Tuesday, March 12, 2013

PEPSI-IPL 2013 - ஒரு கண்ணோட்டம்

                 ஏப்ரல் 3 தொடங்கி மே மாதம் 26 முடிய சுமார் இரு மாதங்கள் நடக்கவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்..




                ஆறாவது வருடமாக தொடர்ந்து நடக்கவிருக்கும் இந்த தொடரில் கலந்து கொள்ளவிருக்கும் அணிகளைப் பற்றி பார்ப்போம். சென்ற முறை டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் இருந்த அணி இப்போது சன் குழுமம் சார்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எனும் பெயரில் விளையாடப் போகிறது..





சென்னை சூப்பர் கிங்ஸ்

 கிட்டத்தட்ட குட்டி இந்திய அணி போல் காட்சியளிக்கிறது. ஆறாவது வருடமாக தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து தோனி.  சுழலுக்கு அசத்தல் மன்னன் அஷ்வினும், ஜடேஜா மற்றும்  ஜகதியும் கைகொடுக்க, துவக்க வீரர் முரளி விஜய் மற்றும் மைக் ஹஸ்ஸி அதிரடி கிளப்ப, ரெய்னா, பத்ரிநாத், அனிருதா, டூ பிளஸ்ஸி , பிராவோ மிடில் ஆர்டரில் கலக்க, வேகத்துக்கு குலசேகரா, நன்னேஸ், அல்பி மார்கல் இருக்கிறார்கள். அறிமுக வீரர் பாபா அபரிஜித், இவர் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியவர்..

ஹைலைட்:   டூ பிளஸ்ஸி , ரெய்னா, அஷ்வின், தோனி


டெல்லி டேர் டெவில்ஸ்

 டெல்லியின் கேப்டனாக ஜெயவர்தனே அல்லது யோகன் போதா நியமிக்கப்படலாம். இந்தப் போட்டிகளில் வீரு  வீறுகொண்டு எழுந்தால் அவருடைய கிரிக்கட் எதிர்காலத்துக்கு நல்லது. குறிப்பிடத்தக்க வீரர்கள் வருண் ஆரோன், அஜித் அகர்கர், உன்முகத் சந்த், நெஹ்ரா, மார்னெ  மார்கல் , பீட்டர்சன், உமேஷ் யாதவ், ஜெஸ்ஸி  ரைடர், வார்னர் என மிரட்டும் அணியாய்  இருக்கும் இவர்கள் ஓரணியாய் விளையாடினால் சாதிக்கலாம். முஸ்தாக் அகமது ஸ்பின் கோச்சாக நியமிக்கப்படிருக்கிறார் .. சென்ற முறை கடைசி இடத்தை பிடித்த அணி என்பது குறிப்பிடத்தக்கது..

ஹைலைட்:   வார்னர், மார்கல் மற்றும் பீட்டர்சன்.


கிங்ஸ் XI  பஞ்சாப்

 கில்கிறிஸ்ட், பியுஷ் சாவ்லா, பிரவீன் குமார், டேவிட் ஹஸ்ஸி  தவிர்த்து பார்த்தால் இந்த அணி மிகவும் வலிமை குறைந்த அணியாக தெரிகிறது. ஆனால் டுவென்டி 20 இல் எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.. கில்கிறிஸ்ட் தலைமை ஏற்கலாம்.





ஹைலைட்:  அணிக்கு புதுவரவான அசார் மெகமூத், கில்கிறிஸ்ட் மற்றும் ஹஸ்ஸி.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 நடப்பு சேம்பியனாக களமிறங்கும் இந்த அணியின் தலைமையை கம்பீர் தொடர்ந்து ஏற்பார் என தெரிகிறது. பாலாஜி, ப்ரெட் லீ, அப்துல்லா, சுனில் நரேன், பேட்டின்சன், சாகிப் அல் ஹசன் பவுலிங்கை கவனித்து கொள்ள மெக்கலம், மார்கன், கல்லிஸ்,யூசுப் பதான் என சரிவிகித அணியாக இருக்கிறது. புதுமுக வீரர் ஷமி  சாதிக்கலாம்.


ஹைலைட்:   பதான், மெக்கலம், பேட்டின்சன்.


மும்பை இந்தியன்ஸ்

 புதிய வரவு மற்றும் கேப்டனாக களமிறங்குகிறார் ரிக்கி பாண்டிங். மலிங்கா, ஹர்பஜன், அபு நசீம் , மிட்சல் ஜான்சன், ஓஜா, ஓரம், முனாப் பவுலிங்கயும், ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, தினேஷ் கார்த்திக் பேட்டிங்கயும் கவனித்துக்கொள்ள இந்த முறையும் மும்பை இந்தியன்ஸ் அணியே மிரட்டல் அணியாக உள்ளது.





ஹைலைட்:   சாதனை மன்னன் சச்சின், ரிக்கி, மலிங்கா..


புனே வாரியர்ஸ்

அநேகமாக யுவராஜ் கேப்டனாக இருக்கப் போகும் இந்த அணிக்கு  "தாதா" கங்குலியின் இழப்பு ஒருபுறமிருக்க, ஸ்மித், கிளார்க், டெய்லர், சுமன், மாத்யுஸ், மென்டிஸ், புவனேஸ்வர் குமார் என மேட்ச் வின்னர்கள்  அதிகம் இல்லாத அணியாக உள்ளது. அபிஷேக் நாயரின் வரவு அணியை பலப்படுத்தலாம்.

ஹைலைட்:   யுவராஜ், உத்தப்பா, கிளார்க் மற்றும்  ஸ்மித்
                                   

ராஜஸ்தான் ராயல்ஸ்

 ராகுல் டிராவிட்  தலைமையில் ( அவரே கோச்சாகவும் செயல்படுவார்) வாட்சன், ரகானே, ஷான் டெய்ட், ஸ்ரீசாந்த்,பிடில் எட்வர்ட்ஸ் தவிர பெரும் புள்ளிகள் யாரும் இல்லை என்றாலும், முதல் தொடரில் பட்டம் வென்று சாதித்ததை மறக்க முடியாது. வார்னேவின் இழப்பு பெரியது என்றாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.




ஹைலைட்:   டிராவிட், ரகானே மற்றும் வாட்சன்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

வருங்கால இந்திய கேப்டன் என வர்ணிக்கப்படும் விராட் கோஹ்லி கேப்டனாக தலைமை ஏற்கும் இந்த அணியில் அதிரடி மன்னன் கெயில், டி வில்லியர்ஸ், தில்சன், ஜாகிர் கான், முரளிதரன், புஜாரா, ஆர்.பி.சிங், ரவி ராம்பால், வெட்டோரி, வினய் குமார் என பல மேட்ச் வின்னர்களை கொண்ட பலம் பொருந்திய அணி. இந்த வருடம் ஆவியின் ஆதரவு பெற்ற அணியும் கூட..

ஹைலைட்:   விராட், கெயில், முரளிதரன் மற்றும் வெட்டோரி.
                                   

சன்ரைசர்ஸ் ஹைதரபாத் 

 புதிய அணி, புதிய தலைமை, புதிய பெயர் என அமர்க்களமாக களமிறங்கும் இந்த அணியில் டேல் ஸ்டைன், கேமரூன் ஒயிட், சங்ககாரா, டேரன் சமி,  சுதீப் தியாகி, இஷாந்த், பார்த்திவ் பட்டேல், அமித் மிஸ்ரா, ஷிகார் தவான், நாதன் மெக்கலம், டுமினி என ஓரளவு நல்ல வீரர்களைக் கொண்டுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் இவர்கள் வெற்றிப் பயணத்தை தொடங்கலாம்..

ஹைலைட்:  டேல் ஸ்டைன், பார்த்திவ் மற்றும் சங்ககரா..



                                        ட்வென்டி 20 பொறுத்த வரை வெற்றி வைப்பை கணிப்பது கடினம்.. ஒவ்வொரு நாளின் ஆட்டத்தை பொறுத்தே அது அமையும். பெங்களூர் மற்றும் சென்னைக்கு என் ஆதரவு.. உங்க ஆதரவு யாருக்கு??



9 comments:

  1. நல்ல தொகுப்பு நண்பரே...

    ஆதரவு : நேரம் கிடைக்கும் போது பார்க்கும் நண்பர்களுக்கு...!

    ReplyDelete
  2. இந்த விளையாட்டுக்கும் எனக்கும் வெகு தூரம் ஆனால் தேர்வுக்கு பயன்படும் என்று பார்க்க வந்தேன் அருமையான தொகுப்பு

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு! நம்ம ஆதரவு எப்பவும் சென்னைக்குத்தான்! என்ன இருந்தாலும் ஊரை விட்டுக்கொடுக்க மாட்டோம்ல!

    ReplyDelete
  4. Though Dada wont play, i'll pledge my support to PWI... and KKR..

    ReplyDelete
  5. நன்றி தனபாலன்!

    ReplyDelete
  6. சரளா- வருகைக்கு நன்றி தோழி.. ஒன்றிரண்டு ஆட்டங்களை பார்த்தாலே பிடித்து விடும். (சூப்பர் ஸ்டார் மாதிரி)

    தேர்வு??

    ReplyDelete
  7. சுரேஷ், கார்த்திக் - நானும் சென்னைய சப்போர்ட் பண்றேன்.. பெங்களூர் விளையாடாதப்ப மட்டும்..

    ReplyDelete
  8. Rahul - Pune is the weakest team in the list.. And u still support KKR?? After what they did for Prince of Kolkata??

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails