சித்திரமோ, செந்தமிழோ,
சூத்திரமோ, அயல் மொழியோ-எம்
சிந்தையிலே இருத்திடவே
நாள் முழுதும் பாடுபட்டாய்!!
ஒன்னொன்னும் ரெண்டென்று
நீர் சொன்ன மனக்கணக்கு!
முள் ரெண்டு உள்ளதென்று
நீர் சொன்ன மணிக்கணக்கு!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு -புரிய
வைத்தீர் இனி ஏது தாழ்வு?
கற்பவை கசடற கற்றபின் உணர்ந்தேன்
என் ஆசிரியரின் பெருமையை!!
மரத்தினின்றும் விழுந்திட்ட ஆப்பிளைக் கொண்டு
அறிவியலும் விளக்கி விட்டீர்- அதிசயமே!
மரங்களின் தேவை உணர்த்திய அசோகரை
மனத்திரையில் வரலாறாய் ஓடவிட்டீர்- அது சுகமே!!
கணக்குகளோ, கவிதைகளோ,
கட்டிடமோ, திரைப்படமோ..
காலமெல்லாம் நான் படைக்க
முதலெழுத்தை கற்பித்தீர்..மிக்க நன்றி!
கையிலிருக்கும் உங்கள் எழுத்தாணி - நாங்கள்
வாழ்வினில் உயர அது ஏணி!!
பாடத்தோடு பண்பினையும் பயிற்றுவித்த ஆசிரியரே
உங்களை என்றும் மறவாது இந்த அணி!!
சிறப்பான நாளுக்கு முன் சிறப்பான கவிதை...
ReplyDeleteஅருமையாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்!!
ReplyDeleteஆஹா ஆசானை போற்றி அதை நினைவில் மீட்டெடுத்த ஆவிக்கு நன்றி. ஆசிரியரான என் தந்தையின் நினைவினை கிள்ளி சென்றது.
ReplyDeleteநன்றி, கலாகுமரன் சார்..
Deleteஅன்பின் ஆவி - அருமையான கவிதை - ஆசிரியப் பெருந்தகைகளை வாழ்த்தியமை நன்று - என் துணைவு உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்கள அனைவருக்கும் எஙகளது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஎன் தந்தையும் ஒரு ஆசிரியரே.. நானும் சில காலம் ஆசிரியனாய் பணிபுரிந்தேன். அதில் கிடைக்கும் ஒரு மன நிறைவு எந்தப் பணியிலும் கிடைக்காது..
Deleteகருத்துக்கு நன்றி ஐயா..
//கற்பவை கசடற கற்றபின் உணர்ந்தேன்
ReplyDeleteஎன் ஆசிரியரின் பெருமையை!!//
மிகவும் சரி அப்போது தான் நம்மால் ஆசிரியரின் பெருமைகளை உணர முடியும் :)
ஆம், நண்பரே..
Delete//கையிலிருக்கும் உங்கள் எழுத்தாணி - நாங்கள்
ReplyDeleteவாழ்வினில் உயர அது ஏணி!!//
ஏணியில ஏறும்போது ஆணி குத்ததா ?? :)
நம்மள மாதிரியே சிந்திக்கிறாங்கப்பா..
Delete