Sunday, March 10, 2013

18th EUROPEAN FILM Festival - மகளிரை கொண்டாடும் திருவிழா

                                 18th  ஐரோப்பிய திரைப்பட திருவிழா  கோவையில் கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் குமரகுரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாலை நேரங்களில் திரையிடப்படுகிறது. கோவையில்  தொடங்கும் இந்த விழா இந்தியாவின் பல்வேறு இடங்களில் திரையிடப்படுகிறது. தமிழ்நாட்டில் நம்ம கோவையில் திரையிடப்படுவது சிறப்பு. சென்னையில் ஏப்ரல் 5 திரையிடப்படுகிறது. (அனைவருக்கும் அனுமதி இலவசம்..)


                                 மகளிர் தினத்தில் துவங்கிய இந்த விழா பெண்களை போற்றும் விதமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து திரையிடுகிறது. பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களையும், அங்கு வாழும் மனிதர்களின் பழக்க வழக்கங்களும், உணர்வுகளும் பற்றி புரிந்து கொள்ள ஓர் வாய்ப்பாய் இருக்கிறது.. ( ஹாலிவுட் படங்கள் மட்டுமே உலக சினிமா என்று தவறாய் புரிந்து கொண்ட சில திரை ஞானிகள் இந்த படங்களை பார்க்கும் போது புரிந்து கொள்வார்கள்..)


                                  எனக்கு இப்படி ஒரு திரைத் திருவிழா நடைபெறுவதை அறிவித்த நண்பர் உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. கல்லூரியின் உள்ளே திரையிடப்படுவதால் கலை உணர்வு மிக்க காட்சிகள் காண்பிக்கப் பட மாட்டாது  என்பது சில திரை ஆர்வலர்களுக்கு வருத்தமான விஷயம்.. இங்கு நான் பார்த்து ரசித்த சில படங்களை அடுத்த பதிவுகளில் பகிர்கிறேன்..

      

2 comments:

  1. /// கலை உணர்வு மிக்க காட்சிகள் காண்பிக்கப் பட மாட்டாது ///

    மிக்க நல்லது...

    ReplyDelete
  2. /// கல்லூரியின் உள்ளே திரையிடப்படுவதால் கலை உணர்வு மிக்க காட்சிகள் காண்பிக்கப் பட மாட்டாது என்பது சில திரை ஆர்வலர்களுக்கு வருத்தமான விஷயம்///

    ஆனால் மறைக்கப்பட்ட காட்சியில் என்ன இருந்தது என்பதை...
    நம் மனத்திரை பலவேறு காட்சிகளை படம் பிடித்து காட்டுகிறதே !

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...