மலேசியா சிங்கப்பூர்ன்னு சுத்தீட்டு வர்றதுக்குள்ள கொஞ்சம் ஆறிப் போயிடிச்சி இந்த பீட்சா.. ஆனாலும் இந்த விமர்சனத்தை எழுதி என் வாசகர்கள் ஒன்றிரண்டு பேரையாவது இந்த படத்தை பார்க்க வைக்க வேண்டுமென்பது என் ஆவல்..
"நாளைய இயக்குனர்" புகழ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் முதல் படம் இது. "Hallucination", "Psycho Thriller", "Serial Killer" இப்படி பல த்ரில்லர்களை பார்த்து விட்ட தமிழ் சினிமாவிற்கு ஒரு வித்தியாசமான கோணத்தில் கதை சொல்லி இருப்பது இயக்குனரின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.. இன்னும் பல நல்ல படங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் சார்..
விஜய் சேதுபதி - கதையின் நாயகன், பொருத்தமான தேர்வு.. இதற்கு முன் சில படங்கள் நடித்திருந்தாலும் இந்த படம் இவருக்கு நிச்சயம் ஒரு திருப்பு முனையாக அமையும். சில இடங்களில் காதல் கொண்டேன் தனுஷை நினைவுபடுத்தினாலும் தன் இயல்பான நடிப்பினால் மக்கள் மனம் கவர்கிறார். நாயகி ரம்யா நம்பீசன் - இவருக்கு அதிகம் வேலை இல்லையென்றாலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
ஆவிகள் உலகில் இருக்கிறதா, என்ற கேள்வியில் துவங்கும் படம் காதல், லிவிங் டுகெதர், ப்ரெக்னன்ட் என தடம் மாறிச் செல்கிறதோ என நாம் நினைக்கும் போது பீட்சா டெலிவரிக்கு செல்லும் நாயகன் மூன்று பேய்களிடம் மாட்டிக் கொள்கிறான். அது மூன்றும் பேய் தானா இல்லை வேறு யாராவது கொலை செய்கிறார்களா என நாம் நினைப்பதற்கு முன், தன் மனைவி கொல்லப்பட்டதாய் சொல்வதை நம்ப முடியாமல், தன் மனைவி தான் பேயோ என நாயகன் நினைப்பது போல் நாமும் நினைக்க.. இப்படி படம் பல திருப்பங்களுடன் நம்மை ஒரு ரோலர் கோஸ்டர் ரைடில் ஏற்றிச் செல்கிறது..
இசையின் பங்கும் இந்த படத்தின் முக்கிய பலம்.குறிப்பாய் ஸ்மிதா மற்றும் பாபியின் ரிங்க்டோன்களும் , மிரட்டும் ரீ-ரெக்கார்டிங்கும் கலக்கல். படத்தின் கிளைமாக்ஸ் ஹாலிவுட் படங்களை நினைவு படுத்துகிறது. ரூ.345, தில்லு முள்ளு பாடல், திவ்யா என படம் முடிந்தும் ரசிகர்கள் பேசிக் கொண்டே வெளிவருவது கேட்கிறது..குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் இந்த தமிழ் பீட்சாவை நீங்களும் சுவைத்து பாருங்களேன்..
88 / 100
டிஸ்கி - எல்லாம் ஒகே.. ஆனா பீட்சாவுக்கும் இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்.. படத்தை இன்னொரு முறை பார்க்கணுமோ??
செம படம்..மச்சி..பார்த்தேன் நானும்..நன்றாக இருக்கு.விமர்சனம் அருமை...
ReplyDeleteசுருக்கமான 'நச்' விமர்சனம்....
ReplyDeleteநன்றி ஜீவா!!
ReplyDeleteநன்றி தனபாலன்!!
ReplyDeleteபாத்துட்டா போச்சு...
ReplyDelete//டிஸ்கி - எல்லாம் ஒகே.. ஆனா பீட்சாவுக்கும் இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்.. படத்தை இன்னொரு முறை பார்க்கணுமோ??//
ReplyDeleteஅப்ப மறுபடி போஸ்ட் போடுவீங்களா? அவ்வ்வ்வ்...:)