செல்வம் தழைத்திடும் ஒரு ஊராம்,
தலைநகரம் என்றதற்கு ஒரு பேராம்..
வித்தகர்கள் பலரும் அங்கு ஒன்று கூடி- போட்டிடும்
திட்டங்கள் வந்திடும் மக்களை நாடி..
வானிடிக்கும் கட்டிடங்கள், நாற்கர சாலைகள்,
வண்ண வண்ண விளக்குகள், கம்பத்தின் கீழ் ஏழைகள்..
உலகக் கோப்பைகள் நடந்திடும் இவ்விடத்தில்,
உலக வறுமைப் பட்டியலிலும் முதலிடத்தில்..
காவல்துறை ஒரு சிறப்பாம் நம் நாட்டில்- பாலியில்
கொடுமைகள் பற்றி வந்திடுதே தினம் ஏட்டில்..
தலைமுறைகள் தாங்கும்படி ஏற்கனவே- சேர்த்திட்ட
சொத்துக்களால் பணத்தின் நிறம் ஆனது பார் கறுப்பெனவே..
அரசியலால் ஆதாயம் மக்களுக்கே-அரசாள்வோர்
வாரிசுகளாய் பெற்றிட்ட அவர் மக்களுக்கே..
செல்வம் தழைத்திடும் ஒரு ஊராம்,
ஒவ்வொரு வரியும் உண்மை...
ReplyDeleteநல்லாச் சொன்னீங்க போங்க உண்மையை...!
ReplyDeleteசொல்லவே இல்லை கவிதையெல்லாம் எழுதியிருக்கீங்க... அருமை வாழ்த்துக்கள்...
ReplyDeleteஏ நியாஆஆஆஆஆஆஆயமாரே...! நல்லாச் சொன்னீங்க கவிதையில யதார்த்தத்தை! அருமைங்கோவ்!
ReplyDeleteஎல்லோருக்கும் நன்றி..
ReplyDeleteஉலகக் கோப்பைகள் நடந்திடும் இவ்விடத்தில்,
ReplyDeleteஉலக வறுமைப் பட்டியலிலும் முதலிடத்தில்..
மறுக்கமுடியாத நிஜங்கள்..!