சுமார் 3 மணி நேரம் ஓடும் இந்த மாற்றான் படத்தின் கதைச் சுருக்கம் இதுதான். இந்திய அரசாங்கத்தால் பல மட்டங்களிலும் பலரால் புறக்கணிக்கப் படும் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர், மனம் வெறுத்து தன கண்டுபிடிப்பை தீய வழிகளில் பயன்படுத்துகிறார். இதன் மூலம் பல குழந்தைகள் பாதிக்கப் படும் அபாயம் இருக்கிறது. இந்த விஷயம் இவருடைய பிள்ளைகளான இரட்டையர்களுக்கு தெரிய வரும் போது நிகழும் சம்பவங்களே கதை.
75 / 100
சூர்யா வழக்கம் போல் அசத்தல் நடிப்பு. படத்தின் முதுகெலும்பு என்று கூட சொல்லலாம். அகிலன்-விமலன் எனும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் வேடம்.. இரண்டு வேடங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை, வார்த்தை உச்சரிப்பு மற்றும் உடல் மொழி வாயிலாக வேறுபடுத்திக் காட்டுகிறார்.. யாரோ யாரோ பாடலில் கண்களில் நம்மையும் அறியாமல் எட்டிப் பார்க்க வைக்கிறார். தனது அண்ணனை புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டு விமலன் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் போது அகிலன் அழுது புலம்புவதாகட்டும் மனதில் நின்று விடுகிறார்.
கார்த்தி-காஜல் இடையே நாம் பார்த்த கெமிஸ்ட்ரி அண்ணன் சூர்யா- காஜல் ஜோடியிடம் இல்லை. தவிர வழக்கமான துருதுருப்போ, முக பாவனைகளோ, கவர்ந்திழுக்கும் நடனமோ காஜலிடம் இல்லை. விஞ்ஞானி அப்பாவாக நடித்திருப்பவர் (13 B வில்லன்) தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கச்சிதமாக செய்து போகிறார்.. இரண்டாம் பாதி காமெடி இல்லாததாலும், தேவையற்ற சில காட்சிகளாலும் தொய்வுடன் செல்கிறது..
இரட்டையர்களை காண்பிப்பதாகட்டும், வெளி நாடுகள், இயற்கை என்று அனைத்தையும் அற்புதமாக படம் பிடித்த புகைப்பட வல்லுனருக்கு ஒரு சொட்டு.. சிறந்த பின்னணி இசை மற்றும் பாடல்களை கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ் தன்னை மீண்டும் ஒரு முறை சிறந்த இசையமைப்பாளராய் நிரூபித்துள்ளார்..
நல்ல கதை தேர்ந்தெடுத்து படம் இயக்கிய கே.வி. ஆனந்துக்கு பாராட்டு தெரிவிக்கும் அதே வேளையில் சில லாஜிக் இல்லா காட்சிகளை பற்றிய கேள்விகள். தன் நாட்டிலிருந்து உண்மை கண்டறிய வந்த வோல்கா ஏன் மற்ற விளையாட்டு வீரர்களை முன்பே சந்திக்கவில்லை? தன் நண்பன் அசோக் மற்றும் வோல்கா இறப்புக்கு அழும் காஜல் தன் காதலன் இறந்த செய்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விசாரணையில் குறியாய் இருப்பது நெருடல்.. இது போன்ற ஓட்டைகளை தவிர்த்து இழுவையான கிளைமாக்ஸை தவிர்த்திருந்தால் இந்தப் படம் உலகத் தரத்துக்கு இணையான படம் என்பதில் ஐயமில்லை!!
மச்சி...நல்லா இருக்கு விமர்சனம்..படத்த தவிர...பார்க்கலாம் ஒருமுறை அப்படிதானே....
ReplyDeleteguess the movie is not upto mark..:(
ReplyDeleteமச்சி, படம் நல்லா இருக்கு.. இடைவேளைக்கப்புறம் கொஞ்சம் இழுவை.அவ்வளவுதான்.. நம்ம பிளாக்கர்ஸ் சைட்டுல எப்படி இணைப்பு கொடுக்கறது ??
ReplyDeleteஜானு, சூர்யாவின் உழைப்புக்காகவாவுது ஒரு முறை பார்க்கலாம்.. கமலுக்கு ஒரு அபூர்வ சகோதரர்கள் கிடைச்ச மாதிரி சூர்யாவுக்கு இந்த படம்!! ;-)
ReplyDeleteNice review Anand. Konjam koottam oyattum'nu waiting to see...:)
ReplyDeleteKandippa paarunga Bhuvana.. Nice Movie.. Cudn't see u much of ur writing.. Busy huh?? ;-)
ReplyDelete// உலகத் தரத்துக்கு இணையான படம் //
ReplyDeleteசூப்பரப்பு...
படம் இழுவையா.. ? உங்க விமர்சனம் சுருக்கமாகவும் தெளிவாகவும் கொடுத்திருக்கீங்க நன்றி Mr.ஆவி
ReplyDelete