Sunday, August 22, 2010

அப்பாவுக்கு வயது அறுபது!!!



அப்பா!!

அன்று தொடங்கி இன்று வரை எதையும் 
கேட்டதில்லை நேரிடையாக!!
அம்மாவின் மூலமாகவோ, தங்கையின் வாயிலாகவோ 
என் தேவைகள் நிறைவேறியது!!

பயமா, மரியாதையா எதுவென்னை தடுத்ததென்று
இதுவரை விளங்கவில்லை!!
இப்போதும் இணையத்தில் வலைப்பதிவின் மூலமாக 
வாழ்த்த விழைகிறேன்!!

நீங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதை நிச்சயம் 
பூப்பாதையல்ல என்பதை அறிவேன்!
உம் குருதியை வியர்வையாக்கி
நாங்கள் உயர்ந்திட பாடுபட்டாய் !!

காலை முதல் மாலை வரை 
நா வரள பாடம் சொல்லி, தாகம் 
எடுத்த போதும் தேநீரை அருந்தாமல் 
சிக்கனமாய் சேமித்து செல்வத்தை எமக்களித்தாய்!!

உம் கடும் சொற்களுக்காய் பலமுறை 
கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.. ஆனால் 
அவை ஒவ்வொன்றிலிருந்தும் நான் 
கற்ற பாடம் இன்று உணர்கின்றேன்!!

இன்று உமக்கு வயது அறுபது - அந்நிய 
தேசத்தில் சூழ்நிலைக் கைதியாய் சிக்கிக் கொண்டாலும்
என் பணிவான பாசத்தை உங்கள் பாதத்தில் 
கண்ணீருடன் (ஆனந்தக் கண்ணீர்) சமர்ப்பிக்கிறேன்!!




10 comments:

  1. //உம் கடும் சொற்களுக்காய் பலமுறை
    கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.. ஆனால்
    அவை ஒவ்வொன்றிலிருந்தும் நான்
    கற்ற பாடம் இன்று உணர்கின்றேன்!!/// nice lines... all the best... keep it up..

    ReplyDelete
  2. Great words from ur heart,for ur dad...

    ReplyDelete
  3. எல்லா வார்த்தையிலும் அன்பும் உண்மையும் இருந்தது. ரெம்ப நல்ல (வாழ்க்கை) கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அன்புடன் வணக்கம்
    இவன் தந்தை என்ன நோன்பு நோற்றான் இவன்போன்ற மகவை பெற..
    உண்மை இது போன்று பெற்றோரை மதிக்கும் மகனை பெற்ற உமது தந்தை
    புண்ணியம் செய்திருக்க வேண்டும் .வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. அழகான பாசம் நிறைந்த கவிதை... நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  6. நன்றி முனி..

    ReplyDelete
  7. கணபதி ஐயா, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!!

    ReplyDelete
  8. நன்றி தங்கமணி!!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...