பொது மன்னிப்பு
ரொம்ப நாள் லீவு விட்டதுக்காக என் வாசகர்கள் எல்லார்கிட்டவும் பொது மன்னிப்பு கேட்டுக்கறேன். முதல் குறும்படம் எடுத்துட்டு அதோட ரெஸ்பான்ஸ் பார்த்து "சப்பாத்தி"ச்சு போயிட்டேன் (எவ்வளவு நாள் தான் பூரிச்சு போறது). படம் பார்த்த அல்லா வ்யுவர்ஸ்க்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விடுமுறை தினங்கள்ல பண்ணின ஒரே நல்ல காரியம் அஞ்சு புத்தகங்கள் படிச்சது தான். தோழர் கார்த்திக் புகழேந்தி எழுதின வற்றா நதி, தலைவர் சுஜாதாவோட சிறுகதை தொகுப்பான 'அனுமதி', அப்புறம் மிகுந்த சர்ச்சைக்குள்ளான பெருமாள் முருகன் அவர்களின் 'மாதொருபாகன்', 'ஆலவாயன்' மற்றும் 'அர்த்தநாரி' ஆகிய மூன்றையும் படித்து முடித்துவிட்டேன். இதன் புத்தக விமர்சனங்களை விரைவில் நம்ம வாசகர் கூடத்தில் எதிர்பார்க்கலாம்.
சிறுகதைப் போட்டி முடிவுகள்
ஆவி டாக்கீஸ் நடத்திய குறும்பட- சிறுகதை போட்டியின் முடிவுகள் முன்பே அறிவித்தபடி ஏப்ரல் பதினாலு அன்று வெளியிடப்படும். (டிஸ்கி- வரும் வாரத்தில் இந்த போட்டி சம்பந்தப்பட்ட இன்னொரு அறிவிப்பும் வெளியாகலாம்.பொறுத்திருங்கள் )
என்னடா உலகமிது?
ஏழு போட்டிகளில் தொடர்ந்து ஜெயிச்சதையோ , எழுபது விக்கட்டுகள் சாய்த்த பெருமையையோ நினைத்து பெருமைப்படாமல் செமி-பைனல்ஸ் வரை வந்து ஒரு நல்ல டீமிடம் தோற்றதை மட்டும் ரெட்-இங்க்கால் அடிக்கோடிட்டு வீரர்களை தரக்குறைவாக பேசுகிறார்கள், அதுவாவது போகட்டும், விராட் கோஹ்லி சரியாக விளையாடாததற்கு அனுஷ்கா ஷர்மாவை கிண்டல் செய்து பரப்பிய புண்ணியவான்களை நினைத்தால் கேட்கத் தோன்றுவது - என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?
சரிவிடுங்க, ஐபிஎல் வந்துட்டா உலகக் கோப்பையை எல்லாரும் மறந்துடுவாங்க. வரும் வெள்ளி கேப்டனின் மகன் நடிப்பில் 'சகாப்தம்', உதயநிதியின் 'நன்பேண்டா' மற்றும் கார்த்தியின் 'கொம்பன்' என மூன்று பெரிய தமிழ்ப்படங்களும் 'பாஸ்ட் அண்டு ப்யுரியஸ் 7" என்ற ஆங்கிலப் படமும் களத்தில் குதிக்கின்றன. நான் முதலில் கொம்பனை சந்திக்க ப்ளான் பண்ணியிருக்கேன். நீங்க எதைப் பார்க்க போறீங்க?