புத்தகங்களை காதலிக்க
கற்றுத் தந்த தேவதை-என் தாய் ,
அக்க்ஷரங்களை அச்சில் வடித்தது போல் எழுதி
எழுத்தின் பால் ஈர்ப்பை உண்டாக்கிய தந்தை,
அழகும் அறிவும் ஒரு சேர பிரம்மன் படைத்திட்ட
என் முதல் குரு ஆஷா (மிஸ்)
உயரம் என்பது உடலில் இல்லை, மனதில் தான் என
விளங்கவைத்த ஆங்கில ஆசிரியர் டேவிட்
கணிதத்தை கசடற
கற்றுக் கொடுத்த போதும்
பத்து மதிப்பெண்ணை விழுங்கிய போது
கண்டித்த மோகன் மாஸ்டர்
பரீட்சை தாளில் என் பெயர் கண்டதும்
நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது என்று
மதிப்பெண் போட்டுவிட்டு உள்ளே திருத்த ஆரம்பித்து
என்னுள் தன்னம்பிக்கையை விதைத்த காஞ்சனா மேடம்,
சக மாணவன் போல்,
தோளில் கைபோட்டு,
Friend, Philosopher, Guide என எல்லாமாய்
என்னை வழிநடத்திய பென்சன் சார்,
அந்நிய தேசத்தில் திக்கு
தெரியாமல் தவித்த எனக்கு
வாழ்க்கையின் நெளிவு சுளுவுகளை எட்டநின்று
கற்றுக் கொடுத்த என் சகோதரர் ரமேஷ்,
ஹாஸ்ய உணர்வை சுவாரஸ்யமாய் பகிர்தல் என்ற
கலையினை ஐநூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து
ஏகலைவன் போல் நான் கற்றுக் கொண்ட
பதிவுலக 'வாத்தியார்' பாலகணேஷ்
மேற்சொன்ன அனைவருக்கும் மட்டுமேயன்றி எனக்கு கல்வியையும், வாழும் முறைகளையும் தினமும்
கற்றுத் தரும் ஆசான்கள் அனைவருக்கும்
என் ஆசிரியர் தின வாழ்த்துகள்!