புத்தகங்களை காதலிக்க
கற்றுத் தந்த தேவதை-என் தாய் ,
அக்க்ஷரங்களை அச்சில் வடித்தது போல் எழுதி
எழுத்தின் பால் ஈர்ப்பை உண்டாக்கிய தந்தை,
அழகும் அறிவும் ஒரு சேர பிரம்மன் படைத்திட்ட
என் முதல் குரு ஆஷா (மிஸ்)
உயரம் என்பது உடலில் இல்லை, மனதில் தான் என
விளங்கவைத்த ஆங்கில ஆசிரியர் டேவிட்
கணிதத்தை கசடற
கற்றுக் கொடுத்த போதும்
பத்து மதிப்பெண்ணை விழுங்கிய போது
கண்டித்த மோகன் மாஸ்டர்
பரீட்சை தாளில் என் பெயர் கண்டதும்
நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது என்று
மதிப்பெண் போட்டுவிட்டு உள்ளே திருத்த ஆரம்பித்து
என்னுள் தன்னம்பிக்கையை விதைத்த காஞ்சனா மேடம்,
சக மாணவன் போல்,
தோளில் கைபோட்டு,
Friend, Philosopher, Guide என எல்லாமாய்
என்னை வழிநடத்திய பென்சன் சார்,
அந்நிய தேசத்தில் திக்கு
தெரியாமல் தவித்த எனக்கு
வாழ்க்கையின் நெளிவு சுளுவுகளை எட்டநின்று
கற்றுக் கொடுத்த என் சகோதரர் ரமேஷ்,
ஹாஸ்ய உணர்வை சுவாரஸ்யமாய் பகிர்தல் என்ற
கலையினை ஐநூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து
ஏகலைவன் போல் நான் கற்றுக் கொண்ட
பதிவுலக 'வாத்தியார்' பாலகணேஷ்
மேற்சொன்ன அனைவருக்கும் மட்டுமேயன்றி எனக்கு கல்வியையும், வாழும் முறைகளையும் தினமும்
கற்றுத் தரும் ஆசான்கள் அனைவருக்கும்
என் ஆசிரியர் தின வாழ்த்துகள்!
ஆஹா... கல்விச் செல்வத்தை வாரித் தந்த, தைரியத்தை வாரித் தந்த ஆசான்களின் வரிசையில எனக்கும் ஒரு இடமா...? ஒரு செகண்ட் நிசமாவே கண்ல வேர்த்துடுச்சு ஆனந்து... மிக்க நன்றி. அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மகிழ்வான ஆசிரியர்தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇதுவும் ஒரு வகையான அறிவு தானே சார்!! :)
Deleteபடிச்சதுக்கப்பறம் யோசிச்சுப் பார்த்தா... என்னால எனக்குக் கத்துத் தந்த ஒன்றிரண்டு ஆசிரியர்களோட பேர் மறந்துடுச்சுன்றது மனசுக்கு உரைக்குது. அவங்க நினைவுல... பட் பெயர் நினைவுல இல்ல... அதனால ஆவியின் இந்த ஞாபக சக்திக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்.
ReplyDeleteஇவங்கள யாரையும் என்னால அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியாது சார்..! குறுகிய காலமே ஆனாலும் மனதில் முக்காலியிட்டு அமர்ந்தவர்களாயிற்றே!
Deleteஆசிரியர் தின வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி அம்மா!
Deletebeautiful.
ReplyDeleteநன்றி அப்பாதுரை சார்!
Deleteமிக அருமை!
ReplyDeleteநன்றிங்க
Deleteஓ பாட்டாவே பாடிட்டீங்களா :-)
ReplyDeleteஹிஹிஹி..!
Deleteஉங்களின் ஆசிரியர்களை நினைவு கூர்ந்த விதம் ரொம்பவும் பிடித்திருக்கிறது, ஆவி! ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! நீங்கள் ஆசிரியராக இல்லாதபோதும் உங்களிடமிருந்தும் சில பலர் ஏதாவது கற்றுக் கொண்டு இருப்பார்கள், இல்லையா? அதனால் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபடித்தவுடன் எனது பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை நினைவு கொள்ளச் செய்த அற்புதமான பதிவு
ReplyDeleteஅருமை. கணேஷைக் கண்கலங்க வைத்து விட்டீர்களே...!
ReplyDeleteஅருமையான நன்றி கூறுதல்! அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteக்ரே ட் ஆவி! அருமையான ஒரு பதிவு. அசத்திட்டீங்க! ரொம்ப சூப்பரா சொல்லியிருக்கீங்க! குடோஸ்!
ReplyDeleteஅருமை நண்பரே
ReplyDeleteஆசிரியர் என்ற முறையில் தங்களைப் பாராட்டுகிறேன்
அருமை.
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துகள்!
உங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்த விதம் மிக அருமை ஆவி.
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுகள்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
நண்பரே... எனது புதிய பதிவில் ''ஆவி'' வருகிறது காண்க...
ReplyDelete