Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Friday, December 13, 2013

சீனு!


மு.கு: பின்வருவன யாரையும் குறிப்பிடுவன அல்ல.. முழுக்க முழுக்க கற்பனையே.. அதை TR ஸ்டைலில் படிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.




கிரிக்கெட்டில் அசத்திடுவான் ஸ்டெயினு- 
பதிவுலகை கலக்கிடுவான் நம்ம சீனு..

தண்ணிக்குள்ள மிதந்தா அது மீனு - கன்னி
மனசுக்குள்ள இருந்தா அவன் சீனு..

சிரிக்க சிரிக்க பேசிடுவான் பீனு (Bean)
சிரிச்சுகிட்டே அசத்திடுவான் சீனு..

படையோட வந்திடுவான் டான்-உ (DON)- கோவைக்கு
மழையோட வந்திடுவான் எங்க சீனு..

சேலம் வழி கோவை வரும் டிரெயினு- 
தென்காசி வழி வந்திடுவான் நம்ம கானு.. (Khan)

மலையவே தூக்கிடுவான் சூப்பர் மேனு- 'காணி' 
இக்கட லேது அந்த்த சீனு..

ஆண்டிராயிடு போனு வச்சிருக்கேன் நானு - அந்த 
ஆண்ட்ரியாவையே வச்சிருக்கான் (ஹார்ட்டுல) இந்த சீனு..

கண்ணாடி போட்டிருக்கும் மானு - அவனிடம் 
கதை கேட்க இறங்கிடுமே சீலிங் பேனு.. (Fan)

தமிழோட பெருமைய நீ  பேணு- அதுக்கு தன்
எழுத்தால துணை நிப்பான் சீனு!





Tuesday, October 22, 2013

நினைத்தாலே இனிக்கும்.. (வாத்தியார் ஸ்பெஷல்)




                      நினைத்தாலே இனிக்கும் ன்னதும் பட விமர்சனம் ன்னோ, இல்ல வாத்தியார் ஸ்பெஷல் ன்னதும் MGR பற்றிய ந்யூஸ் ன்னோ நீங்க நினைச்சீங்கன்னா நீங்க ஆவியாலஜில ரொம்ப வீக்குன்னு அர்த்தம். இது என்னோட(எங்க) வாத்தியார் பாலகணேஷ் பற்றிய நியுஸ். கோவை வந்த போது கேஜி தியேட்டர் வாசலில் ஒட்டியிருந்த "நினைத்தாலே இனிக்கும்" போஸ்டரைப் பார்த்து "ரொம்ப நல்ல படம், திரைக்கு வந்தா பார்க்கணும்" என்றார்.. அவர் சொல்லும் போது நான் இடப்பக்கம் பிஷப் அப்பாசாமியின் அழகுகளை ரசித்துக் கொண்டிருந்தது தெரியாமலிருக்க, "ஷ்யூர் சார், இப்போவே போலாமா" என்றேன். "என்ன, நினைத்தாலே இனிக்கும் ரிலீஸ் ஆயிடுச்சா" என்று அதிர்ந்தவரை "ரிலீஸ் ஆனதும் போலாம்னு சொன்னேன் சார்" என்றேன். சென்னை செல்லும் போது என் பிரியமான ராஜாராணியையும், "நினைத்தாலே இனிக்கும்" படத்தையும் அவருடன் பார்த்து விடுவது என முடிவு செய்தேன்.

                     சென்னை சென்ற ஆவி, முதல் நாளிலிருந்தே வாத்தியாரின் தோள்களில் தொற்றிக் கொண்டது. "ஆவி பாவியெல்லாம் வந்தப்புறம் என்னை மறந்துட்டீங்களே" என சுற்றமும் நட்பும் புலம்பும் அளவிற்கு இறுகப் பற்றிக் கொண்டது. ( டேய், நீ என்ன ஐஸ் வச்சாலும் சகோதர பாசத்துக்கு அப்புறம் தான் இந்த குரு-சிஷ்யா ரிலேஷன்ஷிப்பெல்லாம் ன்னு வாத்தியார் சொல்றது மைல்டா கேட்டுது). காலையிலேயே கிளம்பி ஒரு வேலையாக குருவுடன் "காபி டே"  சென்றேன். அவர்கள் எழுதியிருந்த தொனி (தோணி இல்ல!!)  தென் தமிழ்நாட்டில் "வாடே, போடே " என்பது போல் "காபி டே"  என்று படிக்கத் தோன்றியது.  "இரயிலில் வந்த மயிலை" பற்றி கூறிக் கொண்டே உள்நுழைந்த போது அங்கே ஒரு IT குயில் அமர்ந்திருந்தது. காதில் ஹெட்போனும், கழுத்தில் ஐடி கார்டும் அணிந்தவாறே அந்த ஸ்லீவ்லெஸ் சிட்டு தன் ஐ-போனை  நோண்டிக் கொண்டிருந்தது.

                        சபை நாகரீகம் கருதி எங்கள் சுருதியை குறைத்துக் கொண்டோம். எனக்கு ஒரு 'கேப்பச்சினோவும்', தலைவருக்கு ஒரு 'காபி லாட்டே' வும் ஆர்டர் செய்துவிட்டு எங்கள் பேச்சில் மும்மரமானோம். சற்று நேரத்தில் ஒரு ஆள் பல்சரில் வந்ததையோ, அந்தக் குயிலின் முன் அமர்ந்ததையோ, அவனுடைய கோடுபோட்ட மஞ்சள் ஷர்ட்டின் மீது ஒரு ஈ உட்கார்ந்திருந்ததையோ சத்தியமாய் நாங்கள் கவனிக்கவே இல்லை. அது அவளுடைய டீமில் கீழ் பணிபுரிபவன் போல் இருந்தது. அதுவரை குத்து விளக்காய் அமர்ந்திருந்தவள் சட்டென்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு எடிசனின் மொழியில் உரையாட ஆரம்பித்தாள். அவள் செய்கைகள் பலதும் "சற்று முன் சைலண்டாக இருந்த சுனாமி இவள்தானா?" என நினைக்க வைத்தது. எதிரில் அமர்ந்திருந்தவன் "சோனியாவைக் கண்ட மம்மு" போல் கப்சிப் என்றிருந்தான். இவ்வளவு நேரம் நடந்த களேபாரம் எதையும் கண்டுகொள்ளாமல் தன் லாட்டேவை சுவைத்த தலைவரைப் பார்த்த போது திருவள்ளுவரின் எதோ ஒரு குறள் தான் நினைவுக்கு வந்தது..

                           சுமார் ஒரு மணி நேரம் கதைத்து விட்டு நாங்கள் வெளியேறிய போது கொஞ்சமாய் பசித்தது. அருகிலிருந்த ஒரு பெரியவரிடம் "இங்க நல்ல ஹோட்டல் எங்கிருக்கு" என்றதற்கு அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு பின் பேசாமல் நடக்க ஆரம்பித்தார். ஆவிக்கு நேர்ந்த அசிங்கத்தை அசட்டை செய்துவிட்டு அருகிலிருந்த ஒரு டீக்கடையில் கேட்டு "ஹோட்டல் அஞ்சுகம் " சென்றோம். முட்டையுடன் பிரியாணி அந்த ரேட்டுக்கு நல்ல டெஸ்டுடன் இருந்தது. இடையிடையே அது ஒருவேளை காக்கா பிரியாணியாயிருக்குமோ என்ற சந்தேகம் உள்ளே தோன்றினாலும் காக்காவும் நான்-வெஜ் தானே என்று சமாதானப் படுத்திக் கொண்டு சாப்பிட்டு முடித்தோம்.  மதியம் ரங்கநாதன் தெருவில் கொஞ்சம் சுற்றிவிட்டு, ஸ்கூல் பையன் உட்லண்ட்ஸ் தியேட்டரில் "நினைத்தாலே இனிக்கும்" படத்திற்கு டிக்கட் எடுத்து வைக்க சரியான நேரத்துக்கு இருவரும் ஆஜரானோம்.. தன் கல்லூரிக்கால நினைவுகளை ஒவ்வொன்றாக கூர்ந்தார் தலைவர்.

                          "நினைத்தாலே இனிக்கும்" கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என அலை திரண்டு இரண்டு மூன்று வரிசைகள் மட்டும் நிரம்பி வழிந்தது. படம் ஆரம்பித்ததும் என் போன்ற "கமல் பக்தர்கள்" உற்சாகக் குரலெடுத்து கூவுவதும் பாடலுக்கு எழுந்து ஆடுவதுமாய் அமர்க்களப்பட்டது.. இடையிடையே டிஜிட்டல் என்ற பெயரில் பல நல்ல காட்சிகளை கபளீகரம் செய்தும், மெல்லிசையை மெர்சலாக்கியும் மொத்தப் படத்தையும் "நினைத்தாலே வெறுக்கும்"படி செய்திருந்தார்கள். படம் முடிந்ததும் மின்னல் பள்ளிச் சிறுவன் போல் கதை பேசிக் கொண்டே மெதுவாய் நடக்க, ஸ்கூல் பையனோ மின்னல் வேகத்தில் பறந்துபோனார். அதற்கான காரணம் அப்போது விளங்கவில்லை. ஆனால் ஓரிரு நாட்களில் விளங்கியது. மறுநாள் சில பிரபலங்களை சந்திக்க வேண்டியிருந்ததால் அன்று பாலகணேஷ் சார் வீட்டிலேயே தங்கிவிட்டேன்.

-தொடரும்..


                         

Sunday, August 18, 2013

ME, LORD கணேஷ், & பாலகணேஷ்..


                                அவருடைய எழுத்துக்களை தொலைவில் இருந்து (ஒரு ஐநூறு  கிலோமீட்டர்) பார்த்து வித்தை கற்றுக் கொண்ட ஏகலைவன் போல், என் குருநாதரிடமிருந்து பல கலைகளை கற்றுக் கொண்டேன். குறிப்பாக எழுத்துகளை மக்கள் நேசிக்க ஒரு மெல்லிய நகைச்சுவை இருத்தல் நலம். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது போன்ற விஷயங்களை அவரிடம் படித்து தெரிந்து கொண்டேன். துரோணரின் சீடராய் பல அர்ஜுனர்கள் கலக்கிக் கொண்டிருக்க இந்த ஏகலைவனை கண்டு கொள்வாரோ என்ற ஏக்கமும் இருந்தது. ஆயினும் இந்த "எழுத்துலக துரோணாச்சாரியார்" என்னையும் விளித்து பாராட்டியது என் எழுத்துகளுக்கு கிடைத்த ஓர் அங்கீகாரமாய் உணர்ந்தேன்.


                                  இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்துல தான் சென்னை போகிற வாய்ப்பு அமைஞ்சுது எனக்கு. அதே சமயம் தோழி மஞ்சுபாஷிணி அவர்களின் வருகையும் அமைந்துவிட, மற்ற பதிவர்களையும் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு.. அந்த சந்திப்பின் போது அவருடைய விருந்தோம்பலில் மனம் நிறைந்தது. காலை வேளையில் அவர் குடிக்கும் ஒரு "உற்சாக பானம்"  (சாரி ஸார், கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லிட்டேன்) இப்போது நினைத்தாலும் என் நாவில் தித்திக்கிறது. (அடுத்த முறை வரும்போது கட்டாயம் ரெசிபி கொடுங்க!)

                                    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்வாங்க.. ஆனா என்னைப் பொறுத்தவரை அது அம்மாவுக்கு தான் பொருந்தும். அதுவும் சாருடைய அம்மாவின் அன்பையும், உபசரிப்பையும் பார்த்த பிறகு அது அவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். (கொடுத்து வச்சவர் சார் நீங்க..) வாத்தியாரின் தீவிர ரசிகனான எங்கள் "வாத்தியார்" அவரைப் போலவே அம்மா என்ற மூன்றெழுத்துக்கு அவ்வளவு மரியாதையும் அன்பும் செய்பவர். அந்தப் பயணத்தின் போது  எனக்கு அவர் அன்பாய் ஒரு அன்பளிப்பைக் கொடுத்தார். அது "சரிதாயணம்" எனும் காவியம்.


                                        எனக்கு சின்ன வயசிலிருந்தே ஒரு கெட்ட பழக்கம். யாராவது ஜோக் சொன்னாலோ, அல்லது நகைச்சுவையாய் கமெண்ட் அடித்தாலோ சுமார் மூன்று நிமிடத்திற்கு  குறையாமல் சிரிப்பேன். மற்றவர்கள் எல்லோரும் சிரிப்பதை நிறுத்திவிட்டு என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள். இந்தப் பழக்கத்தை மிகவும் கஷ்டப்பட்டு கல்லூரி காலத்தில் நிறுத்தி விட்டேன். அதன் பிறகு இப்போது தலைவரின் "சரிதாயணம்"  படித்த போது  அந்தப் பழக்கம் மீண்டும் ஒட்டிக் கொண்டது. எவ்வளவு முயன்றும் தவிர்க்க முடியவில்லை. அதுவும் பொதுவாக நான் புத்தகம் வாசிப்பது இரவு பத்தரை மணிக்கு மேல் என்பதால் அதனுடைய பின்விளைவுகள் அதிகம். வீட்டார் மட்டுமல்லாது அண்டை வீட்டாருக்கும் அவ்வப்போது டெர்ரர் கொடுப்பதுண்டு.  நேற்று எதிர் வீட்டு ஆண்ட்டி  என் அம்மாவிடம் "என்ன நேத்து உங்க வீட்டுல நைட்டு பன்னெண்டு மணிக்கு ஒரே சிரிப்பு சத்தமா கேட்டுதே.. " என்றார்.. என் அம்மாவோ "ஓ..அதுவா, அது எங்க வீட்டுல இருக்கிற ஒரு ஆவி பண்ணின கலாட்டா" என்றாரே பார்க்கலாம்!



                                 அது சரி, டைட்டில்ல ME, LORD கணேஷ், & பாலகணேஷ் ன்னு போட்டிருக்கு.. ஆவி, பாலகணேஷ் ஒகே.. எங்க ரெண்டு பேருக்கு நடுவுல LORD கணேஷ் எங்கிருந்து வந்தாருன்னு தானே பார்க்கறீங்க? நான், பாலகணேஷ் சார் மற்றும் LORD கணேஷ் மூணு பேருக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கு.. என்னன்னு கண்டுபிடிச்சீங்கன்னா ரகசியா கிட்ட சாரி ரகசியமா என்கிட்டே சொல்லுங்க.. ஹிஹி..

(சரிதாயணம் பற்றி மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.. சரிதாயணம் படிக்க என்னைப் போல் நீங்களும் ஆவலாக இருந்தால் இங்கே கிளிக்கவும்.)

Saturday, December 1, 2012

முஸ்தபா..முஸ்தபா..!! ( ஒரு நட்பின் கதை )


                        இது ஒரு நட்பின் கதை.. என் நட்பின் கதை.. கொஞ்சம் பொறுமையா படிங்க.. கதையும் புரியும்.. என் நட்பின் ஆழமும் தெரியும்..!

Tuesday, October 16, 2012

கனவுகள் மெய்ப்படுமா??



தாய் போல வேண்டுமென்றேன்- சிறு 
பிள்ளையாய் நீ வந்தாய்!
'பெண் நட்பு' பாராட்டும் -நல்ல 
தோழியாகவும் நீ இருந்தாய்!



சிகரங்கள் வேண்டாம் - சின்ன சின்ன 
ஆசைகள் போதுமென்றாய்!
முன்னும் வேண்டாம், பின்புறமும் வேண்டாம் 
உடன் வரவே விரும்பினாய்!



விடியல் வந்தால் எனக்கென்னவென்று - ஏழரை 
மணிவரை முகம் புதைத்துறங்குகிறாய்!
நீ அழகாய் இருக்கிறாய் என்று தினம் நான் 
பொய்யுரைக்க ஆசைப்பட்டாய்!!

கனவுகள் மெய்ப்பட வேண்டுமென்று- நான் 
எப்போதோ படித்திருந்தேன்..
கனவாய்ப் போன நீ மெய்யாய் 
வேண்டுமென விரும்புகிறேன்!!

Wednesday, February 9, 2011

அன்புள்ள நண்பர்களுக்கு,


                                           இன்றோடு இந்த 'கோவை ஆவி ' எனும் வலைப் பூவை ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் முடிந்து இரண்டாமாண்டில் காலடி(?!!) எடுத்து வைக்கிறோம். அது மட்டுமல்ல, இது நான் தமிழில் எழுதும் ஐம்பதாவது பதிவு. இந்த நாளில் நான் ஐம்பது பதிவுகள் எழுதுவதற்கு காரணமாக இருந்த சிலருக்கு நன்றி சொல்ல விழைகிறேன்.


                                          ஆறாவது அகவையிலிருந்து எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தி, எழுதும் பழக்கத்தை சொல்லிக் கொடுத்து, என் கிறுக்கல்களை எல்லாம் காவியங்களாய் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட என் தாய்க்கு முதல் நன்றி. தமிழ் எழுத்துக்களின் மேல் ஒரு மோகத்தை உண்டாக்கிய அப்பாவின் அழகிய கையெழுத்துக்கு ஒரு நன்றி. நான் எழுதும் பஎல்லாவற்றிற்கும் மேலாக எழுதும் திறனை எனக்களித்த இறைவனுக்கு ஒரு நன்றி.


நண்பேண்டா விருது !!


                                             என் எல்லா பதிவுகளையும் உடனுக்குடன் படித்து விமர்சனங்களைத் தரும் ஜானு செந்தில் மற்றும் செந்தில் பொன்னையா, சரவணா, ஜெயராஜ், புவனா கோவிந்த், எல்.கே, எஸ்.கே, அகிலா ராகவன், பனித்துளி சங்கர் மற்றும்  Philosophy பிரபாகரன்


                                     இவர்கள் மட்டுமல்லாமல் மனோஜ்,தமிழ்ப் பையன், எம் அப்துல் காதர், Richie, ம.பாண்டியராஜன், gomathy komu, ♠புதுவை சிவா♠, Jemini, vivek life, London Temples, Aadhiraa Mullai, kousalya, Ganesan P, peace train, kannan, பிரஷா, புஷ்பா, Sujeeth Chandramouli, soundar, கௌதமன், Muniyandi Perumal, Siva Sankari, hariharan manickam, reena joseph, Ravikumaar மற்றும் manoj theetharappan.


                                      இவர்கள் அனைவருக்கும் "கோவை ஆவி" வலைப்பூவின் சார்பாக என் நன்றிகளையும், மேலே உள்ள நண்பேண்டா விருதினையும் வழங்க ஆசைப்படுகிறேன். மேலும் உங்கள் ஆதரவினை என்றென்றைக்குமாய் வேண்டுகிறேன்!!

Wednesday, October 20, 2010

காதலர் தினம்....

                             
                              அன்று காதலர் தினம்.. கல்லூரியின் எல்லா திசையிலும் கையில் ரோஜாப் பூங்கொத்துகளுடன் மாணவர்கள் தங்களுக்கேற்ற ஜோடியை தேடிக் கொண்டிருந்தனர். மஞ்சள் பூக்கள் சொரிந்திடும் அந்த மரத்தின் கீழ் கார்த்திக் காத்திருந்தான். அதுதான் அவன் லாவண்யாவை முதன் முதலில் சந்தித்த இடம். வெகு நாட்களாய் தன் மனதில் பூட்டி வைத்திருந்த அந்த மூன்று வார்த்தைகளை இன்று அவளிடம் சொல்லி விடுவதென முடிவு செய்திருந்தான்.
                             
                             கல்லூரியின் நுழைவாயிலில் அவள் முகம் கண்டதும் அவனுள் ஒரு மின்சாரம் பரவியது. கைகளில் சிறு நடுக்கம். அவள் அருகே வந்த போது படபடப்பு இன்னும் அதிகமாகியது. இருதயத் துடிப்பு இரு மடங்காய் அடிக்க ஆரம்பித்தது. அவள் அவனைப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்துவிட்டு நகர்ந்தாள். சற்றே தயக்கத்துடன் "லாவண்யா" என்றழைத்தான். அவள் நின்று அவனை நோக்கி திரும்பினாள். "என்ன" என்பதுபோல் கண்களால் கேள்விக்கணை ஒன்றைத் தொடுத்தாள். 


                            "ம்ம்.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" .. என்று ஆரம்பித்தவனுக்கு உயிரெழுத்துகளும், மெய்யெழுத்துகளும் மறந்து போனது போன்ற ஒரு உணர்வு! அவள் இப்போது அவன் கண்களை உற்று நோக்கினாள். அவள் மௌனமே பல கேள்விகளை கேட்க அவன் சற்றே தடுமாறிப் போனான். அவள் ஏற்பாளா மறுப்பாளா என்ற பதற்றத்துடன் அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்..


                            "லாவண்யா, அது வந்து.." வழக்கம்போல் ஏதோ ஒன்று அவனை சொல்ல விடாமல் தடுத்தது. அதை புரிந்து கொண்டவளாய் " இத பாரு கார்த்திக்.. நீ என்னைக்குமே எனக்கு ஒரு நல்ல நண்பன். இப்போ நீ என்ன சொல்ல நினைக்கறேங்கறதும் எனக்கு நல்லா புரியுது. ஆனா நட்புக்குள்ள அந்த மூன்று வார்த்தைகள் எப்போதும் சொல்லக் கூடாது." கார்த்திக்  மனதிலிருந்த பெரிய பாரம் இறங்கியது போல் உணர்ந்தான். கல்லூரி முதல் நாளன்று மரத்தடியில் வெள்ளை சுடிதாரில் நின்றிருந்த லாவண்யாவின் மேல் தான் பைக்கில் சென்ற போது சேற்றை அடித்ததற்காக அவன் ஈகோவால் சொல்ல முடியாமல் தவித்த அந்த மூன்று வார்த்தைகள் "I am Sorry "


.

Friday, March 19, 2010

புவனேஷ் ( Bhuvanesh)

நீ பிறந்த ஊரோ Egmore - நீ பிறந்த பின்
ரிப்பன்  பில்டிங்கின் பெருமை இனி No More!

புவனத்தை நேசிக்கும் நாயகனே!
ஈஷானா, அவ்யக்தின் தந்தை ஆனவனே!

எல்லாருக்கும் வருடத்தில் ஒருமுறைதான் தீபாவளி!
உன் வாழ்வில் எப்போதும் உடனிருக்கும் தீபா ஒளி!

இரு மக்கள் பெற்றிட்டாய் சந்தோசம் - அவர்க்காக
கண் விழித்திட்டாய் அது உன் பாசம்

பணி பார்க்கும் உன் துறையோ Health Insurance
நம்பினோர்க்கு நீ தருவாய் என்றும் Assurance

ஹிந்தியிலே உனக்கிருக்கு ஒரு ஆஷா (आशा ) - உன்
கனவினிலே தினம் வருவாள் பிபாஷா!

"அம்மா" வின் பேரிருக்கும் உன் காரின் நேம் ப்ளேட்டில்
Blog மூலம் ஏற்றிடுவோம் உன் பேரை  இணையத்தின் ஏட்டில்!!

Sunday, March 7, 2010

திருச்சி செந்தில் (Trichy Senthil) - A Nice Friend Everyone should have!!

திருச்சியின் தலைமகன் நீ!
தென்னாட்டின் கோமகன் நீ!

பொன்னையா பெற்றெடுத்த பொக்கிஷம் நீ!
புள்ளி வலையில் (.net) பெரும் அறிஞன் நீ!

இயற்கை எழிலின் பெரும் ரசிகன் நீ ! - ஆனால்
துயில் எழுவதோ தினம் பத்தரை மணி!

உண்மையிலே நீ ரொம்ப டீசன்ட்... நீ
வைத்திருக்கும் வண்டியோ ஹுண்டாய் ஏக்சென்ட்

காருக்குள் ஏறிவிட்டால் நீ ஒரு ஷு-மேக்கர்
உள்ளிருக்கும் எங்களுக்கோ டெர்ரர் மேக்கர்..

கோழி வடை சாப்பிட்ட கோபாலன் நீ! - அதற்காக
கோபப்பட்டு மலை ஏறா கோவிந்தன் நீ!

நீ விரும்பும் நேரத்தில் எங்களுக்கு வரும் உன் கால்..
நாங்கள்  கூப்பிட்டால் நீ எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால்...

இளகிய மனம் கொண்ட நண்பன் நீ - இருந்தபோதும்
விளங்க முடியா கவிதை நீ!

நட்புக்கு தலை வணங்கும் நல்லவன் நீ! - இந்த blog மூலம்
திக்கெட்டும் பரவட்டும் உன் புகழ் இனி!

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...