Wednesday, October 31, 2012

ஃபன் சினிமாஸ் ( FUN CINEMAS )


                கோவையைச் சேர்ந்த சினிமா பிரியர்களுக்கு ஒரு இனிய செய்தி.. கோவை பீளமேட்டில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஃபன் ரிபப்ளிக் மாலில் புதியதாக ஃபன் சினிமாஸ் திறந்துள்ளார்கள். கடந்த வாரம் வெள்ளி (அக்டோபர் 26) முதல் இது செயல்படத் துவங்கி உள்ளது..


                     

                  பி.எஸ்.ஜி. என்ஜினியரிங் கல்லூரியின் மிக அருகில் அமைந்துள்ள இந்த திரையரங்கிற்கு செல்ல ஏராளமான பேருந்துகள் உண்டு. எனினும் நகரத்தை விட்டு மிகத் தொலைவில் உள்ளது நிச்சயம் ஒரு மைனஸ் பாய்ன்ட். மேலும் இது போன்ற திரையரங்குகள் நடுத்தர மற்றும் உயர்குடிக்கு மட்டும் என்றாகிவிட்ட நிலையில் எல்லோரிடம் டூ-வீலர் அல்லது மகிழுந்து இருக்கும்.


                 பில்டிங்கின் கீழ்த் தளத்தில் மிகப் பெரிய பார்க்கிங் உள்ளது.. கிட்டத்தட்ட 50 முதல் 60 கார்களும், சுமார் 300 டூ-வீலர்களும் நிறுத்தும் வசதி உள்ளது. பார்க்கிங் செய்வதற்கு (முதல் இரண்டு மணி நேரம்) கார்களுக்கு ரூ. 20 டூ-வீலர்களுக்கு ரூ.10  . பின் அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 10 வசூலிக்கிறார்கள்.

                    திரையரங்கினுள் தின்பண்டங்கள் மட்டுமல்லாது நம் கைப்பை, பேக்பேக் ( Backpack ) ஆகியவற்றையும், காமிரா உள்ளிட்ட சாதனங்களையும் வெளியே டோக்கன் பெற்று வைத்துசெல்ல சொல்கிறார்கள்.. திரைப்படம் துவங்க பத்து நிமிடங்களுக்கு முன் உள்ளே நுழைய அனுமதி இல்லை. ஒவ்வொருவரையும் மெட்டல் டிடக்டர் சோதனை மற்றும் ஒரு சிப்பந்தி சோதித்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

                 
                  உள்ளே ஐந்து ஸ்க்ரீன்கள் உள்ளன. உள்ளே சுமார் 1250-1300  பேர் அமரலாம். 7.1 ஒலி கட்டமைப்பு கொண்டிருப்பதால் துல்லியமான ஒலியினை கேட்கலாம். இத்திரையரங்கில் டிக்கட் புக் செய்ய பின்வரும் சுட்டியை கிளிக் செய்யலாம் அல்லது ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட்  பயனீட்டாளர்கள் FUNAPP எனும் அப்ளிகேஷனை இறக்கிக் கொள்ளலாம். https://www.funcinemas.com/. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.120 மட்டுமே(??)!! இத்திரையரங்கம் சிறப்பாக செயல்பட்டு வரும் புருக்பீல்ட்ஸ்-தி சினிமாசுக்கு  போட்டியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..



6 comments:

  1. மச்சி...என்ன படம் பார்த்த...அதை சொல்லல....அதுக்கு விமர்சனம் தனியா...?

    ReplyDelete
  2. TED பார்த்தேன்.. விமர்சனம் போடணும்னு தான் நினைச்சேன்.. அப்புறம் வரிசையா நிறையா நல்ல படங்கள் விமர்சனம் போட வேண்டி இருந்ததால் இதை கைவிட்டுட்டேன். :-)

    SKYFALL (007)- திரை விமர்சனம் Coming Soon!!

    ReplyDelete
  3. இது என் முதல் வருகை தோழரே!

    நல்ல விஷயம்.. உங்கள் ஊருக்கு இது.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ஆயிஷா.. ஆம் என் போன்ற சினிமாப் பிரியர்களுக்கு இது மிகவும் நல்ல விஷயம்!

    ReplyDelete
  5. Waiting for this for a while now as we live close to this place... didn't try it yet. But pretty sure it is costly like every other store in this mall..:)

    ReplyDelete
  6. s bhuvana. went inside shoppers stop to get my favorite calvin klien jean and stunned loking at d price, it was 10000 n i cudnt believe it!! wow!!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...