அப்பா!!
அன்று தொடங்கி இன்று வரை எதையும்
கேட்டதில்லை நேரிடையாக!!
அம்மாவின் மூலமாகவோ, தங்கையின் வாயிலாகவோ
என் தேவைகள் நிறைவேறியது!!
பயமா, மரியாதையா எதுவென்னை தடுத்ததென்று
இதுவரை விளங்கவில்லை!!
இப்போதும் இணையத்தில் வலைப்பதிவின் மூலமாக
வாழ்த்த விழைகிறேன்!!
நீங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதை நிச்சயம்
பூப்பாதையல்ல என்பதை அறிவேன்!
உம் குருதியை வியர்வையாக்கி
நாங்கள் உயர்ந்திட பாடுபட்டாய் !!
காலை முதல் மாலை வரை
நா வரள பாடம் சொல்லி, தாகம்
எடுத்த போதும் தேநீரை அருந்தாமல்
சிக்கனமாய் சேமித்து செல்வத்தை எமக்களித்தாய்!!
உம் கடும் சொற்களுக்காய் பலமுறை
கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.. ஆனால்
அவை ஒவ்வொன்றிலிருந்தும் நான்
கற்ற பாடம் இன்று உணர்கின்றேன்!!
இன்று உமக்கு வயது அறுபது - அந்நிய
தேசத்தில் சூழ்நிலைக் கைதியாய் சிக்கிக் கொண்டாலும்
என் பணிவான பாசத்தை உங்கள் பாதத்தில்
கண்ணீருடன் (ஆனந்தக் கண்ணீர்) சமர்ப்பிக்கிறேன்!!