Thursday, March 7, 2013

வீரத்தை காட்ட மறந்த வீரு!!

                           சரி, இப்போ முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி கிடைச்சிடுச்சு.. அடுத்த இரண்டு போட்டிகள்ல ஜெயிக்கணும்னா என்ன செய்யணும்னு   யோசிச்சா உடனே நினைவுக்கு வர்றது நம்ம வீரு தம்பி தான்!!
இவரு வேணுமா வேணாமா அப்படின்னு தான் செலக்டர்ஸ், தோனி  மற்றும் ஒட்டு மொத்த இந்தியாவே யோசிக்குது.



                            பின்ன என்னங்க, அதிரடி சிங்கம் அடைப்புக் குறிக்குள் \அடைபட்டது போல், இப்போ கொஞ்ச நாளா படு சொதப்பல் பேட்டிங்.. அது மட்டுமா? இப்போ தலைவருக்கு சரியா கண்ணும் தெரியல, கண்ணாடி போட்டுக்கிட்டு ஒரு குத்து மதிப்பா வடிவேலுவிடம் வழி கேட்டு வண்டி ஒட்டிய  "என்னத்தே" கண்ணையா  மாதிரி,  பந்து தெரியுதா, இல்லையானே தெரியாம தடுமாறினது  எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்.

                              பழைய சாதனைகளுக்காக டீமில் வைத்திருக்கக் கூடாது என்பதால் தானே சச்சினை ஒருநாள் போட்டிகளில் இருந்து வெளியே அனுப்பினார்கள். இவருக்கும் அதே சட்டதிட்டங்கள் தானே? அடுத்த வருடம் முதல் நடக்கவிருக்கும்  உலகக் கோப்பை  டெஸ்ட் போட்டிகளை மனதில் கொண்டு நல்ல ஒபனர் உருவாக தானே விலகி நின்றால் நல்லது.

                            இவருக்கு பதில் ஷிகார் தவான் , அஜின்க்யா ரஹானே, முரளி விஜய் ஆகியோருக்கு வாய்ப்புகள் அளித்து பார்க்கலாம். முன்னால் வீரர் டிராவிட் சேவாக்கை மிடில் ஆர்டரில் ஆட வைக்கலாம் என்று கூறும் கருத்தையும் நான் ஆதரிக்கவில்லை.. மேடையில ஆடினாலும், ஓரமா ஆடினாலும் பவர் ஸ்டார் பிரபுதேவா ஆக முடியாது இல்லையா?


9 comments:

  1. ஹிஹி, நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை...

    ReplyDelete
  2. உங்களின் இப்பதிவின் கடைசி வரியே மொத்தக் கருத்தையும் ‘நச்’சென்று சொல்லி விட்டது. சிங்கம் சிங்கமாக சீற்றத்துடன் இருக்கும்போதே கெளரவமாக விடைபெற்று விடுவது அதன் பெருமைக்கு நல்லது!

    ReplyDelete
  3. அநேகமா அடுத்த மேட்ச்சில் இருப்பாரா என்று தெரியவில்லை...

    ReplyDelete
  4. ஸ்கூல் பையன்- கிரிக்கெட் எனக்கு உயிர்.. அவ்வளவு பிடிக்குங்க

    ReplyDelete
  5. பாலகணேஷ் ஸார் .. ஒத்த கருத்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  6. தனபாலன்-இருக்க வேண்டாம் என்பதே என் அவா..

    ReplyDelete
  7. ஃப்ரியா விடுங்க... யாரு ஆடுறாங்கன்னுறது முக்கியமில்லை... இந்தியா ஜெயிக்குதா என்பதே முக்கியம்...

    ReplyDelete
  8. இந்திய கிரிக்கெட்டில் ஒரு செஞ்சுரி அடித்து விட்டால் நிலையாக நீடித்து விடலாம்! சேவக் இப்படி தடுமாறுவது எனக்கும் கவலைதான்! புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்தான்!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...