசிரியர்:  தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன?
சர்தார்ஜி : HIJKLMNO
ஆசிரியர்: என்ன?
சர்தார்ஜி: நேற்று நீங்கள் தான் "ஹெச்" டூ "ஒ" என்று சொல்லிக்கொடுத்தீர்கள்..


நூலகத்தில்..


சர்தார்ஜி: (நூலகரிடம்) நான் படித்ததிலேயே மிகவும் மோசமான புத்தகம் இதுதான். மிகவும் அதிகமான கதாபாத்திரங்கள்.. சம்பாஷனைகள் யாவும் எண் வடிவில்  இருந்ததால் புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது..

நூலகர்: ஓஹோ! நீங்கதான் டெலிபோன் டைரக்டரியை தூக்கிட்டு போன ஆசாமியா?

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...