Saturday, February 20, 2016

ஆவி டாக்கீஸ் -சேதுபதி


இன்ட்ரோ  
                   ஆரஞ்சு மிட்டாய் போன்ற பரீட்சார்த்த முயற்சிகளை கைவிட்டு சென்ற படம் கொடுத்த வெற்றிக் களிப்பில் களமிறங்கி  "நானும் போலிஸ் தான்" என்று விஜய் சேதுபதி ஆடியிருக்கும் கமர்ஷியல் கதகளி  தான் சேதுபதி.                      


                          

கதை
                           குடும்பப் பகை காரணமாக நடக்கும் ஒரு கொலையை விசாரிக்கும் சேதுபதி, ஊர்ப் பெரியவர் ஒருவருடன் பகைமையை வளர்த்துக் கொள்கிறான். இவர்கள் இருவருக்குமான மோதல் தான் கதை என்றாலும், குழந்தைகள், மனைவி சென்டிமென்ட், ரோமேன்ஸ், ஆக்க்ஷன், பாடல்கள் என ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான அத்தனை பில்டப்புகளோடும் திகட்டாமல் ரசிக்க வைக்கிறான்.
                            
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                         விஜய் சேதுபதி, முறுக்கிய மீசையும், நிமிர்த்திய தோளுமாய் அந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு  கண்ணியமாக உயிர் கொடுத்திருக்கிறார். ஆக்க்ஷன் மட்டுமல்லாது காதல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என அனைத்திலும் கலக்குகிறார். குறிப்பாக வில்லனின் அடியாளிடம் நீ முறைத்து பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது என்று கூறுகையில் அரங்கில் அனைவரும் சிரிக்கின்றனர். இவருடைய டயலாக் டெலிவரி மட்டும் ஆரம்ப கால ரஜினிகாந்தை நினைவு படுத்துகிறது. நல்ல கதை தேர்வு தொடர்ந்தால் கமல், விக்ரம் சென்ற பாதையில் தொடரலாம்.
                             
                             ரம்யா நம்பீசன் பீட்சாவில் காதலித்து, இதில் மனைவியாய், இரு குழந்தைகளுக்கு அன்னையாய் வருகிறார். செல்லமாய் கோபிப்பது, பின் கணவனின் கண் பார்த்ததும் சொக்கிப் போவது என டிபிகல் கேரக்டர், திருப்தியாய் நடித்திருக்கிறார். வில்லர்- வேல.ராமமூர்த்தி, பின்பாதியில் அனிருத்தின் குரலில் வரும் 'நான் யாரு' பாடலில் கம்பீரமாக நிற்கிறார். இன்னும் கொஞ்சம் டெர்ரராக காட்டியிருக்கலாம்.

                               

இசை- இயக்கம்
                             இசை 'தெகிடி' புகழ் நிவாஸ் பிரசன்னா.பாடல்கள் சுமார் ராகம். பின்னணி இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் பல இடங்களை வெட்ட மறந்து சற்று நீளமாக விட்டுவிட்டது. 'பண்ணையாரும் பத்மினியும்' இயக்குனர் அருண் கொடுத்த கம்ப்ளீட் பேக்கேஜ். ஓரிரு இடங்களில் தடுமாற்றம் என்ற போதும் மொத்தத்தில் ஒரு நல்ல என்டர்டெயினர்.

                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                               போலீஸ் மிடுக்கை மறந்து மனைவியின் கால்களில் விழும் காட்சி, இமேஜ் பற்றி கவலைப்படாத விஜய் சேதுபதியை ஆவி லைக்ஸ் எ லாட்!

                    


Aavee's Comments -  Commercial King!

Friday, February 19, 2016

ஆவி டாக்கீஸ் -மிருதன்


இன்ட்ரோ  
                   ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மாந்த்ரீக  சக்தி கொண்டு இறந்த பிரேதங்களுக்கு உயிர் கொடுத்து, அந்த பிரேதங்களை தங்கள் எதிரிகளை அழிக்க பயன்படுத்திக் கொள்வர். இவ்வகை பிரேதங்களுக்கு   ஃஜோம்பி (zombie) என்று பெயரிட்டு அழைத்தனர். மிருக உணர்வும் மனித உடலும் (மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை) கொண்ட இறந்த உயிர்கள் தான் மிருதன்(ர்கள்) அல்லது ஜோம்பிக்கள் என்று இந்தப் படம் கூறுகிறது. ஆங்காங்கே டிராகுலாவின் பண்பு, பேய்களின் அட்டகாசம் என்று எட்டிப் பார்த்தாலும் காதலிக்காக எதையும் செய்யும் தமிழ்க் கலாச்சாரத்தை பின்பற்றும் அக்மார்க் தமிழ் ஃஜோம்பி இது.                              


                          

கதை
                           ஊருக்குள் வேகமாக பரவும் வைரஸ் (ஃஜோம்பி வைரஸ்?) ஊட்டி நகரத்தையே ஃஜோம்பிகள் வாழும் நரகமாக மாற்றிவிட அதற்கு மாற்று மருந்து கண்டறிய முயலும் மருத்துவர் லட்சுமி மேனன் மற்றும் மருத்துவர் குழுவை கோவை மருத்துவமனைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல   உதவும் ஒரு ட்ராபிக் போலிஸ் ரவி.

                           இந்த களேபரத்துக்கு இடையிலும் லட்சுமி மேல் ஒரு தலை காதல், நண்பனுடன் சூர்யா- தேவா நட்பு, தங்கச்சி சென்டிமென்ட், ஒரு லவ் பெய்லியர் சாங், ஹீரோயினுக்கு லவ் வரும் போது ஒரு சாங் (குத்துப்பாட்டு மிஸ்ஸிங்) என தமிழ் சினிமாவின் இலக்கணங்களை துளியும் பிசகாமல் இருக்கிறது.  அவ்வப்போது ஃஜோம்பிகள் கொஞ்சம் காமெடிக்கு, கொஞ்சம் காதல் வளர்க்க என ரகரகமாய் வந்து ரவியிடம் குண்டு பட்டுச் சாகின்றன.
                             
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                          ரவி, தனி ஒருவனுக்கு பிறகு வரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம், அதை பூர்த்தி செய்திருக்கிறார். இன்னமும் காமெடி காட்சிகளில் அவ்வளவு இயல்பாய் வரவில்லை என்றே தோன்றுகிறது. பேபி அனிகா நல்ல நடிப்பு. கோடம்பாக்கத்தின் 'அதிர்ஷ்ட' லட்சுமி (மேனன்) நடிக்க பெரிதாய் வாய்ப்பில்லை என்றாலும் இறுதிக் காட்சிகளில் சிறப்பாய் செய்திருக்கிறார். RNR மனோகர் சர்பிரைஸ் காமெடி பேக்கேஜ். காளிவெங்கட் துப்பாக்கி சுடும் காமெடி செம்ம சீரியஸ்..

                               

இசை- இயக்கம்
                             இமானின் இசையில் 'முன்னாள் காதலி' 'மிருதா மிருதா' பாடல்கள் அருமை. ஆனால் ஒரு ஃஜோம்பி படத்திற்கான மிரட்டல் இசை மிஸ்ஸிங். வெங்கடேஷின் ஒளிப்பதிவில் ஊட்டி அழகாய் காட்சியளிக்கிறது, குறிப்பாய் இன்டர்வல் பிளாக்கில் ஒளிப்பதிவுக்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து.

                              "நான் போகிறேன் மேலே மேலே" என்ற பாடல் இடம்பெற்ற நாணயம் படத்தை இயக்கிய 'நாய்கள் ஜாக்கிரதை' புகழ், சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஒரு படி மேலே போயிருக்கிறார். பேய் சீசனில் வித்தியாசமான கதை சொல்ல முயன்றதற்காகவே அவரை  பாராட்டலாம். ஃஜோம்பிகளுக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்திருந்தாலும் ஆங்காங்கே டிராகுலாக்கள் நினைவுக்கு வருவது ஏனோ?  படம் முடிந்ததும் அப்பாடா என நிம்மதியுடன் எழ முயலும் ரசிகர்கள் வயிற்றில் இரண்டாம் பாகம் எனும் டேமரிண்டை கரைப்பது நியாயமா சாரே?



                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                                பேபி அனிகா இறுதிக் காட்சியில் பேசும் வசனம், 'முன்னாள் காதலி' பாடல்.

                      


Aavee's Comments -  Zombie with Tamil Culture!

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...