வெள்ளிக் கிழமையானாலும் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக மாணவிகள் கூட்டம். ( மகளிர் தினத்தை கொண்டாடுவதற்காக வந்துருப்பாங்களோ? ). ஆனா கொண்டாடுவதற்கு தவறான படத்தை தேர்வு செய்துவிட்ட குற்ற உணர்வு அவர்கள் படத்தின் இடைவேளையிலேயே தெறித்து ஓடியதிலிருந்து தெரிந்தது. நாமதான் சற்றும் மனம் தளராத ஆவியாச்சே, படத்தை முழுசா பாத்துட்டு தான் வெளிய வந்தோம். (ஆமா தாயகம் அப்படின்னு கேப்டனின் ஒரு திரைக்காவியம், அதையவே முழுசா பாத்தவங்க.. இதெல்லாம் என்ன, ஜுஜுபீ)
கதை என்னன்னா, ஹலோ, எங்கே க்ளோஸ் பண்ண பாக்கறீங்க? உள்ள வந்துடீங்கள்ள, முழுசா படிச்சுட்டு தான் போகணும்.. படம் படு மொக்கைன்னாலும் அதுல டைரக்டர் சொல்ல வர்ற மெசேஜ் சூப்பர். (அது என்னான்னு இங்க நான் சொல்ல போறதில்லே).. படத்தின் பெயருக்கு கீழ 4 இடியட்ஸ் அப்படீன்னு போட்டிருக்கு.. நானும் படம் முடியற வரை என் பக்கத்துல உக்கார்ந்த மூணு பேரையும் திரும்பி பார்த்துகிட்டே இருந்தேன்..
சரி கதைக்கு வருவோம்.. முதல் காட்சியிலேயே பவர் ஸ்டார் ஒரு பாடலுக்கு வருகிறார்.. என்ன கொடுமை சார்ன்னு யோசிச்சுகிட்டே படம் பார்த்து முடிக்கும் போது அந்த பாடலும் இல்லேனா படம் இன்னும் மோசமாயிரும்க்குனு புரிஞ்சுது. வினய் , சத்யன், பிரேம்ஜி, அரவிந்த் இப்படி ஆளாளுக்கு மொக்கை போடுகிறார்கள்.. அட நம்ம தமிழ்படம் மாதிரி இருக்கேன்னு நினைக்கும் போது, லொள்ளு சபா சுவாமிநாதன் வந்து.. இல்ல இது லொள்ளு சபாவின் மொக்கை வெர்ஷன்ன்னு சொல்றார்.
நான் பார்த்த திரையரங்கின் அருகிலேயே நான்காம் பிறையும் ஓடிக் கொண்டிருந்ததால் மக்களுக்கு தப்பிச் செல்லும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. என்னடா கதைய சொல்லாம இவன் ஏதேதோ சொல்லிக்கிட்டு இருக்கான்னு பாக்கறீங்களா, அப்படி ஒன்னு இருந்திருந்தா சொல்லியிருக்க மாட்டேனா??
அட... போங்கப்பா...
ReplyDeleteஆமா தனபாலன், அதே பீலிங்ஸ் தான் எனக்கும் இருந்தது..
ReplyDeleteஒன்பதுல குரு...உனக்கு சனி...
ReplyDeleteஏண்டா...ஏன் இந்த வேண்டாத வேலை...
ஒன்பதுல குரு...படத்துல இடம் பெற்ற நடிக நடிகை மற்றும் அனைத்து டெக்னீசியன்களுக்கும்.
ReplyDeleteகுறிப்பா படத்தை முதல்லே ஜட்ஜ் பண்ணி... தவிற்த முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களுக்கும்தான்.
ஆனா படம் பாத்த அனைவருக்கும்
ஒன்பதுல சனி இல்ல...ஏழரை சனி.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
அந்த படத்த பாத்துட்டு உங்களுக்கு வேற எந்த படத்தையும் பாக்க கூடிய மண தையரியம் வந்துருச்சா சார்.
ReplyDelete