இன்ட்ரோ
கதை
காதலா கிரிக்கெட்டா என்ற நிலையிலும் கிரிக்கெட்டையே காதலிக்கும் நாயகன் எப்படி கிரிக்கெட்டில் வெற்றி பெற்று தன் வேற்று மத காதலியையும் வென்றான் என்பதைச் சொல்வதே இந்த ஜீவா! இடையில் வரும் பாடல்கள் கொஞ்சம் போர் என்றாலும் நன்கு வடிவமைக்கப்பட்ட திரைக்கதை நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கிறது.
ஆக்க்ஷன்
விஷ்ணு விஷாலுக்கு பொருத்தமான வேடம்.. நிஜத்திலும் நல்ல கிரிக்கெட்டர் என்பதால் கிரிக்கெட் வீரருக்கான வேடம் இயல்பாய் பொருந்தியிருக்கிறது. காதல் காட்சிகளிலும் ஒக்கே. நண்பன் காதலிக்கும் பெண் தன்னிடம் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கேட்கும் காட்சியில் முகபாவங்களால் அசத்துகிறார். நல்ல கதைகளை தேர்ந்து நடித்தால் முன்னணி நட்சத்திரங்கள் வரிசையில் வரலாம். நஸ்ரியா விட்டுச் சென்ற இடத்தை 'நச்சென்று' பிடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. பதின்வயது, கல்லூரிக்காலம் என அருமையாக வித்தியாசம் காட்டியிருக்கிறார். 'அண்ணா' என்று அழைத்துக்கொண்டிருந்த விஷ்ணுவை காதல் பூத்ததும் ஒரு முழு பாட்டில் ஒயின் கொண்டு வந்து கொடுக்கும் காட்சி அழகு.
சார்லி குணசித்திர நடிப்பில் மனதில் நிற்கிறார். 'சீனியர்' ப்ளேயராக சூரி குரலை உயர்த்தாமல் காமெடி செய்வதால் நமக்கும் பிடித்துப் போகிறது. கடைசி ப்ளேயராக வந்து பந்துகளை இவர் சிதறடிக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்து டிரெஸ்ஸிங் ரூமில் ஒவ்வொரு பிளேயராக இவரை வேடிக்கை பார்ப்பதும் நல்ல நகைச்சுவைக் காட்சிகள். லக்ஷ்மன் நல்ல நடிப்பு. கதாநாயகனுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். ஆனால் இவர் இறக்கையில் தோன்ற வேண்டிய பரிதாபம் மட்டும் ஏனோ மிஸ்ஸிங்!

இசை- இயக்கம்
இமானின் இசையில் பாடல்கள் பிரமாதமாக இல்லாவிட்டாலும் பின்னணி இசை சுமாராக உள்ளது. சுசீந்திரனின் இயக்கம் மீண்டும் ஒருமுறை பேசப்படும். மதியின் ஒளிப்பதிவும், சந்தோஷின் வசனங்களும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி
விஷ்ணு- ஸ்ரீதிவ்யா காதல் காட்சிகள் மற்றும் கிரிக்கெட் காட்சிகள். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் விளையாட்டை மையப்படுத்தி வந்த திரைப்படங்களின் வரிசையில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கும். நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.
Aavee's Comments - Ninety Not Out !