Thursday, July 21, 2016

மயக்குறு மகள்புத்தகத் திருவிழா சென்ற போது நண்பர் டின் என்கிற தினேஷ் 'மயக்குறு மகள்என்ற புத்தகத்தை வாங்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றார். நானும் புத்தகத்தை எடுத்து முன்னுரை வாசித்தேன். அங்கே எழுத்தில் சரித்திரம் படைக்கும் நாயகன் ஒருவர் புத்தகத்தை சிலாகித்து எழுதியிருந்தார். அதிலும் அவர் அதை 'பாபநாசம்' படத்தோடு ஒப்பிட்டு ஒரு வரி எழுதியிருந்தார். ஜெமோவின் அந்த வரிகள் ஒவ்வொன்றும் நான் தேடிக் கொண்டிருந்த தேவதைக் கதை இதுதான் என்பதை எனக்கு உணர்த்தியது. மேலும் வாசிக்க..

Wednesday, July 20, 2016

கனவு அரசியல்!

ரசியலில் எல்லாம் எனக்கு ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை என்ற போதும் நேற்றைய கனவு எனக்கே சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அதில் நான் வடக்கத்திய அரசியல்வாதிகள் மோடிஜி, தெற்கத்திய 'காதல் மன்னன்' ஷைனிங் ஸ்டார் போன்றோர் அணிந்து பிரபலப்படுத்திய அந்த கொட்டுடன் இணைந்த பைஜாமாவை அணிந்திருக்கிறேன். என்னைச் சுற்றி நாலைந்து அமைச்சர்கள். ஒரு சீரியசான விவாதம் நடந்து கொண்டிருப்பதற்கான அறிகுறி அங்கே தென்பட்டது. ஒரு மந்திரி "நாட்டில் விலைவாசி மிகவும் உயர்ந்துவிட்டது, பெட்ரோல் ஒரு லிட்டர் இருநூறு ரூபாய். இப்படியே சென்றால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் தற்கொலை செய்து கொள்வார்கள்" அதை ஆமோதிப்பது போல் நான்கைந்து வழுக்கை மண்டைகள் தலையை ஆட்டின.

இன்னொரு வெள்ளை வேட்டி பேசத் துவங்கியது, “அமெரிக்காவின் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்த விலைவாசி ஏற்றத்தையோ, மக்கள் பிரச்சனைகளையோ தடுத்து நிறுத்தவே முடியாது.” என்கிறார். “உங்கள் மீது உள்ள நல்ல அபிப்ராயத்தினால்தான் கடந்த இரண்டு தேர்தல்களிலும் நமது கட்சிக்கு ஒட்டு போட்டு ஆட்சியில் அமர வைத்தார்கள். இப்போது இந்தப் பிரச்சனையைத் தீர்க்காவிட்டால் அடுத்த தேர்தலில் நாம் ஆட்சிக்கு வருவது சந்தேகம்தான்" என்று தன் பங்குக்கு குரல் கொடுத்தார் ஒரு தாடிவாலா.அதுவரை அமைதியாக இருந்த நான் அருகே இருந்த பானையிலிருந்து நீர் எடுத்து அருந்துகிறேன். குரலை செருமிக் கொண்டு பேசத் துவங்குகிறேன். இவை எல்லாமே உறக்கத்தில்தான் நிகழ்கிறது என்றபோதும் நான் என்ன பேசப் போகிறேன் என்ற ஆவல் எனக்கே தோன்றி நானே என்னை கவனிக்கத் துவங்குகிறேன்.”நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான். நாட்டின் இப்போதைய தேவை பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதும் விலைவாசியை கட்டுக்குள் வைப்பதும்தான். நான் அதற்கு ஒரு யோசனை வைத்திருக்கிறேன்.” என்றதும் அனைவரது கண்களும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. பாதி குடித்து வைக்கப்பட்டிருந்த காபி கோப்பையின் மீது அமர்ந்திருந்த ஈ கூட குடிப்பதை நிறுத்திவிட்டு என்னை உற்று நோக்கியது.


"நான் சொல்லப் போற விஷயம் ஒருவேளை நமது கட்சியில் உள்ளவர்களுக்கும் பாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது. யாரும் இந்த யோசனையை ஏற்றுக் கொள்வார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால் நான் நேற்று குடியரசுத் தலைவரிடம் இதைப் பற்றிப் பேசினேன். அவரும் இந்த யோசனை மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் இதற்கென புதிய அவசர சட்டம் போட்டு உடனே அமலுக்கு கொண்டு வரலாம் எனவும் கூறினார்" பாதகமான விஷயமா, அது என்னவாக இருக்கும் என ஒவ்வொருவரும் சிந்திக்கத் துவங்கியிருந்தார்கள். அப்போது அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த ஏ.ஸி யிலிருந்துஅந்த டைல்ஸ் தரையில் விழுந்த நீரின் சப்தம் துல்லியமாகக் கேட்டது.


கையில் வைத்திருந்த குவளைத் தண்ணீரை காலி செய்துவிட்டு "அந்தத் திட்டம் இதுதான்.” என்றதும் என்னோடு சேர்த்து அந்த ஐந்து அமைச்சர்களும், ஈயும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்கத் தயாரானோம். எங்களோடு கூட்டணியில் சேர அறைக்கு வெளியே ஒரு பல்லியும் தயாராக இருந்தது. “நாட்டில் லஞ்சத்தை ஒழிக்க ஆயிரம் சட்டம் போட்டாலும் செயல்படுத்தினாலும் நம் பிரச்சனைகள் தீரப் போவதில்லை. இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது ஒரு சிலரிடம் ஒளிந்து கிடக்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வது தான்.” என்றதும் 'ஃப்பூ, இவ்வளவுதானா? இதை அந்தக்காலத்திலேயே சிவாஜி படத்துல ஷங்கர் சொல்லிவிட்டார்' என்பது போல ஒரு ஏளனப் பார்வையை தவழ விட்டார் தாடிவாலா.


நான் தொடர்ந்தேன் "அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை நானும் அறிவேன். ஆனால் என்னுடைய யோசனை மூலம் அதை எளிதாக நடைமுறைக்கு கொண்டு வரலாம். இப்போதிருக்கும் ரூபாய்களை செல்லாத பணமாக அறிவித்துவிட்டு ரூபே என்றொரு புதிய பணத்தை அறிமுகம் செய்யப் போகிறேன். இப்போது கையில் வைத்திருக்கும் பணத்திற்கு மாற்றாக இந்த ரூபேயை வங்கிகளில் வந்து பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும் போது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூபாய்கள் வெளியே வந்துதானே ஆக வேண்டும். ஒவ்வொரு பணத்திற்கும் கணக்கும், அதிகப்படியான பணம் வைத்திருப்பவர்கள் வருமான வரி கட்டியிருப்பதற்கான சான்றையும் காண்பித்தல் அவசியம், இன்னும் ஆறே மாதங்களில் பணவீக்கம் என்ன நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.” அந்த ஏ.ஸி யிலும் தாடிவாலாவின் முகத்தில் வியர்வைப் பூக்கள் பூத்திருந்தது. மற்றவர்களுக்கும் உள்ளூர பயம் பரவத் துவங்கியது. “சூப்பரே" என்று கைதட்டி ஆரவாரம் செய்தது கோப்பையின் மேல் நின்றிருந்த ஈ.


டிஸ்கி: இது எனக்குத் தோன்றிய ஒரு கனவு மட்டுமே. இது சாத்தியமா, இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

Friday, July 15, 2016

Blind Date ம் "ஙே" மொமேன்ட்டுகளும்


Blind Date என்பது முன்பின் அறிமுகமில்லாத இருவர் (புகைப்படங்களில் கூட பார்த்திராத) சந்திக்கும் ஒரு நிகழ்வென மேலைநாட்டு கலாச்சாரம் கூறுகிறது.. பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என்று தொழில்நுட்பம் எங்கோ சென்றுவிட்ட காலத்தில் இதெல்லாம் சாத்தியமா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்றும் முன் பின் தெரியாத நபர்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தும் கலாச்சாரம் இந்தியாவில் ஆங்காங்கே இருந்து கொண்டு தானே இருக்கிறது இந்தியாவில். அது எல்லாமே இந்த Blind Date வகையைத் தானே சேரும்?சரி, அதெல்லாம் இருக்கட்டும், நான் கூறவந்தது நான் சென்ற ஒரு Blind Date பற்றி. இந்த Blind Date க்கும் மேற்சொன்ன Blind Date க்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று உறுதியளித்துக் கொண்டு, புதியதோர் விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்ளும் ஒரு குழந்தை மனதுடன் மேலே தொடர்வோம். சத்யம் தியேட்டரில் Blind Date என்ற ஒரு Concept இருக்கிறது. இதில் நாம் டிக்கெட் புக் செய்யும் போது மற்ற படங்களுக்கு புக் செய்வது போல ரிசர்வேஷன் செய்தோ, நேரில் சென்றோ டிக்கெட் வாங்கலாம்.

ஒரே வித்தியாசம், அன்று நாம் பார்க்கப் போகும் திரைப்படம் என்னவென்று நமக்கு சுத்தமாகத் தெரியாது. அது எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கும். பழைய படமாக இருக்கலாம், புத்தம் புதிய படமாக இருக்கலாம், அரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரம் வரை ஓடலாம். அவை கார்ட்டூன் படங்களாக இருக்கலாம், காமரசம் சொட்டும் படமாக இருக்கலாம். அதற்காக முன்கூட்டியே அவர்கள் 18+ டேக் அளித்து பெரியவர்களுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கிறார்கள்.நீண்ட நாட்களாக இதற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணி, பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதற்கு செல்ல வேண்டும் என்ற ஆவலே, என்னவென்று தெரியாமல் ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் த்ரில் அனுபவத்தை உணர வேண்டித்தான்.இந்த வாரம் வேறு எந்தப் படமும் பார்க்கவில்லை என்பதால் முதலில் Blind Date பார்த்துவிட்டு பின்னர் 'தில்லுக்குத் துட்டு' பார்க்கலாம் என்று முடிவு செய்து, Blind Date புக் செய்துவிட்டு அடுத்த படத்திற்கு டிக்கெட் இருக்கிறதா என்று பார்த்தேன். நிறைய இடங்கள் இருந்த காரணத்தால் நேராக சென்று வாங்கிக் கொள்ளலாம், வீணாக முப்பது ரூபாய் ஆன்லைன் புக்கிங்கிற்கு செலவு செய்வானேன் என்று விட்டுவிட்டேன்.

மாலை அலுவலகம் முடிந்து சத்யம் தியேட்டரில் பார்க்கிங் செய்து விட்டு டிக்கெட் கவுண்டர் சென்றேன். அங்கே கியூவில் நிற்கையில் வேறு படங்கள் என்னென்ன ஓடுகிறது என்று பார்த்தபடி இருந்தேன். அப்போது நள்ளிரவுக் காட்சியிலிருந்து "ICE AGE 5" திரையிடப்படுவதாகக் கூற உடனே மனதை மாற்றிக் கொண்டு தில்லுக்குத் துட்டை புறம் தள்ளிவிட்டு ஐஸ் ஏஜ் புக் செய்துவிட்டு அவசர அவசரமாக தியேட்டருக்குள் நுழைந்தேன்.


அங்கு சென்று அமர்ந்ததும் பல்பு தயாராகக் காத்திருந்தது. அங்கே Blind Date ல்  "ICE AGE 5" திரையிடப்பட்டது. படம் முடியும் வரை என்னை நானே திட்டியபடி அமர்ந்திருந்தேன். படம் முடிந்ததும் டிக்கெட் கவுண்டருக்கு விரைந்து அங்கே "Finding  Dory", "sultan' பார்கக வந்தவர்களிடமெல்லாம் ஐஸ் ஏஜ் நல்ல படம் சார், சூப்பரா இருக்கு சார் என்று விளம்பரம் செய்து அந்த  டிக்கெட்டை ஒரு நல்ல ஆத்மா கையில் ஒப்படைத்துவிட்டு வருவதற்குள் "ஆவி" போனது எனக்கு மட்டும் தான் தெரியும். 

Saturday, July 9, 2016

பொதுவில் சொல்லக் கூடிய வார்த்தையா F**K? 18+

Disclaimer : இந்தக் கட்டுரையில் நிறைய F***K வார்த்தைப் பிரயோகம் உள்ளது.


மேற்கத்திய நாகரீகம் மெல்ல மெல்ல நம்மை ஆக்ரமித்துக் கொள்ள, நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டது உடை மற்றும் பழக்க வழக்கங்கள் மட்டுமல்ல. அவர்களுடைய மொழியையும் சேர்த்துதான். ஆனால் இந்த நாகரீக மாற்றத்தை ஏற்றுக் கொள்கையில் நாம் தவற விட்ட விஷயங்கள் சில. சரியான முறையில் புரிந்து கொள்ளப்படாத எந்த ஒரு விஷயமும், தவறான விஷயங்களாகவே புரிந்து கொள்ளப்படும்.


மேலைநாட்டின் தட்பவெப்ப நிலைக்கு தகுந்தாற் போல அங்கு பனிபொழியும் மாதங்களில் கோட் சூட் அணிந்தும், கோடைக் காலங்களில் மெல்லிய ஆடை அணிவதையும் காண முடியும். ஆனால் இந்தியா போன்ற வெப்பநிலை உள்ள தேசத்தில் (மலைவாசஸ்தலங்களைத் தவிர்த்து)  வியர்வை ஒழுக ஒழுக முழுக்கைச் சட்டை அணிவதே சிரமம் என்ற நிலையில் சிலர் கோட் அணிந்து பணிக்குச் செல்வதைப் பார்க்கும் போது அதைப் பார்த்து சிரிப்பதை ஏனோ தவிர்க்க முடிவதில்லை.அதே போல் தான் "so called" மேல் நாட்டிலிருந்து நாம் அரைகுறையாக கற்று வந்த ஒரு வார்த்தை. FUCK. இந்த வார்த்தையின் நேரடி அர்த்தம் வேண்டுமானால் உடலுறவு கொள்வது, வன்புணர்வு என்ற பொருளில் வரும். ஆனால் இந்த வார்த்தையுடன் வேறு வார்த்தைகளை சேர்த்துப் பயன்படுத்தும்போது அதன் பொருள் முற்றிலும் வேறு. அதனைப் பிரித்துப் பார்த்து பொருள் கொள்ளும் அபத்தங்கள் பலவற்றை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

குறிப்பாக "FUCK-off" என்ற சொல்லின் பொருள், கோபத்தில் இருக்கும் போது "கண்ணு முன்னாடி நிக்காத" "ஓடிடு" "இந்த எடத்த விட்டுப் போ" என்றெல்லாம் கூறுவோமே, அதே பொருளில்தான் வரும். அதே போல "I'm Fucked up"  என்ற வரிக்கு நேரடி பொருள் கொள்வது அபத்தம். நான் ஏமாற்றப்பட்டேன், நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்ற பொருளில் வரும்.

 "Why did you bring me to this fucking movie" என்று யாராவது கேட்டால் எதற்காக என்னை இந்த "பிட்டு" படத்துக்கு  அழைத்து வந்தாய் என்று பொருள் அல்ல. இந்த பாடாவதியான/ திராபையான/ மொக்கை படத்திற்கு எதற்கு என்னை அழைத்து வந்தாய் என்பதே சரியான பொருள். இதே போலத்தான் Fucking Design, Fucking Pen, Fucking Art என மோசமான பொருட்களுக்கு எல்லாம் முன்னால் Fucking என்ற  வார்த்தையை சேர்த்துப் பயன்படுத்துவது மேலை நாகரீகம்*.இது மட்டும் என்றில்லை, What the Fuck? என்ற சொல் அதிர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு எமோஷனல் வார்த்தைதான். அதே போல "Shut the Fuck Up"  என்பதும்  கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு சொல்லே தவிர உடலுறவு என்ற வார்த்தைக்கு பத்து வீடு தள்ளி கூட இல்லை என்பதுதான் உண்மை. அதனால், சரியான முறையில் புரிந்து கொள்ளப்படாத எந்த ஒரு விஷயமும், தவறான விஷயங்களாகவே புரிந்து கொள்ளப்படும். இது மோசமான வார்த்தை, இதெல்லாம் பேசக் கூடாது. பேசுபவர்கள் எல்லோரும் "பீப்" சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்என்றெல்லாம் கிடையாது என்ற  புரிதல் வேண்டும்.

மேலை நாகரீகம் என்றதும் அங்குள்ள எல்லோரும் இப்படித்தான் பயன்படுத்துவார்கள் என்று அர்த்தமல்ல. அலுவலகங்களில் இந்த சொற்களின் பயன்பாடு அதிகம் இல்லையென்றாலும் பொது இடங்களில்
குறிப்பாக இளைஞர்களிடையே பரவலாக கேட்கக் கூடிய சொற்கள் தான் இவை. ஆயினும் இவற்றை குழந்தைகள் (பருவ வயதிற்கும் குறைவான ) பயன்படுத்துவதை  பெற்றோர்களோ, பள்ளி நிர்வாகமோ ஊக்குவிப்பதில்லை. (அவை மரியாதைக் குறைவான சொற்கள் என்பதால்)


பின்குறிப்பு: இது Knowledge Sharing என்ற முறையில் பகிர நினைத்த சில விஷயங்களே தவிர இதில் கூறப்பட்ட வார்த்தைகளை நம்ம ஊரில் உபயோகித்து கன்னம் பஞ்சரானால் கம்பெனி பொறுப்பேற்காது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...