கரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்ன்னு என் ரசிகப் பெருமக்கள் பலர் (சரி, சரி, நாலைஞ்சு பேர்) கேட்டதால இங்கே ஷேர் பண்றேன். இது அட்வைஸ் கிடையாது. அனுபவ பகிர்தல் மட்டுமே!
.
ஆல்ரைட். கரோனா அவுட்பிரேக், லாக்டவுன், யாருக்கு போன் பண்ணினாலும் போரடிக்குது, என்ன பண்றதுன்னே தெரியலன்னு ஒரே புலம்பல்ஸ் ஆஃப் கரோனாவா இருக்கு. ஆனா எனக்கு அப்படி எதுவும் வெறுப்பு எல்லாம் உண்டாகல.
.
காலையில ஆறே கால், ஆறரைக்கு எழுந்தா அரை மணி நேர வாக்கிங் (மொட்டை மாடில), அப்புறம் டீ குடிச்சுட்டு கொஞ்சம் நியுஸ். அப்புறம் குட்டிப் பையன் பாக்கிற மாதிரி சிறுவர்களுக்கான படம் ஒண்ணு, அப்புறம் ஓரு பேய் படம், அப்புறம் ஒரு மலையாளம் அல்லது தமிழ் படம் (ஆங்கில, தெலுங்கு டப்பிங் படங்களும் இதில் அடங்கும்). மாலையில் கொஞ்ச நேரம் புத்தக வாசிப்பு. ( பனி மனிதன், அனல் காற்று முடிச்சாச்! இப்போ ஸ்ரீரங்கத்துக் கதைகள் பை தலைவர் படிச்சுண்டிருக்கேன்!)
.
இரவில் நேரடி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் கொரியன் என்று சப்டைட்டில் உதவியோடு ஒரு திரைப்படம். சரியா சொல்லணும்னா இதுக்கே நேரம் பத்தல. பை தி பை எங்க வீட்டுல கேபிள் கனெக்சன் கிடையாது. ஒன்லி பிரைம், ஹாட்ஸ்டார், ஜீ ஃபை போன்ற ஓடிடி பிளாட்பார்ம்களின் உதவியோடுதான்.(நன்றி: அதிவிரைவு ஹேத்வே இன்டர்நெட் )
.
தமிழ் - 57
ஆங்கிலம் - 25
மலையாளம் - 24
ஹிந்தி- 6
தெலுங்கு- 18
கன்னடம்- 1
கொரியன்- 1
___________
மொத்தம் - 135 ( Mar 24- Apr 23)
.
ஆனா, அதிலும் ஒரு பிரச்சினை என்னன்னா, கடைசி பெஞ்ச் கார்த்தி, மீண்டும் ஒரு மரியாதை, மூன்று பேர் மூன்று காதல் போன்ற மொக்கைகளை சகித்துக் கடக்க வேண்டியிருந்தது. அதிலும் அந்த க.பெ.கார்த்தி படத்தை பார்த்தபோதுதான் பரத் ஏன் சினிமா சான்ஸ் இல்லாம இருக்கார்னு புரிஞ்சுது.
.
இது இல்லாம எங்களோடது இசைக் குடும்பம்ங்கிறதால (?!!!) அப்பப்ப யூட்யூப்ல கரோக்கி ப்ளே பண்ணிட்டு, பாடல்கள் பாடி பதிவு செய்து அப்பவே டெலிட் பண்ணி (ஆமா, அதை வெளியிட்டா அப்புறம் கரோனா பாதிப்பை விட அதிகமா இருக்கும்ல) விளையாடுவோம்.
.