Showing posts with label கேலி. Show all posts
Showing posts with label கேலி. Show all posts

Friday, December 13, 2013

சீனு!


மு.கு: பின்வருவன யாரையும் குறிப்பிடுவன அல்ல.. முழுக்க முழுக்க கற்பனையே.. அதை TR ஸ்டைலில் படிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.




கிரிக்கெட்டில் அசத்திடுவான் ஸ்டெயினு- 
பதிவுலகை கலக்கிடுவான் நம்ம சீனு..

தண்ணிக்குள்ள மிதந்தா அது மீனு - கன்னி
மனசுக்குள்ள இருந்தா அவன் சீனு..

சிரிக்க சிரிக்க பேசிடுவான் பீனு (Bean)
சிரிச்சுகிட்டே அசத்திடுவான் சீனு..

படையோட வந்திடுவான் டான்-உ (DON)- கோவைக்கு
மழையோட வந்திடுவான் எங்க சீனு..

சேலம் வழி கோவை வரும் டிரெயினு- 
தென்காசி வழி வந்திடுவான் நம்ம கானு.. (Khan)

மலையவே தூக்கிடுவான் சூப்பர் மேனு- 'காணி' 
இக்கட லேது அந்த்த சீனு..

ஆண்டிராயிடு போனு வச்சிருக்கேன் நானு - அந்த 
ஆண்ட்ரியாவையே வச்சிருக்கான் (ஹார்ட்டுல) இந்த சீனு..

கண்ணாடி போட்டிருக்கும் மானு - அவனிடம் 
கதை கேட்க இறங்கிடுமே சீலிங் பேனு.. (Fan)

தமிழோட பெருமைய நீ  பேணு- அதுக்கு தன்
எழுத்தால துணை நிப்பான் சீனு!





Sunday, November 24, 2013

இரண்டாம் உலகம் எப்படி இருந்திருக்கலாம்?

                        தமிழ் சினிமாவின் இத்தனை வருட பாரம்பரியத்தின் பெயர் கெடுக்க வேண்டியே வெளிவந்திருக்கும் படம் இந்த இரண்டாம் உலகம். இதுக்கு மேல கழுவி ஊத்த முடியாத அளவுக்கு எல்லாராலும் கழுவி ஊற்றப்பட்ட பின்னாலும் பளபளன்னு இருக்கே ஏன். (ரொம்ப கழுவிட்டாங்களோ? ). செல்வராகவன் தமிழ் மக்களுக்கு படம் கொடுப்பதற்கு முன் யோசிக்க மறந்த சில விஷயங்கள்.



                     தப்பு 1. மிஸ்ஸிங் சந்தானம் - இரண்டில் ஏதாவது ஒரு உலகத்திலாவது ஆர்யாவின் முன் இரண்டு டம்ளர்களை வைத்து "டே, காதல்ன்றது அவ்ளோ சாதாரண மேட்டர் இல்லே. சரக்கை ராவா அடிக்கிறத விட குமட்டிட்டு வர்ற விஷயம்" ன்னு சந்தானம் சொல்ற மாதிரி ஒரு டயலாக் வைக்கலேன்னா அப்புறம் இவரெல்லாம் என்னப்பா டைரடக்கரு?

                      தப்பு 2. செல்வராகவன் படம்ன்னாலே நாயகனுக்கும் நாயகிக்கும் விரசமான ஒரு பாடல் காட்சி வைக்கணும். குறைஞ்ச பட்சம் "A" சர்டிபிக்கேட் வாங்குற அளவுக்கு காட்சிகளாவது வேண்டாமா? (தொலைதூர தேசத்தில் அதுவும் பெண்களை போகப் பொருளாய் பார்ப்பதாய் சொல்லும் ஊரில் கூட இதை காட்டவில்லையே..) சரி கடைசிக்கு ஒரு ஐட்டம் நம்பராவது இறக்கியிருக்கலாம். அதுவும் இல்லே.

                     தப்பு 3.  நம்ம ஹீரோ கொஞ்சம் கழண்ட கேஸ் போல சைக்கோத்தனத்துடன் உலவ வேண்டாமா? பேன்டஸி படம்கிறதுக்காக உங்களுடைய டிரேட் மார்க்கை விட்டுக் கொடுத்தா எப்படி செல்வா சார்?

                    தப்பு 4.   குத்துப்பாட்டு/டாஸ்மாக் சாங் இப்படி எதுவுமே இல்லையே.. அப்படி இருக்கிற ஒரு சாங்கும் பீலிங்க்ஸோட பாடி கெடுத்துட்டாரே தனுஷு.

                    தப்பு 5.  படத்துல வில்லன் எங்கேன்னு தேட வேண்டியிருக்குது. மூச்சு விடாம மூணு நிமிஷத்துக்கு பேசிட்டே போய் வில்லனுக்கு முன்னாடி இருக்கிற பெஞ்ச தட்டி தூசி கிளம்பி வில்லன் தும்ம தயாரா இருக்கும் போது ஹீரோ ஒரு பஞ்ச் டயலாக் சொல்ல வேணாமா?  இதைக் கூட செய்யாம "பஞ்ச்"மகா பாவத்தை செய்துட்டாரே இயக்குனர்.

                     இதெல்லாம் விடுங்கப்பா, கடைசிக்கு அருவாளால டயர வெட்டுறது, வெள்ளைச்சட்டை போட்டுகிட்டு பத்துபேரை வெட்டி சிவப்பு  சட்டையா மாத்திறது, ஸ்கார்ப்பியோவ தலைக்கு மேல பறக்க விடறது, கிளைமாக்ஸ் காட்சிய ரயில்வே ஸ்டேஷன்லேயோ, ஹாஸ்பிடல்லயோ வைக்காததுன்னு ஒரு நல்ல தமிழ் சினிமாவின் இலக்கணம் எதுவுமே இல்லாம சும்மா காதல்ன்ற ஒரு விஷயத்த மட்டும் சொன்னா நாங்க ஏத்துக்குவமா? போங்கப்பு.. போய் நல்ல கதையா ரெடி பண்ணிட்டு வாங்க.. முடிஞ்சா நாலு ஒலக சினிமாவ உல்டா பண்ணுங்க.. இல்லே பிளாக் காமெடின்னு சொல்லி எல்லாரையும் பைத்தியக்காரனாக்குங்க. இது எதுவுமே இல்லாம படம் பார்க்க சொன்னா நாங்க எப்புடி பார்க்குறதாம். இப்பல்லாம் முப்பது ரூபாயக்கு வித்துட்டு இருந்த டிவிடி நாப்பது ரூபாயக்கு விக்கிறாங்க.






How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...