Monday, September 3, 2012

என் ஆசிரியருக்கு!!




சித்திரமோ, செந்தமிழோ,
சூத்திரமோ, அயல் மொழியோ-எம் 
சிந்தையிலே இருத்திடவே 
நாள் முழுதும் பாடுபட்டாய்!!

ஒன்னொன்னும் ரெண்டென்று  
நீர்  சொன்ன மனக்கணக்கு! 
முள் ரெண்டு உள்ளதென்று 
நீர் சொன்ன மணிக்கணக்கு!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு -புரிய 
வைத்தீர் இனி ஏது தாழ்வு?
கற்பவை கசடற கற்றபின் உணர்ந்தேன் 
என் ஆசிரியரின் பெருமையை!!

 மரத்தினின்றும் விழுந்திட்ட ஆப்பிளைக் கொண்டு 
அறிவியலும் விளக்கி விட்டீர்- அதிசயமே!
மரங்களின் தேவை உணர்த்திய அசோகரை 
மனத்திரையில் வரலாறாய் ஓடவிட்டீர்- அது சுகமே!!

கணக்குகளோ, கவிதைகளோ, 
 கட்டிடமோ, திரைப்படமோ..
காலமெல்லாம் நான் படைக்க 
முதலெழுத்தை கற்பித்தீர்..மிக்க  நன்றி!

கையிலிருக்கும் உங்கள் எழுத்தாணி - நாங்கள் 
வாழ்வினில் உயர அது ஏணி!!
பாடத்தோடு பண்பினையும் பயிற்றுவித்த ஆசிரியரே 
உங்களை என்றும் மறவாது இந்த அணி!!


How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...