ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் காதல் மலர்ந்திருக்கும்.. ஆண்கள், பெண்கள் உறவுகளைத் தாண்டி சில விஷயங்கள் அதீத சந்தோசத்தை அளிக்கக் கூடியதாய் இருந்திருக்கும். எனக்கு சிறு வயதிலிருந்தே புதிய இடங்களை பார்ப்பதிலும், வாகனங்களில் வெளியே சென்று இயற்கை காற்றை (?!!) சுவாசிப்பதிலும் ஒரு தீராக் காதல். அப்படி என் வாழ்வில் ஒன்றிய, வெறும் வாகனமாய் மட்டுமல்லாது என் நேசத்தையும் பங்கு போட்ட என் டார்லிங்க்ஸ் பற்றி இங்கே..
ஸ்வேதா..
நான் டிப்ளமா முடித்து, என்ஜினியரிங் சேர கவுன்சிலிங் சென்றிருந்த நேரம்.. கவுன்சிலிங் சார்ட்டில் குமரகுரு மற்றும் காருண்யா இருந்தது. குமரகுரு காலேஜை எடுக்குமாறு என் நண்பர்களும் உறவினர்களும் பணிக்க, நானோ என்னுடைய நுண்ணறிவை துணைக்கு அழைத்து சிந்தித்தேன்.. குமரகுரு கோவையை தாண்டி இருக்கிறது. எனவே இங்கே செல்வதென்றால் ஹாஸ்டலில் தங்க வேண்டி வரும்.. ஆனால் காருண்யாவில் சேர்ந்தால் எங்கள் கிராமத்திற்கு மிக அருகில் இருப்பதால் வண்டியில் சென்று வரலாம்..எனக்கென புதிய வண்டியும் வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்து, என் முதல் டார்லிங் ஸ்வேதாவை ( TVS 50) பெற்றேன்..
மானஸா..
கல்லூரியின் கடைசி வருடம், என் பிறந்த நாளுக்காக என் அம்மா அளித்த பரிசு தான் இந்த மானஸா ( Splendor). மானஸாவின் வருகைக்கு பின் கல்லூரியில் என் மதிப்பு சற்றே உயர்ந்ததாய் எனக்கொரு எண்ணம். ஸ்வேதாவுடன் வரத் தயங்கிய சில பெண் தோழிகளும் மானஸாவுடன் நன்றாக பழகியது சந்தோசமாக இருந்தது. கல்லூரி காலத்தில் இனிமையான தருணங்களில் உடனிருந்ததும், பின் வேலை தேடி கோவையில் சுற்றித் திரிந்த நாட்களில் பிரியாதிருந்ததும் மானஸா மட்டுமே! மானஸாவுடன் சென்ற போது சந்தித்த ஆவியை இன்றளவும் என்னால் மறக்க முடியாது..
வெங்கி..
அமெரிக்காவில் முதன்முதலில் காலடி வைத்திருந்த சமயம். வேலை தேடி அமிஞ்சிக்கரையில் அலைந்த நாட்கள் போய் அமெரிக்காவின் தெருக்களில் சுற்றித் திரிந்த காலம். குளிர் காலத்தில் தெருக்களில் காலாற நடக்க முடியாது என்பதால், வாடகைக்கு ஒரு காரை எடுத்து நேர்முக தேர்வுகளுக்கு சென்று கொண்டிருந்தேன். சொந்தமாக கார் வாங்கலாம் என முடிவெடுத்த போது மற்ற கார்களை பார்க்க மனமின்றி ஒரே மனதாக இவனை வாங்கினேன். (Ford Escort ) அப்படி ஒரு அன்னியனாய் என் வாழ்வில் வந்தவன் தான் இந்த வெங்கி.. என் சோகங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து இவன் தோள்களில் (ஸ்டீரிங் வில்? ) பலமுறை பகிர்ந்திருக்கிறேன்.
அப்போது என்னிடம் இருந்த துணிமணிகள், சமையல் பாத்திரங்கள், மற்ற என் சம்பந்தப்பட்ட எல்லா பொருட்களையும் நான் மாற்றலாகிப் போன எல்லா மாநிலங்களுக்கும் சுமந்து கொண்டு என்னுடன் பயணித்த நல்ல நண்பன். என் வாழ்நாள் சாதனையான நியு ஜெர்சியிலிருந்து சிகாகோ பயணத்தில் (2000 மைல் - சுமார் 4500 கிலோமீட்டர், 16 மணி நேர பயணம் ) என்னுடன் வந்த தோழன். இருநூறு ஆயிரம் மைல்கள் ஓடி உடல்நிலை சரியில்லாமல் எனைப் பிரிந்த போது ஒரு சில வாரங்கள் என் மனத்தில் இருந்த பாரம் சொல்லில் அடங்காதது.
ஸ்வீஹா..
வெங்கியின் இழப்பை ஈடு செய்ய நினைத்து நூற்றுக்கும் மேற்பட்ட கார்களையும் பார்த்து திருப்திபடாமல் பின் ஒரு தேவதையாய் எனக்கு கிடைத்தவள் தான் இந்த ஸ்வீஹா எனும் ஸ்வீட் ஹார்ட் (நிஸ்ஸான் சென்ட்ரா) . உல்லாசப் பயணங்கள், நண்பர்களுடன் சுற்றுப் பயணங்கள் என வாழ்வின் சந்தோசமான தருணங்களில் எல்லாம் என்னுடன் உடன் வந்தவள். ரியர் ஸ்பாய்லர், எட்டு ஸ்பீக்கர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ரிமோட் ஸ்டார்ட் என சொகுசாய் இருந்த பேரழகி. தாய்தேசம் திரும்ப வேண்டி இவளை தாரை வார்த்தபோது ஒரு மகளை தந்தை திருமணம் செய்து கொடுத்து விட்ட உணர்வு என் மனதுக்குள்.
ப்ரிஸ்ஸில்லா..
இந்தியா திரும்பிய பின் சந்தித்த ஒரு சாலை விபத்தில் மானஸாவை இழந்தபோது, வழித்துணையாய் வந்தவள். ( Hero Honda Passion Pro) ஊட்டி, கோத்தகிரி என சுற்றியிருந்தாலும் இருமுறை சேலத்திற்கு சென்று வந்த அனுபவம் இனிமையானது. திரைக்கடவுளின் விஸ்வரூபத்தை தரிசிக்க சென்று விபத்தில் சிக்கிய அனுபவமும் இவளுக்கு உண்டு.
என் வாழ்க்கை எனும் பயணத்தில் உடன் வந்த டார்லிங்க்ஸ் பற்றி பகிர வேண்டுமென்ற ஆவல் இன்று தீர்ந்தது.. எனைப் போல உங்களில் யாருக்கேனும் உங்கள் டார்லிங்க்ஸ் (?!!) மேல் இருக்கும் லவ்வைப் பற்றி கூறுங்களேன்..
அடாடா... படிக்காதவன் ரஜினியை மிஞ்சிட்டங்க ஆனந்து! உங்க டார்லிங்ஸ் ஒவ்வொண்ணையும் பத்தி ரசனையோடவிவரிச்சதை ரசிச்சேன்! எனக்குத்தான் இந்த சப்ஜெக்ட்ல எழுதற வாய்ப்பு இல்ல!
ReplyDeleteரஜினி மிஞ்சிட்டேன்னு சொல்லீட்டீங்களே.. அவ்வ்வ்....
ReplyDeleteவாகனங்கள் உயிரற்றதாக இருந்தாலும் அவற்றின்மேல் நீங்கள் கொண்டுள்ள காதல் பதிவிலேயே தெரிகிறது....
ReplyDeleteஅருமை...
ReplyDeleteஆனால் இதையும் ரசிக்க ஒரு மனம் வேண்டும்... உங்களிடமும் உள்ளதை நினைத்து சந்தோசம்...
எல்லா நட்புகளுக்கும் பேர்வைத்து கொண்டாடியிருக்கீங்களே அதுவே அவற்றின் மேல் உங்களுக்கிருந்த நேசம் உணர்த்துகிறது ஆனந்த்...
ReplyDeleteவாகனங்களின் மேல் நீங்கள் கொண்ட காதல்கள்..அழகா சொன்னீங்க. பெண் தோழிகள் மானஸாவிடம் மட்டும் தோழமையா இருந்தாங்களா ...ஹா..ஹா இனிமையான நினைவுகளை எங்களோடு சுவாரசியமா பகிர்ந்தமைக்கு நன்றி ஆவி. (ரூம் போட்டு யோசிச்சீங்களோ !!!)
ReplyDeleteவாகனங்களின் மேல் நீங்கள் கொண்ட காதல்கள்..அழகா சொன்னீங்க. பெண் தோழிகள் மானஸாவிடம் மட்டும் தோழமையா இருந்தாங்களா ...ஹா..ஹா இனிமையான நினைவுகளை எங்களோடு சுவாரசியமா பகிர்ந்தமைக்கு நன்றி ஆவி. (ரூம் போட்டு யோசிச்சீங்களோ !!!)
ReplyDeleteஎங்கள் இல்லத்திலும் வாகனங்களை உயிருள்ள உறவாக நேசிப்பார்கள்...
ReplyDeleteஇம்புட்டு காதலிகளா....
ReplyDeleteஎப்படியோ உன் மலரும் நினைவுகளை பகிர்ந்துவிட்டாய்...
ஸ்கூல் பையன்- நன்றீங்க
ReplyDeleteநன்றி தனபாலன்.
ReplyDeleteநன்றி எழில் மேடம்
ReplyDeleteநன்றி கலாகுமரன் ஸார். ஆவி எபிசோட் எழுதும் போது தோணிச்சு..
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி மேடம், அவற்றை ஒரு உயிரற்ற பொருட்களாய் பார்க்கவே தோன்றாது அல்லவா.. கருத்துக்கு நன்றி..
ReplyDeleteநன்றி ஜீவா.
ReplyDeleteஅழகான டார்லிங்க்ஸ் பற்றி அழகான அனுபவம்... அனாமிகா எங்க சார் ?
ReplyDeleteஇந்த பதிவ எழுதும் போது அனாமிகா இல்ல ரூபக்.. ஒரு பார்ட் II எழுதிரலாம்..
Deleteசூப்பர் ஆனந்த் நீங்கள் நேசித்த வாகனங்களை அழகா பட்டியல் போட்டுருக்கீங்க எனது டூ வீலர் பற்றி சில மாதங்களுக்கு முன் கவிதை எழுதி வைத்திருக்கிறேன் இன்னும் மெருகேற்ற வேண்டியிருப்பதால் இன்னும் வெளியிடவில்லை விரைவில் வெளியிடுவேன் என்னை பொறுத்த வரை வண்டியை ஒரு உயிருள்ள ஜீவனாக நினைக்கிறேன்
ReplyDelete