Tuesday, March 31, 2015

பயணிகள்-நிழற்குடை - 2015MAR31பொது மன்னிப்பு 

                ரொம்ப நாள் லீவு விட்டதுக்காக என் வாசகர்கள் எல்லார்கிட்டவும் பொது மன்னிப்பு கேட்டுக்கறேன். முதல் குறும்படம் எடுத்துட்டு அதோட ரெஸ்பான்ஸ் பார்த்து "சப்பாத்தி"ச்சு போயிட்டேன் (எவ்வளவு நாள் தான் பூரிச்சு போறது). படம் பார்த்த அல்லா வ்யுவர்ஸ்க்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விடுமுறை தினங்கள்ல பண்ணின ஒரே நல்ல காரியம்  அஞ்சு புத்தகங்கள் படிச்சது தான். தோழர் கார்த்திக் புகழேந்தி எழுதின வற்றா நதி, தலைவர் சுஜாதாவோட சிறுகதை தொகுப்பான 'அனுமதி', அப்புறம் மிகுந்த சர்ச்சைக்குள்ளான பெருமாள் முருகன் அவர்களின் 'மாதொருபாகன்', 'ஆலவாயன்' மற்றும் 'அர்த்தநாரி' ஆகிய மூன்றையும் படித்து முடித்துவிட்டேன். இதன் புத்தக விமர்சனங்களை விரைவில் நம்ம  வாசகர் கூடத்தில் எதிர்பார்க்கலாம்.


சிறுகதைப் போட்டி முடிவுகள் 
                  ஆவி டாக்கீஸ் நடத்திய குறும்பட- சிறுகதை போட்டியின் முடிவுகள் முன்பே அறிவித்தபடி ஏப்ரல் பதினாலு அன்று வெளியிடப்படும். (டிஸ்கி- வரும் வாரத்தில் இந்த போட்டி சம்பந்தப்பட்ட  இன்னொரு அறிவிப்பும் வெளியாகலாம்.பொறுத்திருங்கள்  )


என்னடா உலகமிது?                    ஏழு போட்டிகளில் தொடர்ந்து ஜெயிச்சதையோ , எழுபது விக்கட்டுகள் சாய்த்த பெருமையையோ நினைத்து பெருமைப்படாமல் செமி-பைனல்ஸ் வரை வந்து ஒரு நல்ல டீமிடம் தோற்றதை மட்டும் ரெட்-இங்க்கால் அடிக்கோடிட்டு வீரர்களை தரக்குறைவாக பேசுகிறார்கள், அதுவாவது போகட்டும், விராட் கோஹ்லி சரியாக விளையாடாததற்கு அனுஷ்கா ஷர்மாவை கிண்டல் செய்து பரப்பிய புண்ணியவான்களை நினைத்தால் கேட்கத் தோன்றுவது - என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?


                    சரிவிடுங்க, ஐபிஎல் வந்துட்டா உலகக் கோப்பையை எல்லாரும் மறந்துடுவாங்க. வரும் வெள்ளி  கேப்டனின் மகன் நடிப்பில் 'சகாப்தம்', உதயநிதியின் 'நன்பேண்டா' மற்றும் கார்த்தியின் 'கொம்பன்' என மூன்று பெரிய தமிழ்ப்படங்களும் 'பாஸ்ட் அண்டு ப்யுரியஸ் 7" என்ற ஆங்கிலப் படமும் களத்தில் குதிக்கின்றன. நான் முதலில் கொம்பனை சந்திக்க ப்ளான் பண்ணியிருக்கேன். நீங்க எதைப் பார்க்க போறீங்க?

14 comments:

 1. இவங்க தான் அனுஷ்காவா? அப்புறம் ஏன் சொல்ல மாட்டாங்கண்ணேன..

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி.. அதென்னவோ உண்மைதான்..

   Delete
 2. அஞ்சப்பர் பக்கம் போன கோழியும் அனுஷ்கா பின்னால போன கோலியும் மனுஷங்க வாய்ல விழாமப் போகமாட்டாங்க என்று எனக்கு வாட்சப் கவிதை வந்தது! ரசித்தேன். என்ன இருந்தாலும் கவனம் (கிரிக்கெட்) ஆட்டத்தில் இருக்காதுல்ல?

  இன்னொரு ரசனையான ஜோக்கும் சொல்வாங்க "தோனி ஷர்மாவுக்கு கம்பெனி குடுன்னு சொன்னாரு. நான் ஷுஷ்கா ஷர்மா பத்தித்தான் சொல்றாருன்னு நினைச்சுட்டேன். அவர் சொன்னது ரோஹித் ஷர்மான்னு உள்ள வந்தப்புறம் சொல்றாரு... முதல்லியே தெளிவாச் சொல்லியிருக்கணுமில்ல?" என்று கேட்பதாய்!

  சும்மா இதெல்லாம் ஜோக்தான்!

  ReplyDelete
  Replies
  1. hahaha சார் நீங்களுமா?

   Delete
 3. சீக்கிரம் சந்தித்து விட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க...!

  "சப்பாத்தி"ச்சு - நம்ம வலையுலக வாத்தியாரோட இருந்தா இப்படித்தான்... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. //நம்ம வலையுலக வாத்தியாரோட இருந்தா இப்படித்தான்..///

   ஹஹஹா..

   Delete
 4. சொன்னதிற்காக பதிவு எழுதியமைக்கு நன்றி தல...
  உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பாக்குறோம் ....

  அப்புறம் அந்த சப்பாத்தி செம மேட்டர்மா!!! கஷ்டப்பட்டு அடக்கி கொண்டேன் சிரிப்பை!

  ReplyDelete
  Replies
  1. சப்பாத்திகள் கூட 'மேட்டர்' ஆகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமே என்கிற கவலை ஒட்டிக் கொள்கிறது எனக்கு..!

   Delete
 5. Welcome back!

  இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் - திருந்தவே மாட்டார்கள்!

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. ஆவி! ஓ சாரி! மிஸ் பண்ணிட்டோம் உங்கள் "come back"! பதிவ!

  சப்பாத்திச்சு ஹஹஹஹஹஹ் ..(அல்லா ..).ம்ம்ம்ம் சென்னைல கொஞ்ச நாள் தங்கினதே கொஞ்சம் கூவம் வாசனை வீசுதே! ஹ்ஹாஹ்ஹ்ஹ் ஹேய் சும்மா ஜோக் தான்பா...

  அடப் போங்க ஆவி! நம்ம சமூகம் உருப்படப் போறதில்ல...

  ஆஆஆ! காப்டன் மகனா? இப்பவே கண்ணக் கட்டுது! உங்களுக்கு ஆல் தெ பெஸ்ட்!

  கீதா

  ReplyDelete
 8. கிரிக்கெட் மோகம் வெறியாவதால் இப்படி தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் பரவுகிறது! ஐ.பி. எல் வந்ததும் எல்லாம் மாறிவிடும்!

  ReplyDelete
 9. கிரிக்கெட் மோகம் வெறியாவதால் இப்படி தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் பரவுகிறது! ஐ.பி. எல் வந்ததும் எல்லாம் மாறிவிடும்!

  ReplyDelete
 10. விவேக் மயில் சாமி படத்தை போட்டு எனக்கு வந்த வாட்ஸ் அப் மெசேஜ் "opponent team சட்டையில பச்சை இருந்தா நாம ஜெயிசிடுவோம்னு சொன்னியே அதைக்கூட மன்னிச்சிருவேண்டா. ஆனா அனுஷ்கா வந்தா விராத் கோலி செஞ்சுரி அடிப்பான்னு பீலா விட்டியே அதை மன்னிக்கவே மாட்டேண்டா"

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...