Saturday, March 30, 2013

சென்னையில் ஒரு நாள் - திரை விமர்சனம்

                             

                           மலையாளத்தில் வெளிவந்து சிறப்பாக ஓடிய "ட்ராபிக்" எனும் திரைப்படத்தின் ரீமேக்கே இந்த "சென்னையில் ஒரு நாள் திரைப்படம். பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பது இதன் சிறப்பு.



                                   உடல் உறுப்புகளை தானம் செய்வதை மையக் கருத்தாக கொண்ட இந்த படம் நகர்வது, ஒரு சாலை விபத்தை மையமாக கொண்டு. தன் மகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்தும் தொலைக்காட்சி பேட்டி  கொடுத்துவிட்டு வரும் நடிகர் ஷைனிங் ஸ்டார் பிரகாஷ் ராஜ். இவரது மனைவி ராதிகா.. இவரை பேட்டி எடுக்க தன் நண்பனின் டூ-வீலரில் செல்லும இளைஞன். சில விஷமிகளால் துரத்தப்பட்டு பின் அதனால் வாகனத்தை வேகமாக செலுத்தி இளைஞனின் மரணத்திற்கு காரணமாகும் ஒரு பெண். இந்த விபத்தில் மரிக்கும் இளைஞனின் இதயத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகரின் மகள், இதை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சேர்க்க உதவும் காவலர் சேரன் மற்றும் டாக்டர் பிரசன்னா.. இந்த முயற்சிக்கு ஆதராமாக நிற்கும் கமிஷனர் சரத்குமார்..



                                   மலையாளத்தில் திரைக்கதை அசுர வேகத்தில் நகரும்.. ஒவ்வொரு நொடியிலும் நமக்கு இதயத்துடிப்பு  அதிகமாகி அந்த இதயத்தை கொண்டு சேர்க்க வேண்டி நாமும் வேண்டுவோம். ஆனால் இங்கே ம்ஹும், ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை, மிடுக்காக இருந்த போதும் எடுப்பான நடிப்பை வெளிப்படுத்தாத சரத், வாங்கிய சம்பளத்தை விட முன்னூறு மடங்கு அதிகம் நடித்து (?!!) சொதப்பியிருக்கும் சேரன், இளமையான இனியா,  பிரசன்னாவை விட கெஸ்ட் ரோலில் வரும் சூர்யா கூட அதிகம் பேசுகிறார். பின்னணி இசையும் பின்னடைவே.. இப்படி  படத்திற்கு  பலமாக இருக்க வேண்டிய எல்லாமே பலவீனமாகிவிட்ட போதும், சிறப்பான கதையும், அளவான நடிப்பை வெளிப்படுத்தி கொஞ்சம் தாங்கிப்பிடிக்கும் ராதிகா, "பூ" பார்வதி, ஜெயபிரகாஷ் மற்றும் அவர் மனைவி லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..



                                      சென்னையில் ஒரு நாள், இன்னும் கொஞ்சம் நல்ல நாளாக இருந்திருக்கலாம்..


60 / 100

Friday, March 22, 2013

What's Your தாய்மொழி, Dude?

                       

                            பல ஆண்டுகளாக என் மனதை அரித்து வரும் ஒரு கேள்வி இது. தாய்மொழி என்பது என்ன?  தாயின் குடும்பத்தார் வழிவழியாக பேசி வரும் மொழியா? இல்லை தாய் பேசும் மொழியா? ஒருவேளை தாய் பல மொழிகள் பேசுபவராயின் அந்த பிள்ளையின் தாய் மொழி என்ன? எதை வைத்து ஒரு குழந்தையின்/ ஒருவரின் தாய்மொழி அறியப்படுகிறது.

                             நம்மில் எவ்வளவு பேருக்கு, அவரவர் தாய்மொழியில் (அவ்வாறு சொல்லப்பட்ட மொழியில்) பேசுவதற்கும், எழுதுவதற்கும் தெரியும்? என்னைப் பொறுத்த வரை தாய்மொழி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சிறு வயதில் இருந்து கற்று தேர்ந்து, நன்றாக எழுதவும், படிக்கவும், மற்றவர்க்கு அந்த மொழியில் உள்ள சுவையினை பகிர்ந்து கொடுக்கவும் இயல வேண்டும்  ஒரு பத்து நிமிடமாவது கொடுக்கப்பட்ட ஒரு தலைப்பில் தடுமாற்றமில்லாமல் பேசத் தெரிந்திருக்க வேண்டும். எந்த மொழியில் அவர்களால் அதை சிறப்பாக செய்ய முடிகிறதோ அதுவே அவர்களின் தாய் மொழி..

                              எத்தனை பேரால் இந்த கருத்தினை ஒத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சிறிய உதாரணம் கூற விரும்புகிறேன். என் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் குடிபுகுந்து சுமார் பதினைந்து வருடங்கள் ஆகின்றது. அவருடைய மகள் அங்கேயே பிறந்து, படித்து வளர்ந்தவள். என்னதான் நண்பரும் அவர் மனைவியும் அந்தப் பெண்ணுக்கு வீட்டில் தமிழ் சொல்லிக் கொடுத்தாலும், அந்தப் பெண்ணுக்கோ உரையாடல்களில் ஆங்கிலம் கைகொடுக்கும் அளவுக்கு தமிழ் வருவதில்லை.

                                எனக்கு தெரிந்த எத்தனையோ நண்பர்கள், அவர்களுடைய "தாய்மொழி" என்று கூறிக் கொள்ளும் மொழியில் நன்றாக பேசத் தெரிந்தாலும், அந்த மொழியில் எழுதவோ, படிக்கவோ தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் ஒரு நல்ல இசை கேட்க, ரசிக்க அவர்கள் வேறு மொழியை தேர்ந்தெடுப்பதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். எதற்காக, யாருக்காக இந்த வெளிவேஷம்..

                                  மற்றவர்களின் சங்கதி எதற்கு,  எனக்கு தாய்மொழி என்று சொல்லப்பட்ட மொழியை என்னால் புரிந்து கொள்ளவும் பேசவும் முடியும் என்றாலும், எனக்கு தமிழ் மொழி பிடித்த அளவுக்கு, புரிந்த அளவுக்கு, மற்ற மொழிகள் பிடிபட்டதில்லை. இப்பொழுதும் என் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்த எனக்கு தமிழ் போல் ஒரு சிறந்த மொழி இருப்பதாய் தோன்றவில்லை. ஆதலால் எனை வளர்த்த தமிழையே  என் தாய்மொழி என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.. நீங்க எப்படி?




Tuesday, March 19, 2013

தலைநகரம்..

 தலைநகரம்..



செல்வம் தழைத்திடும் ஒரு ஊராம்,
தலைநகரம் என்றதற்கு ஒரு பேராம்..
வித்தகர்கள் பலரும் அங்கு ஒன்று கூடி- போட்டிடும் 
திட்டங்கள் வந்திடும் மக்களை நாடி..

வானிடிக்கும் கட்டிடங்கள், நாற்கர சாலைகள்,
வண்ண வண்ண விளக்குகள், கம்பத்தின் கீழ் ஏழைகள்..
உலகக் கோப்பைகள் நடந்திடும் இவ்விடத்தில்,
உலக வறுமைப் பட்டியலிலும் முதலிடத்தில்..

காவல்துறை ஒரு சிறப்பாம் நம் நாட்டில்-  பாலியில் 
கொடுமைகள் பற்றி வந்திடுதே தினம் ஏட்டில்..
தலைமுறைகள் தாங்கும்படி ஏற்கனவே- சேர்த்திட்ட 
சொத்துக்களால் பணத்தின் நிறம் ஆனது பார் கறுப்பெனவே..

அரசியலால் ஆதாயம் மக்களுக்கே-அரசாள்வோர் 
வாரிசுகளாய் பெற்றிட்ட அவர் மக்களுக்கே..
செல்வம் தழைத்திடும் ஒரு ஊராம்,
தலைநகரம் என்றதற்கு ஒரு பேராம்..


இந்த கவிதை "அதீதம்" மின் இதழில் வெளியாகியுள்ளது..




Sunday, March 17, 2013

வத்திக்குச்சி- திரை விமர்சனம்

                                      உதவி செய்ய நல மனது மட்டும் தான் வேண்டும், முன்பின் அறிந்திருக்க வேண்டிய  இல்லை என்ற நல்ல கருத்தை கொஞ்சம் வன்முறையின் துணையோடு சொல்ல வந்திருக்கும் படம் தான் வத்திக்குச்சி.



                                        ஆட்டோ ஒட்டி வாழ்க்கையை ஓட்டும் நாயகன், ஸ்போக்கன் இங்க்லீஷ் கிளாசில் ஆங்கிலம் கற்று காதல் வயப்படும் எதிர் வீட்டு பெண் நாயகி, நாயகனை கொல்வதற்காக அவனை விடாமல் துரத்தும் மூன்று குரூப்புகள்,  அவர்கள் நாயகனை ஏன் கொல்லத் துடிக்கிறார்கள் என்ற சஸ்பென்சை வைத்துக் கொண்டு கதை சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாயகன் தப்பித்தானா? அவன் காதல் கை கூடியதா? என்ற கேள்விகளே கிளைமாக்ஸ்.

               
                                     புதுமுகம்  திலீபன் (இவர் இயக்குனர் முருகதாசின் தம்பியாம்),  முக பாவங்களில் இன்னும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. காதல் காட்சிகளில் ஏனோ அப்பாஸை நினைவு படுத்துகிறார். அசாத்தியமான உயரம் சாதகமான விஷயம் என்றாலும் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கடைசி காட்சிகளில் தேமே என்று நிற்பது பலவீனம். எனினும் முதல் படம் என்பதால் மன்னிக்கப்படலாம்.


                                        அஞ்சலி வழக்கம் போல் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். "என்னை பலபேர் பார்த்து காதலிக்கிறான். அவன்கிட்ட எல்லாம் நான் போய் கூடாதுன்னு சொல்ல முடியுமா? அது மாதிரி தான் உன்கிட்டயும் சொன்னேன்" என்று திலீபனைப் பார்த்து கூறும்போது அவர்  கண்களே ஆயிரம் கவிதைகள் பேசுகிறது.



                                         விறுவிறுப்பான த்ரில்லர் கதையை கொடுக்க இயக்குனர் கின்ஸ்லின் முயன்றிருக்கிறார். கதைக்கென அவர் தேர்வு செய்த நடிகர்கள் ஜெகன், ஜெயப்ரகாஷ், சம்பத், சரண்யா, ராஜா என ஒவ்வொருவரும் அருமை. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் மற்றவர்களை துவம்சம் செய்வதை நம்பும்படியான காட்சிகளை வைத்தது வித்தியாசமான அதே சமயம் புத்திசாலித்தனமான காட்சியும் கூட. ஜிப்ரானின் இசையில் மூன்று பாடல்கள் இனிமை. இந்த வத்திகுச்சி சட்டுன்னு பத்திகிச்சி..!

70 / 100



Saturday, March 16, 2013

பரதேசி - திரை விமர்சனம்

                                 
                                    ஆயிரம் கோடி செலவில் எடுக்கப்பட்ட அவதார் எனும் கற்பனைக் காவியத்தை ரசிக்கிறோம்.. இருபது, முப்பது கோடிகளில் நிஜத்தினை எதார்த்தமாக எடுக்கப்பட்ட பாலாவின் பரதேசி படத்தை உங்களில் எத்தனை பேர் பார்க்கலாம்னு இருக்கீங்க? குலுங்க வைக்கும் காமெடியோ,  குத்துப் பாட்டுகளோ, அதிரடி சண்டைகளோ எதுவுமின்றி வழக்கமான பாலாவின் திரைப்படமாக வந்திருக்கிறது..


                                       கதை என்று பார்த்தால் ஓரிரு வரிகளுள் அடங்கிவிடக் கூடிய விஷயம் தான். ஆங்கிலேயர்கள் நம் நாட்டின் செல்வங்களை சுரண்டி நம்மையே அடிமையாக்கி அடக்கியாண்டார்கள் என்பது தான் அது. கதைக்களம் வால்பாறை தேயிலை தோட்டத்திற்கு பல்வேறு கிராமங்களிலிருந்தும் மக்களை சொற்ப பணத்திற்கு அவர்கள் காலம் முடியும்  வரை அடிமைகளாய் பணி செய்து கிடக்க வேண்டும். அங்கிருந்து தப்பிக்க நினைப்பவர்களை காலின் நரம்பை அறுத்து நடக்க முடியாமல் செய்து விடுவது.


                                     முதல் பத்து நிமிடங்களில் "ஓட்டுபொறுக்கி" என ஊராரால் அழைக்கப்படும் அதர்வா மற்றும் அவருடைய அத்தை மகள் அங்கம்மா (வேதிகா), இவர்களுக்கிடையில் ஏற்படும் சீண்டல்களும், காதல் காட்சிகளும் தான்.. அதற்குப் பிறகு அந்த கிராமத்துக்கு வரும் கிங்காணி ( ஆங்கிலேயரின் ஏஜன்ட்) ஊர் மக்களின் வெள்ளந்தியான மனதை பயன்படுத்தி அவர்களை தொலைதூரத்தில் இருக்கும் பச்சைமலை எஸ்டேட்டிற்கு அழைத்து செல்கிறார். போகிற வழியில் இறப்பவர்களை பற்றி கவலைப்படாமல் 48 நாட்கள் பயணித்து தேயிலை தோட்டத்தை அடைகிறார். அங்கு சென்ற பின் தான் மக்களுக்கு தாம் ஒரு அடிமையாகி விட்டதாய் உணர்கின்றனர்.
                         

                                     அவர்கள் கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை தங்குமிடம், மருத்துவ செலவு, மந்திரித்தல் மற்றும் உணவுக்காக பிடுங்கிக் கொள்கிறார். மேலும் அவர்களை சித்ரவதை செய்தும், பெண்களை ஆங்கிலேய முதலாளிகளுக்கு பரிமாறவும் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் கொள்ளை நோய் பரவும் போதும், ஒரு மருத்துவரை அனுப்ப, அவரோ தன் மதத்தை பரப்புவதிலே நாட்டம் காட்டுகிறார்.. வாழ்க்கையே ஒரு வழிப் பாதையான பிறகு அந்த மக்கள் படும் பாட்டை அழகாக செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார் பாலா. கிளைமாக்சை இதைவிட சிறப்பாய் யாராலும் கொடுத்துவிட முடியாது.


                                      அதர்வா தேசிய விருது கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பிரமாதப் படுத்தியிருக்கிறார். உடல்மொழி, உச்சரிப்பு, தோற்றம் என கதாப்பாத்திரத்துடன் கச்சிதமாய் பொருந்துகிறார். வேதிகா, தன்ஷிகா, அதர்வாவின் பாட்டி, நண்பர் (உதய்) மற்றும் அவர் மனைவியாய்  வருபவர் (ரித்விகா) இப்படி ஒவ்வொருவரும் நெஞ்சில் நிறைகின்றனர்.  ஜீவி பிரகாஷ் அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார்.வைரமுத்துவின் ஒவ்வொரு வரிகளும் கூர்மை.. ஒரு புதினத்தை படமாக்கியிருந்தாலும் அதன் வனப்பும் சோகமும் கொஞ்சமும் குறையாமல் கொடுத்த பாலாவுக்கு ஒரு ஜே!!


93 / 100



Wednesday, March 13, 2013

TALAASH (Hindi) - திரை விமர்சனம்

                                    அமீர் கானின் சிறப்பான நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் இது. வசூலில் பெரும் சாதனை படைக்கவில்லை என்றாலும் என்னைப்  பொறுத்தவரை இது ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர்.


                               
                                     திரைப்படத்தின் முதல் காட்சியே படத்தின் பலம். நள்ளிரவில் கடலின் ஓரமாக இருக்கும் சாலையில் வேகமாக வரும் ஒரு கார், அதே வேகத்தில் பாதை மாறி கடலில் தவறி விழுகிறது. மறுநாள் காலையில் உள்ளிருந்து கார் வெளியேற்றப்படும் போது அதனுள்ளே இறந்த நிலையில் ஒருவர் கிடக்கிறார். இந்த கேஸை கையாள வரும் இன்ஸ்பெக்டர் சுரான் (அமீர்கான்) தன் விசாரணையில், இறந்தவர் குடி மற்றும் போதையிலோ இல்லை என்பதையும், அவருடன் யாரும் பயணிக்கவில்லை என்பதும், மேலும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையிலும் இல்லை என்பதும் அறிந்து குழம்புகிறார்..



                                       அப்போது அவருக்கு உதவ வருவது ரோசி (கரீனா கபூர்) எனும் பாலியல் தொழிலாளி. கொலை சம்பந்தப்பட்ட விவரங்களை சுரானுக்கு அளிக்கிறார். இதற்கிடையே சுரானுக்கும் அவர் மனைவி ரோஷினிக்கும் (ராணி முகர்ஜி) மனஸ்தாபம் வருகிறது.. இதற்கு காரணம் சில வருடங்களுக்கு முன் கடலில் தவறி விழுந்து இறந்து போன அவர்கள் பிள்ளை கரன் ஆவியாக வந்து பேசுகிறான் என்று ரோஷினி சொல்வதை சுரான்  நம்ப மறுப்பதால். இந்த கொலையின் முடிச்சுகளை அமீர்கான் எப்படி அவிழ்க்கிறார் என்பது தான் கதை.



                                        தமிழில் கமல் எப்படியோ, அது போல ஹிந்தியில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டவர் அமீர்கான்.  மனைவியிடம் ஆவிகளுடன் பேசுவது வெறும் பொய் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என கூறும் இடத்தில் அவருடைய நடிப்பு, சிறப்பு. ராணி முகர்ஜி, இவருக்கு படத்தில் அதிகம் வேலை இல்லையென்றாலும் தன் பங்கை நன்றாக செய்திருக்கிறார். கரீனா கபூர் அசத்தல் நடிப்பு. படத்தில் இவர் வெறும் கிளாமருக்காக சேர்க்கப் பட்டிருக்கிறார் என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் கடைசியில் இவரே கதாநாயகி என்று உணர வைக்கிறார்..



                                          தலாஷ் என்றால் தேடு என்று அர்த்தம். இந்த நல்ல படத்தை இணையத்தில் தேடாமல்,  DVD இல், அதுவும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம்..

80 / 100


Tuesday, March 12, 2013

PEPSI-IPL 2013 - ஒரு கண்ணோட்டம்

                 ஏப்ரல் 3 தொடங்கி மே மாதம் 26 முடிய சுமார் இரு மாதங்கள் நடக்கவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்..




                ஆறாவது வருடமாக தொடர்ந்து நடக்கவிருக்கும் இந்த தொடரில் கலந்து கொள்ளவிருக்கும் அணிகளைப் பற்றி பார்ப்போம். சென்ற முறை டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் இருந்த அணி இப்போது சன் குழுமம் சார்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எனும் பெயரில் விளையாடப் போகிறது..





சென்னை சூப்பர் கிங்ஸ்

 கிட்டத்தட்ட குட்டி இந்திய அணி போல் காட்சியளிக்கிறது. ஆறாவது வருடமாக தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து தோனி.  சுழலுக்கு அசத்தல் மன்னன் அஷ்வினும், ஜடேஜா மற்றும்  ஜகதியும் கைகொடுக்க, துவக்க வீரர் முரளி விஜய் மற்றும் மைக் ஹஸ்ஸி அதிரடி கிளப்ப, ரெய்னா, பத்ரிநாத், அனிருதா, டூ பிளஸ்ஸி , பிராவோ மிடில் ஆர்டரில் கலக்க, வேகத்துக்கு குலசேகரா, நன்னேஸ், அல்பி மார்கல் இருக்கிறார்கள். அறிமுக வீரர் பாபா அபரிஜித், இவர் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியவர்..

ஹைலைட்:   டூ பிளஸ்ஸி , ரெய்னா, அஷ்வின், தோனி


டெல்லி டேர் டெவில்ஸ்

 டெல்லியின் கேப்டனாக ஜெயவர்தனே அல்லது யோகன் போதா நியமிக்கப்படலாம். இந்தப் போட்டிகளில் வீரு  வீறுகொண்டு எழுந்தால் அவருடைய கிரிக்கட் எதிர்காலத்துக்கு நல்லது. குறிப்பிடத்தக்க வீரர்கள் வருண் ஆரோன், அஜித் அகர்கர், உன்முகத் சந்த், நெஹ்ரா, மார்னெ  மார்கல் , பீட்டர்சன், உமேஷ் யாதவ், ஜெஸ்ஸி  ரைடர், வார்னர் என மிரட்டும் அணியாய்  இருக்கும் இவர்கள் ஓரணியாய் விளையாடினால் சாதிக்கலாம். முஸ்தாக் அகமது ஸ்பின் கோச்சாக நியமிக்கப்படிருக்கிறார் .. சென்ற முறை கடைசி இடத்தை பிடித்த அணி என்பது குறிப்பிடத்தக்கது..

ஹைலைட்:   வார்னர், மார்கல் மற்றும் பீட்டர்சன்.


கிங்ஸ் XI  பஞ்சாப்

 கில்கிறிஸ்ட், பியுஷ் சாவ்லா, பிரவீன் குமார், டேவிட் ஹஸ்ஸி  தவிர்த்து பார்த்தால் இந்த அணி மிகவும் வலிமை குறைந்த அணியாக தெரிகிறது. ஆனால் டுவென்டி 20 இல் எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.. கில்கிறிஸ்ட் தலைமை ஏற்கலாம்.





ஹைலைட்:  அணிக்கு புதுவரவான அசார் மெகமூத், கில்கிறிஸ்ட் மற்றும் ஹஸ்ஸி.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 நடப்பு சேம்பியனாக களமிறங்கும் இந்த அணியின் தலைமையை கம்பீர் தொடர்ந்து ஏற்பார் என தெரிகிறது. பாலாஜி, ப்ரெட் லீ, அப்துல்லா, சுனில் நரேன், பேட்டின்சன், சாகிப் அல் ஹசன் பவுலிங்கை கவனித்து கொள்ள மெக்கலம், மார்கன், கல்லிஸ்,யூசுப் பதான் என சரிவிகித அணியாக இருக்கிறது. புதுமுக வீரர் ஷமி  சாதிக்கலாம்.


ஹைலைட்:   பதான், மெக்கலம், பேட்டின்சன்.


மும்பை இந்தியன்ஸ்

 புதிய வரவு மற்றும் கேப்டனாக களமிறங்குகிறார் ரிக்கி பாண்டிங். மலிங்கா, ஹர்பஜன், அபு நசீம் , மிட்சல் ஜான்சன், ஓஜா, ஓரம், முனாப் பவுலிங்கயும், ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, தினேஷ் கார்த்திக் பேட்டிங்கயும் கவனித்துக்கொள்ள இந்த முறையும் மும்பை இந்தியன்ஸ் அணியே மிரட்டல் அணியாக உள்ளது.





ஹைலைட்:   சாதனை மன்னன் சச்சின், ரிக்கி, மலிங்கா..


புனே வாரியர்ஸ்

அநேகமாக யுவராஜ் கேப்டனாக இருக்கப் போகும் இந்த அணிக்கு  "தாதா" கங்குலியின் இழப்பு ஒருபுறமிருக்க, ஸ்மித், கிளார்க், டெய்லர், சுமன், மாத்யுஸ், மென்டிஸ், புவனேஸ்வர் குமார் என மேட்ச் வின்னர்கள்  அதிகம் இல்லாத அணியாக உள்ளது. அபிஷேக் நாயரின் வரவு அணியை பலப்படுத்தலாம்.

ஹைலைட்:   யுவராஜ், உத்தப்பா, கிளார்க் மற்றும்  ஸ்மித்
                                   

ராஜஸ்தான் ராயல்ஸ்

 ராகுல் டிராவிட்  தலைமையில் ( அவரே கோச்சாகவும் செயல்படுவார்) வாட்சன், ரகானே, ஷான் டெய்ட், ஸ்ரீசாந்த்,பிடில் எட்வர்ட்ஸ் தவிர பெரும் புள்ளிகள் யாரும் இல்லை என்றாலும், முதல் தொடரில் பட்டம் வென்று சாதித்ததை மறக்க முடியாது. வார்னேவின் இழப்பு பெரியது என்றாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.




ஹைலைட்:   டிராவிட், ரகானே மற்றும் வாட்சன்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

வருங்கால இந்திய கேப்டன் என வர்ணிக்கப்படும் விராட் கோஹ்லி கேப்டனாக தலைமை ஏற்கும் இந்த அணியில் அதிரடி மன்னன் கெயில், டி வில்லியர்ஸ், தில்சன், ஜாகிர் கான், முரளிதரன், புஜாரா, ஆர்.பி.சிங், ரவி ராம்பால், வெட்டோரி, வினய் குமார் என பல மேட்ச் வின்னர்களை கொண்ட பலம் பொருந்திய அணி. இந்த வருடம் ஆவியின் ஆதரவு பெற்ற அணியும் கூட..

ஹைலைட்:   விராட், கெயில், முரளிதரன் மற்றும் வெட்டோரி.
                                   

சன்ரைசர்ஸ் ஹைதரபாத் 

 புதிய அணி, புதிய தலைமை, புதிய பெயர் என அமர்க்களமாக களமிறங்கும் இந்த அணியில் டேல் ஸ்டைன், கேமரூன் ஒயிட், சங்ககாரா, டேரன் சமி,  சுதீப் தியாகி, இஷாந்த், பார்த்திவ் பட்டேல், அமித் மிஸ்ரா, ஷிகார் தவான், நாதன் மெக்கலம், டுமினி என ஓரளவு நல்ல வீரர்களைக் கொண்டுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் இவர்கள் வெற்றிப் பயணத்தை தொடங்கலாம்..

ஹைலைட்:  டேல் ஸ்டைன், பார்த்திவ் மற்றும் சங்ககரா..



                                        ட்வென்டி 20 பொறுத்த வரை வெற்றி வைப்பை கணிப்பது கடினம்.. ஒவ்வொரு நாளின் ஆட்டத்தை பொறுத்தே அது அமையும். பெங்களூர் மற்றும் சென்னைக்கு என் ஆதரவு.. உங்க ஆதரவு யாருக்கு??



Sunday, March 10, 2013

18th EUROPEAN FILM Festival - மகளிரை கொண்டாடும் திருவிழா

                                 18th  ஐரோப்பிய திரைப்பட திருவிழா  கோவையில் கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் குமரகுரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாலை நேரங்களில் திரையிடப்படுகிறது. கோவையில்  தொடங்கும் இந்த விழா இந்தியாவின் பல்வேறு இடங்களில் திரையிடப்படுகிறது. தமிழ்நாட்டில் நம்ம கோவையில் திரையிடப்படுவது சிறப்பு. சென்னையில் ஏப்ரல் 5 திரையிடப்படுகிறது. (அனைவருக்கும் அனுமதி இலவசம்..)


                                 மகளிர் தினத்தில் துவங்கிய இந்த விழா பெண்களை போற்றும் விதமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து திரையிடுகிறது. பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களையும், அங்கு வாழும் மனிதர்களின் பழக்க வழக்கங்களும், உணர்வுகளும் பற்றி புரிந்து கொள்ள ஓர் வாய்ப்பாய் இருக்கிறது.. ( ஹாலிவுட் படங்கள் மட்டுமே உலக சினிமா என்று தவறாய் புரிந்து கொண்ட சில திரை ஞானிகள் இந்த படங்களை பார்க்கும் போது புரிந்து கொள்வார்கள்..)


                                  எனக்கு இப்படி ஒரு திரைத் திருவிழா நடைபெறுவதை அறிவித்த நண்பர் உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. கல்லூரியின் உள்ளே திரையிடப்படுவதால் கலை உணர்வு மிக்க காட்சிகள் காண்பிக்கப் பட மாட்டாது  என்பது சில திரை ஆர்வலர்களுக்கு வருத்தமான விஷயம்.. இங்கு நான் பார்த்து ரசித்த சில படங்களை அடுத்த பதிவுகளில் பகிர்கிறேன்..

      

Saturday, March 9, 2013

9ன்பதுல சனி.. ச்சே குரு - திரை விமர்சனம்



                                     வெள்ளிக் கிழமையானாலும் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக மாணவிகள் கூட்டம். ( மகளிர் தினத்தை கொண்டாடுவதற்காக வந்துருப்பாங்களோ? ). ஆனா கொண்டாடுவதற்கு தவறான படத்தை தேர்வு செய்துவிட்ட குற்ற உணர்வு அவர்கள் படத்தின் இடைவேளையிலேயே தெறித்து ஓடியதிலிருந்து தெரிந்தது. நாமதான் சற்றும் மனம் தளராத ஆவியாச்சே, படத்தை முழுசா பாத்துட்டு தான் வெளிய வந்தோம். (ஆமா தாயகம் அப்படின்னு கேப்டனின் ஒரு திரைக்காவியம், அதையவே முழுசா பாத்தவங்க.. இதெல்லாம் என்ன, ஜுஜுபீ)


                                        கதை என்னன்னா, ஹலோ, எங்கே க்ளோஸ் பண்ண பாக்கறீங்க? உள்ள வந்துடீங்கள்ள, முழுசா படிச்சுட்டு தான் போகணும்.. படம் படு மொக்கைன்னாலும் அதுல டைரக்டர் சொல்ல வர்ற மெசேஜ் சூப்பர். (அது என்னான்னு இங்க நான் சொல்ல போறதில்லே).. படத்தின் பெயருக்கு கீழ 4 இடியட்ஸ் அப்படீன்னு போட்டிருக்கு.. நானும் படம் முடியற வரை என் பக்கத்துல உக்கார்ந்த மூணு பேரையும் திரும்பி பார்த்துகிட்டே இருந்தேன்..



                                        சரி கதைக்கு வருவோம்.. முதல் காட்சியிலேயே பவர் ஸ்டார் ஒரு பாடலுக்கு வருகிறார்.. என்ன கொடுமை சார்ன்னு யோசிச்சுகிட்டே படம் பார்த்து முடிக்கும் போது அந்த பாடலும் இல்லேனா படம் இன்னும் மோசமாயிரும்க்குனு புரிஞ்சுது. வினய் , சத்யன், பிரேம்ஜி, அரவிந்த் இப்படி ஆளாளுக்கு மொக்கை போடுகிறார்கள்.. அட நம்ம தமிழ்படம் மாதிரி இருக்கேன்னு நினைக்கும் போது, லொள்ளு சபா சுவாமிநாதன் வந்து.. இல்ல இது லொள்ளு சபாவின் மொக்கை வெர்ஷன்ன்னு சொல்றார்.


                                          நான் பார்த்த திரையரங்கின் அருகிலேயே நான்காம் பிறையும் ஓடிக் கொண்டிருந்ததால் மக்களுக்கு தப்பிச் செல்லும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. என்னடா கதைய சொல்லாம  இவன் ஏதேதோ சொல்லிக்கிட்டு இருக்கான்னு பாக்கறீங்களா, அப்படி ஒன்னு இருந்திருந்தா சொல்லியிருக்க மாட்டேனா??


Friday, March 8, 2013

நான்காம் பிறை (3D)- திரை விமர்சனம்

                               கொஞ்ச நாள் முன்னாடி, பேட்மேன் கதைய எடுக்கறதா சொல்லி ஒரு இயக்குனர் காமெடி படம் எடுத்திருந்தார்.. இப்போ மலையாள இயக்குனர் வினயன் புகழ்பெற்ற டிராகுலா எனும் காவியத்தை காமெடியாக கொ(கெ)டுத்திருக்கிறார்.



                               ருமேனிய டிராகுலா, மலையாள மாந்தரிகம், ஹீரோ இன்ட்ரோ  சாங், ஒரு ரொமேன்டிக் சாங், ஒரு பைட் இப்படி ஒரு குப்பை படத்திற்கான எல்லா அம்சங்களும் நிறைந்த திரைச்சித்திரம்.. இந்த படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நினைத்த போதும் கடும் உழைப்பை சிந்தி (உறிஞ்சி?) நடித்திருக்கும், டிராகுலாவாக வரும் நாயகன்  சுதீர் மற்றும் நாயகியின் தமக்கையாக வரும் ஷ்ரத்தா தாஸ் ஆகியோருக்காக இந்த விமர்சனம்... (மேலும் என் வாசகர்களை இந்தப் படத்தை தயவு செய்து திரையரங்கில் சென்று பார்த்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று சொல்லவும் தான்)


                               கதை- தேனிலவுக்காக ருமேனியா செல்லும் ஹீரோ தான் சென்ற வேலையை விட்டுவிட்டு டிராகுலாவுடன் பேச முயல அது அவனைக் கொன்று விட்டு அவன் உடலில் புகுந்து கொள்கிறது.. ருமேனியா போர் அடித்துவிட்டதோ என்னவோ, சுற்றிப் பார்க்க சென்னை மாங்காட்டுக்கு வருகிறது டிராகுலா. வந்த  இடத்தில் கதாநாயகியை பார்த்து ( மாவீரன் ராம்சரண் காஜலை பார்ப்பது போல்) முன் ஜென்மத்தில் தன் காதலி என்று கண்டுபிடிக்கும் போது "உலகத்துல எவ்வளவோ பொண்ணுக இருக்கும் போது நீ ஏன் ஜெஸ்ஸிய  லவ் பண்ணினே" என்று கேட்க தோன்றுகிறது..


                              அப்புறம் என்ன, அவரை அடைவதற்காக அவரது அக்காவை டிராகுலாவாக மாற்றுகிறார் (என்ன லாஜிக்கோ?) தடுக்க வரும் பூசாரியை அடித்து  கொள்கிறார்.. (நம்ம சிங்கம் படத்துல வில்லன் கிட்ட டயலாக் பேசிக்கிட்டே  வர்ற சூர்யா திடீர்னு அப்பாவியா பின்னாடி நிக்கிற ஒருத்தர அடிப்பாரே அது மாதிரி).. படத்துல கதாநாயகிய காதலிக்கும் ஒரு டம்மி பீஸ் ( அப்பாஸ போட்டிருக்கலாம்)  மற்றும் மனோதத்துவ நிபுணர் பிரபு, மந்திரவாதி நாசர் கூட்டணி ஒன்று சேர்ந்து டிராகுலாவை சூரிய வெளிச்சத்தில் காய வைத்து வடாம் போடுவது தான் கிளைமாக்ஸ்.. திரையரங்கை விட்டு நாம் வெளிவரும் போது மனதில் நிற்பது அநியாயமாய் இழந்து விட்ட நூற்றி நாற்பது ( 120+ 3D glass  20) மட்டுமே!!

30 / 100



Thursday, March 7, 2013

பெண், ஆணுக்கு சரிநிகரல்ல!!




ணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை 
காணென்று பாரதி தெற்றாய் செப்பினானோ ??

பிள்ளையாய், தங்கையாய், தோழியாய் 
அன்னையாய், அன்பில் சிறந்த பெண்கள்!

ன்முகம் கொண்ட பல்கலைக்கழகமாய் 
பல துறையிலும் அசத்திடும் பெண்கள்!

பிள்ளைகளைப் பேணி, பகலில் பணி  செய்து,
இரவில் இல்லத்தின் ஒளிவிளக்காகும்  பெண்கள்!

தந்தை, கணவன், தோழன், தமையன் 
ஒவ்வோர் ஆணுக்கும் தோள் கொடுக்கும் பெண்கள்!

பிள்ளையெனும்  பெருஞ்செல்வம் பெற்றெடுக்கும் 
மாட்சிமை பொருந்திய பெண்கள் !

ஆணுக்கு சரிநிகரல்ல, அதனினும் மேலன்றோ,
பாரதியும் தெற்றாய் செப்பினானோ??



வீரத்தை காட்ட மறந்த வீரு!!

                           சரி, இப்போ முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி கிடைச்சிடுச்சு.. அடுத்த இரண்டு போட்டிகள்ல ஜெயிக்கணும்னா என்ன செய்யணும்னு   யோசிச்சா உடனே நினைவுக்கு வர்றது நம்ம வீரு தம்பி தான்!!
இவரு வேணுமா வேணாமா அப்படின்னு தான் செலக்டர்ஸ், தோனி  மற்றும் ஒட்டு மொத்த இந்தியாவே யோசிக்குது.



                            பின்ன என்னங்க, அதிரடி சிங்கம் அடைப்புக் குறிக்குள் \அடைபட்டது போல், இப்போ கொஞ்ச நாளா படு சொதப்பல் பேட்டிங்.. அது மட்டுமா? இப்போ தலைவருக்கு சரியா கண்ணும் தெரியல, கண்ணாடி போட்டுக்கிட்டு ஒரு குத்து மதிப்பா வடிவேலுவிடம் வழி கேட்டு வண்டி ஒட்டிய  "என்னத்தே" கண்ணையா  மாதிரி,  பந்து தெரியுதா, இல்லையானே தெரியாம தடுமாறினது  எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்.

                              பழைய சாதனைகளுக்காக டீமில் வைத்திருக்கக் கூடாது என்பதால் தானே சச்சினை ஒருநாள் போட்டிகளில் இருந்து வெளியே அனுப்பினார்கள். இவருக்கும் அதே சட்டதிட்டங்கள் தானே? அடுத்த வருடம் முதல் நடக்கவிருக்கும்  உலகக் கோப்பை  டெஸ்ட் போட்டிகளை மனதில் கொண்டு நல்ல ஒபனர் உருவாக தானே விலகி நின்றால் நல்லது.

                            இவருக்கு பதில் ஷிகார் தவான் , அஜின்க்யா ரஹானே, முரளி விஜய் ஆகியோருக்கு வாய்ப்புகள் அளித்து பார்க்கலாம். முன்னால் வீரர் டிராவிட் சேவாக்கை மிடில் ஆர்டரில் ஆட வைக்கலாம் என்று கூறும் கருத்தையும் நான் ஆதரிக்கவில்லை.. மேடையில ஆடினாலும், ஓரமா ஆடினாலும் பவர் ஸ்டார் பிரபுதேவா ஆக முடியாது இல்லையா?


Wednesday, March 6, 2013

Riding with my Darlings

 
                           ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் காதல் மலர்ந்திருக்கும்.. ஆண்கள், பெண்கள் உறவுகளைத் தாண்டி சில விஷயங்கள் அதீத சந்தோசத்தை அளிக்கக் கூடியதாய் இருந்திருக்கும். எனக்கு சிறு வயதிலிருந்தே புதிய இடங்களை பார்ப்பதிலும், வாகனங்களில் வெளியே சென்று இயற்கை காற்றை (?!!)  சுவாசிப்பதிலும் ஒரு தீராக் காதல். அப்படி என் வாழ்வில் ஒன்றிய, வெறும் வாகனமாய் மட்டுமல்லாது என் நேசத்தையும் பங்கு போட்ட என் டார்லிங்க்ஸ் பற்றி இங்கே..

ஸ்வேதா..

                         நான் டிப்ளமா முடித்து, என்ஜினியரிங் சேர கவுன்சிலிங் சென்றிருந்த நேரம்.. கவுன்சிலிங் சார்ட்டில் குமரகுரு மற்றும் காருண்யா இருந்தது. குமரகுரு காலேஜை எடுக்குமாறு என் நண்பர்களும் உறவினர்களும் பணிக்க, நானோ என்னுடைய நுண்ணறிவை துணைக்கு அழைத்து சிந்தித்தேன்.. குமரகுரு கோவையை தாண்டி இருக்கிறது. எனவே இங்கே செல்வதென்றால் ஹாஸ்டலில் தங்க வேண்டி வரும்.. ஆனால் காருண்யாவில் சேர்ந்தால் எங்கள் கிராமத்திற்கு மிக அருகில் இருப்பதால் வண்டியில் சென்று வரலாம்..எனக்கென புதிய வண்டியும் வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்து, என் முதல் டார்லிங் ஸ்வேதாவை  ( TVS 50) பெற்றேன்..


                          பத்தாம் அகவையிலிருந்து தந்தையின் வண்டி ஒட்டிய அனுபவம் இருந்தாலும் எனக்கே எனக்கென கிடைத்த ஸ்வேதா கொஞ்சம் ஸ்பெஷல் தான்.. காருண்யா சற்று வசதியான மாணவர்கள் படிக்கும் கல்லூரி என்பதால் நிறைய மாணவர்கள் கியர் வண்டிகளில் வந்த போதும் என் ஸ்வேதா எனக்கு ஒரு பெரிய பொக்கிஷமாக இருந்தாள்.  பின்னாளில் ஸ்வேதாவுடன் ஊட்டிவரை சென்று வந்தது இன்றும் பசுமையான நினைவாய் உள்ளது.. சென்னையில் நான் தங்கியிருந்த ஒரு இரண்டாண்டு காலம் சென்னையின் எல்லா மேடு பள்ளங்களிலும் எங்கள் கால் பதித்த வரலாறும் உண்டு..

மானஸா.. 



                           கல்லூரியின்  கடைசி வருடம், என் பிறந்த நாளுக்காக என் அம்மா அளித்த பரிசு தான் இந்த மானஸா ( Splendor). மானஸாவின் வருகைக்கு பின் கல்லூரியில் என் மதிப்பு சற்றே உயர்ந்ததாய் எனக்கொரு எண்ணம்.  ஸ்வேதாவுடன் வரத் தயங்கிய சில பெண் தோழிகளும் மானஸாவுடன் நன்றாக பழகியது சந்தோசமாக இருந்தது. கல்லூரி காலத்தில் இனிமையான தருணங்களில் உடனிருந்ததும், பின் வேலை தேடி கோவையில் சுற்றித் திரிந்த நாட்களில் பிரியாதிருந்ததும் மானஸா மட்டுமே!  மானஸாவுடன் சென்ற போது சந்தித்த ஆவியை இன்றளவும் என்னால் மறக்க முடியாது..

வெங்கி.. 

                          அமெரிக்காவில் முதன்முதலில்  காலடி வைத்திருந்த சமயம்.  வேலை தேடி அமிஞ்சிக்கரையில் அலைந்த நாட்கள் போய் அமெரிக்காவின் தெருக்களில் சுற்றித் திரிந்த காலம். குளிர் காலத்தில் தெருக்களில் காலாற நடக்க முடியாது என்பதால், வாடகைக்கு ஒரு காரை எடுத்து நேர்முக தேர்வுகளுக்கு சென்று கொண்டிருந்தேன். சொந்தமாக கார் வாங்கலாம் என முடிவெடுத்த போது மற்ற கார்களை பார்க்க மனமின்றி ஒரே மனதாக இவனை வாங்கினேன். (Ford  Escort ) அப்படி ஒரு அன்னியனாய் என் வாழ்வில் வந்தவன் தான் இந்த வெங்கி.. என் சோகங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து இவன் தோள்களில் (ஸ்டீரிங் வில்? ) பலமுறை பகிர்ந்திருக்கிறேன்.



                    அப்போது என்னிடம் இருந்த துணிமணிகள், சமையல் பாத்திரங்கள், மற்ற என் சம்பந்தப்பட்ட எல்லா பொருட்களையும் நான் மாற்றலாகிப் போன எல்லா மாநிலங்களுக்கும் சுமந்து கொண்டு   என்னுடன் பயணித்த நல்ல நண்பன்.  என் வாழ்நாள் சாதனையான நியு ஜெர்சியிலிருந்து சிகாகோ பயணத்தில் (2000 மைல் - சுமார் 4500 கிலோமீட்டர், 16 மணி நேர பயணம் )  என்னுடன் வந்த தோழன்.  இருநூறு ஆயிரம் மைல்கள் ஓடி உடல்நிலை சரியில்லாமல் எனைப் பிரிந்த போது ஒரு சில வாரங்கள் என் மனத்தில் இருந்த பாரம் சொல்லில் அடங்காதது.   

ஸ்வீஹா..

                    வெங்கியின் இழப்பை ஈடு செய்ய நினைத்து நூற்றுக்கும் மேற்பட்ட கார்களையும் பார்த்து திருப்திபடாமல் பின் ஒரு தேவதையாய் எனக்கு கிடைத்தவள் தான் இந்த ஸ்வீஹா  எனும் ஸ்வீட் ஹார்ட் (நிஸ்ஸான் சென்ட்ரா) . உல்லாசப் பயணங்கள், நண்பர்களுடன் சுற்றுப் பயணங்கள் என வாழ்வின் சந்தோசமான தருணங்களில் எல்லாம் என்னுடன் உடன் வந்தவள். ரியர் ஸ்பாய்லர், எட்டு ஸ்பீக்கர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ரிமோட் ஸ்டார்ட் என சொகுசாய் இருந்த பேரழகி. தாய்தேசம் திரும்ப வேண்டி இவளை தாரை வார்த்தபோது ஒரு மகளை தந்தை திருமணம் செய்து கொடுத்து விட்ட உணர்வு என் மனதுக்குள்.



ப்ரிஸ்ஸில்லா..

                          இந்தியா திரும்பிய பின் சந்தித்த ஒரு சாலை விபத்தில் மானஸாவை இழந்தபோது, வழித்துணையாய் வந்தவள். ( Hero Honda  Passion Pro) ஊட்டி, கோத்தகிரி என சுற்றியிருந்தாலும் இருமுறை சேலத்திற்கு சென்று வந்த அனுபவம் இனிமையானது.  திரைக்கடவுளின் விஸ்வரூபத்தை தரிசிக்க சென்று விபத்தில் சிக்கிய அனுபவமும் இவளுக்கு உண்டு.




                           என் வாழ்க்கை எனும் பயணத்தில் உடன் வந்த டார்லிங்க்ஸ் பற்றி பகிர  வேண்டுமென்ற ஆவல் இன்று தீர்ந்தது.. எனைப் போல உங்களில் யாருக்கேனும் உங்கள் டார்லிங்க்ஸ் (?!!) மேல் இருக்கும் லவ்வைப் பற்றி கூறுங்களேன்..




Friday, March 1, 2013

பயணத்தின் சுவடுகள்-10 (SIX FLAGS தீம் பார்க் )



பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 8;  தொலைவு: 10.

SIX FLAGS  தீம் பார்க்  (அமெரிக்கா)
( சிகாகோ  )







                               அமெரிக்காவின் அதிபயங்கர த்ரில் ரைடுகள் உள்ள தீம்  பார்க் தான் இந்த six flags  தீம் பார்க். அமெரிக்காவில் மொத்தம் பத்தொன்பது இடங்களில் அமைந்துள்ள இது உலகிலயே அதிகம் திகிலூட்டக்கூடிய (Scariest) விளையாட்டுகளை  அமைத்திருக்கிறார்கள். பத்து வயது சிறார்களுக்கென சில விளையாட்டுகள் இருப்பினும், பெரும்பாலான விளையாட்டுகள் ஒரு பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விளையாடக் கூடியது.


                                சுமார் ஐந்தாயிரம் கார்கள் நிறுத்தக் கூடிய பார்க்கிங் வசதி செய்திருக்கிறார்கள். முன்பே (ஆன்லைனில்) டிக்கட் எடுத்திருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒவ்வொருவரையும் செக் செய்து விடுவதால் உள்ளே நுழைய சிறிது நேரம் ( ஒரு பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள்) ஆகிறது.  பெரியவர்களுக்கு 62 டாலர்களும், சிறியவர்களுக்கு 42 டாலர்களும் கட்டணமாக வசூலிக்கின்றனர். இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். 


                               நுழைவாயிலிலேயே ஒரு அச்சடித்த பிரசுரத்தில் அங்குள்ள ரைடுகளைப் பற்றியும் அவற்றின் திகில் அளவையும் (Thrill level) உள்ளே  நுழைந்ததும் நம்மை வரவேற்பது ஒரு ரேஸ் ட்ராக் (த்ரில் அளவு-மைல்ட்).  இது நாம் ரோட்டில் கார் ஓட்டுவதைப் போன்ற உணர்வே தவிர அதிகம் பயமில்லை. காலை நேரம் மிகவும் எனர்ஜியோடு இருந்ததால் த்ரில் லெவல் அதிகம் உள்ள (பட்டியலை பார்த்து) பேட்மேன் ரைடரில் ஏறுவது என தீர்மானித்தேன்.. அதுவும் முதல் ஆளாக ஏறிக் கொள்வதில் ஒரு அலாதி பிரியம் எனக்கு.. இந்த வகை ரைடில் ஒரு இரண்டரை நிமிடங்கள் நாம் தொங்கிக் கொண்டே பயணிக்க வேண்டும். இடம், வலம், மேலே, கீழே என எல்லா திசைகளிலும் அதிவேகமாக இந்த கோஸ்டர் பயணிப்பதால் நமக்கும் கிட்டத்தட்ட பேட்மேனை போல பறக்கின்ற உணர்வு இருக்கும். ஆனால்  இறங்கிய பின்னரும் அடிவயிற்றில் ஒரு திரவம் கசிந்ததேன்னவோ உண்மை..



                                இதற்கு பிறகு பல ரோலர் கோஸ்டர்களில் ஏறிய போதும் முதல் அனுபவத்தில் கிடைத்த த்ரில் கிட்டவில்லை. ஒரு சில ரைடுகளில் நம்மை உயரத்திற்கு அழைத்துப் போய் அங்கிருந்து கீழே தள்ளி விடுவது போல் வேகமாக கீழே இறக்கிக் கூட்டி வருவார்கள்.


                                இங்குள்ள தண்ணீர் ரைடுகளும் மிக பிரசித்தி பெற்றவை. ஒரு ராட்சத பக்கெட்டின் உதவி கொண்டு ஒரு மண்டையோட்டின் வாய் வழியே நீரை கொட்டுகிறார்கள். நம்முடைய குற்றாலம் சென்ற பீலிங் இருந்தது. கொஞ்சம் மெலிந்த தேகமுள்ள ஆட்கள் தடுமாறி கீழே விழுந்த காட்சியும் அரங்கேறியது. இந்த வகை விளையாட்டின் பெயர் " சுனாமி எபெக்ட்" என்பதாகும்.. 




                                       மற்றொரு விளையாட்டில் தண்ணீரில் சறுக்கிக் கொண்டே வந்து ஒரு புனல் (funnel) போன்ற ஒரு அமைப்பில் மேலும் கீழுமாய் சுற்றி (தலையும் சுற்றி) பின் தண்ணீரில் விழ வேண்டும்.





                               நம்ம ஊர் ராட்டினம் போன்ற ஒரு விளையாட்டில் மேலும் கீழுமாய் சென்று வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் நம்மை திக்கெட்டிலும் சுழழ விட்டு பின் இறக்கி விடும் போது "சரக்கு" அடிக்காமலே நமக்கு ஒரு கிறக்கம் தோன்றும். இந்த வகை தீம் பார்க்குகளுக்கு அம்யூஸ்மன்ட் (Amusement) பார்க் எனவும் அழைப்பர். அந்த வார்த்தையின் உண்மையான பொருளை நாம் உள்ளே சென்று வரும் போது உணர்ந்திருப்போம்.



                              பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து மக்களும் தங்களுடைய வாரக் கடைசியை  மகிழ்ச்சியுடன் செலவிட இங்கே வருவதில் ஆச்சர்யமொன்றுமில்லை.. 

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...