தாய்த் தமிழ் நாட்டைப் பார்த்துட்டு வரலாமேன்னு ஒரு விசிட் அடிக்க வந்தவனுக்கு ( 4 வருடத்திற்கு பிறகு) ஒரு சின்ன விபத்து ( அமெரிக்காவில் சிக்னல் எல்லாம் பாலோ பண்ணிட்டு நம்ப ஊர்லயும் அதே நினப்போட மஞ்சள் வந்ததும் வண்டிய நிறுத்திட்டேன். அப்புறம் என்ன டோட்டல் டேமேஜ் தான்...) தமிழ் நாட்டின் மண்வாசனையை நுகர்ந்த பிறகு ( You are right, கீழ விழுந்தப்புறம் தான்) அந்நிய தேசத்திற்கு திரும்பி செல்ல மனம் ஒப்பவில்லை. So, இனி சிங்கம் சிங்கா நல்லுர்ல இருக்க முடிவு செய்திருக்கு...
இணைய நண்பர்கள் பலரது படைப்புகளையும் ஓரிரு நாட்களில் கேட்ச் பண்ணிவிட்டு விரைவில் புதிய பொலிவோடு, புதிய படைப்புடன் வருகிறேன்..