பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 8; தொலைவு: 10.
SIX FLAGS தீம் பார்க் (அமெரிக்கா)
( சிகாகோ )
அமெரிக்காவின் அதிபயங்கர த்ரில் ரைடுகள் உள்ள தீம் பார்க் தான் இந்த six flags தீம் பார்க். அமெரிக்காவில் மொத்தம் பத்தொன்பது இடங்களில் அமைந்துள்ள இது உலகிலயே அதிகம் திகிலூட்டக்கூடிய (Scariest) விளையாட்டுகளை அமைத்திருக்கிறார்கள். பத்து வயது சிறார்களுக்கென சில விளையாட்டுகள் இருப்பினும், பெரும்பாலான விளையாட்டுகள் ஒரு பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விளையாடக் கூடியது.
சுமார் ஐந்தாயிரம் கார்கள் நிறுத்தக் கூடிய பார்க்கிங் வசதி செய்திருக்கிறார்கள். முன்பே (ஆன்லைனில்) டிக்கட் எடுத்திருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒவ்வொருவரையும் செக் செய்து விடுவதால் உள்ளே நுழைய சிறிது நேரம் ( ஒரு பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள்) ஆகிறது. பெரியவர்களுக்கு 62 டாலர்களும், சிறியவர்களுக்கு 42 டாலர்களும் கட்டணமாக வசூலிக்கின்றனர். இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
நுழைவாயிலிலேயே ஒரு அச்சடித்த பிரசுரத்தில் அங்குள்ள ரைடுகளைப் பற்றியும் அவற்றின் திகில் அளவையும் (Thrill level) உள்ளே நுழைந்ததும் நம்மை வரவேற்பது ஒரு ரேஸ் ட்ராக் (த்ரில் அளவு-மைல்ட்). இது நாம் ரோட்டில் கார் ஓட்டுவதைப் போன்ற உணர்வே தவிர அதிகம் பயமில்லை. காலை நேரம் மிகவும் எனர்ஜியோடு இருந்ததால் த்ரில் லெவல் அதிகம் உள்ள (பட்டியலை பார்த்து) பேட்மேன் ரைடரில் ஏறுவது என தீர்மானித்தேன்.. அதுவும் முதல் ஆளாக ஏறிக் கொள்வதில் ஒரு அலாதி பிரியம் எனக்கு.. இந்த வகை ரைடில் ஒரு இரண்டரை நிமிடங்கள் நாம் தொங்கிக் கொண்டே பயணிக்க வேண்டும். இடம், வலம், மேலே, கீழே என எல்லா திசைகளிலும் அதிவேகமாக இந்த கோஸ்டர் பயணிப்பதால் நமக்கும் கிட்டத்தட்ட பேட்மேனை போல பறக்கின்ற உணர்வு இருக்கும். ஆனால் இறங்கிய பின்னரும் அடிவயிற்றில் ஒரு திரவம் கசிந்ததேன்னவோ உண்மை..
இதற்கு பிறகு பல ரோலர் கோஸ்டர்களில் ஏறிய போதும் முதல் அனுபவத்தில் கிடைத்த த்ரில் கிட்டவில்லை. ஒரு சில ரைடுகளில் நம்மை உயரத்திற்கு அழைத்துப் போய் அங்கிருந்து கீழே தள்ளி விடுவது போல் வேகமாக கீழே இறக்கிக் கூட்டி வருவார்கள்.
இங்குள்ள தண்ணீர் ரைடுகளும் மிக பிரசித்தி பெற்றவை. ஒரு ராட்சத பக்கெட்டின் உதவி கொண்டு ஒரு மண்டையோட்டின் வாய் வழியே நீரை கொட்டுகிறார்கள். நம்முடைய குற்றாலம் சென்ற பீலிங் இருந்தது. கொஞ்சம் மெலிந்த தேகமுள்ள ஆட்கள் தடுமாறி கீழே விழுந்த காட்சியும் அரங்கேறியது. இந்த வகை விளையாட்டின் பெயர் " சுனாமி எபெக்ட்" என்பதாகும்..
மற்றொரு விளையாட்டில் தண்ணீரில் சறுக்கிக் கொண்டே வந்து ஒரு புனல் (funnel) போன்ற ஒரு அமைப்பில் மேலும் கீழுமாய் சுற்றி (தலையும் சுற்றி) பின் தண்ணீரில் விழ வேண்டும்.
நம்ம ஊர் ராட்டினம் போன்ற ஒரு விளையாட்டில் மேலும் கீழுமாய் சென்று வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் நம்மை திக்கெட்டிலும் சுழழ விட்டு பின் இறக்கி விடும் போது "சரக்கு" அடிக்காமலே நமக்கு ஒரு கிறக்கம் தோன்றும். இந்த வகை தீம் பார்க்குகளுக்கு அம்யூஸ்மன்ட் (Amusement) பார்க் எனவும் அழைப்பர். அந்த வார்த்தையின் உண்மையான பொருளை நாம் உள்ளே சென்று வரும் போது உணர்ந்திருப்போம்.
பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து மக்களும் தங்களுடைய வாரக் கடைசியை மகிழ்ச்சியுடன் செலவிட இங்கே வருவதில் ஆச்சர்யமொன்றுமில்லை..
சென்னையிலும் நிறைய தீம் பார்க்குகள் இருக்கின்றன... ஆனால் இத்தனை பிரம்மாண்டம் இல்லை... கலக்குங்க....
ReplyDeleteஎன்னை எப்படா கூட்டிட்டு போவ...
ReplyDeleteரொம்ப எஞ்சாய் பண்ணு...
தலை சுத்துது சாமீ...!
ReplyDeleteரோலர் கோஸ்ட் அனுபவம்.. எனக்கில்லை. "சரக்கு" அடிக்காமலே நமக்கு ஒரு கிறக்கம் தோன்றும். படத்தை பார்த்தாலே தெரியுது. :) :)
ReplyDeleteWow.......enjoy......
ReplyDelete