தாய் போல வேண்டுமென்றேன்- சிறு
பிள்ளையாய் நீ வந்தாய்!
'பெண் நட்பு' பாராட்டும் -நல்ல
தோழியாகவும் நீ இருந்தாய்!
சிகரங்கள் வேண்டாம் - சின்ன சின்ன
ஆசைகள் போதுமென்றாய்!
முன்னும் வேண்டாம், பின்புறமும் வேண்டாம்
உடன் வரவே விரும்பினாய்!
விடியல் வந்தால் எனக்கென்னவென்று - ஏழரை
மணிவரை முகம் புதைத்துறங்குகிறாய்!
நீ அழகாய் இருக்கிறாய் என்று தினம் நான்
பொய்யுரைக்க ஆசைப்பட்டாய்!!
கனவுகள் மெய்ப்பட வேண்டுமென்று- நான்
எப்போதோ படித்திருந்தேன்..
கனவாய்ப் போன நீ மெய்யாய்
வேண்டுமென விரும்புகிறேன்!!
நடக்கட்டும்... ரசிக்க வைக்கும் வரிகள்... நன்றி...
ReplyDeleteமச்சி...கலக்கல்...
ReplyDeleteஇது வெறும் கவிதைனு தோணலைங்க... ஏதோ தூது மடல் மாதிரி இருக்கு... ஜஸ்ட்கிட்டிங் ... குட் ஒன்...:)
ReplyDeleteஎன்னப்பா செய்வது காதலிக்கும் போது ஒரு முகத்தை மட்டும்தானே காண்பிக்கிறீர்கள்/பார்க்கிறீர்கள் அதனால் வரும் பிரச்சனைதான். புரிந்தது நீங்க ஏன் ஆவியானிங்கன்னு
ReplyDeleteநன்றி தனபாலன்
ReplyDeleteநன்றி ஜீவா
ReplyDeleteபுவனா, சில பதிவுகள் எழுதும் போது இது வாசகர்களுக்கு சொல்ல வந்த கருத்துகள் புரியுமான்னு யோசிப்போம். சில பதிவுகள் கருத்துகள் புரிந்தாலும் அதன் உள்ளர்த்தம் புரியக் கூடாதுன்னும் யோசிப்போம். பதிவுகள மேலோட்டமா படிக்காம கருத்தை உள்வாங்கி படிக்கறவங்களுக்கு நிச்சயம் அந்த உள்ளர்த்தம் விளங்கிடும்..
ReplyDeleteYou were right, Delivery ஆகாத ஒரு சில mail ல்ல இதுவும் ஒண்ணு!! :-(
எழில் மேடம்,
ReplyDeleteநீங்க சொல்றத ஒத்துக்கறேன். காதலிக்கும் போது ஒரு முகத்தை தான் பார்க்கிறோம், சில சமயம் முகங்களை கூடப் பாராமல் காதலிக்கிறோம்..
ஆணோ பெண்ணோ, திருமணத்திற்கு முன்பிருந்த அதே முகங்களை எதிர்பார்ப்பது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது போன்றது.. கல்லூரி மாணவனுக்கும், குடும்பத் தலைவனுக்கும் பல நூறு வித்தியாசங்கள் உள்ளன..
//புரிந்தது நீங்க ஏன் ஆவியானிங்கன்னு//
ஹாஹா.. மனிதர்களை விட ஆவிகளுக்கு அனுபவம் ஜாஸ்தின்னு ஒத்துக்கறீங்களா? :-)
கனவு பயணத்தின்
ReplyDeleteமுடிவு நினைவில்...
நிச்சயம் நடந்தேரும் ஒரு நாள்.
Thanks kalakumaran
ReplyDelete