Sunday, November 24, 2013

இரண்டாம் உலகம் எப்படி இருந்திருக்கலாம்?

                        தமிழ் சினிமாவின் இத்தனை வருட பாரம்பரியத்தின் பெயர் கெடுக்க வேண்டியே வெளிவந்திருக்கும் படம் இந்த இரண்டாம் உலகம். இதுக்கு மேல கழுவி ஊத்த முடியாத அளவுக்கு எல்லாராலும் கழுவி ஊற்றப்பட்ட பின்னாலும் பளபளன்னு இருக்கே ஏன். (ரொம்ப கழுவிட்டாங்களோ? ). செல்வராகவன் தமிழ் மக்களுக்கு படம் கொடுப்பதற்கு முன் யோசிக்க மறந்த சில விஷயங்கள்.



                     தப்பு 1. மிஸ்ஸிங் சந்தானம் - இரண்டில் ஏதாவது ஒரு உலகத்திலாவது ஆர்யாவின் முன் இரண்டு டம்ளர்களை வைத்து "டே, காதல்ன்றது அவ்ளோ சாதாரண மேட்டர் இல்லே. சரக்கை ராவா அடிக்கிறத விட குமட்டிட்டு வர்ற விஷயம்" ன்னு சந்தானம் சொல்ற மாதிரி ஒரு டயலாக் வைக்கலேன்னா அப்புறம் இவரெல்லாம் என்னப்பா டைரடக்கரு?

                      தப்பு 2. செல்வராகவன் படம்ன்னாலே நாயகனுக்கும் நாயகிக்கும் விரசமான ஒரு பாடல் காட்சி வைக்கணும். குறைஞ்ச பட்சம் "A" சர்டிபிக்கேட் வாங்குற அளவுக்கு காட்சிகளாவது வேண்டாமா? (தொலைதூர தேசத்தில் அதுவும் பெண்களை போகப் பொருளாய் பார்ப்பதாய் சொல்லும் ஊரில் கூட இதை காட்டவில்லையே..) சரி கடைசிக்கு ஒரு ஐட்டம் நம்பராவது இறக்கியிருக்கலாம். அதுவும் இல்லே.

                     தப்பு 3.  நம்ம ஹீரோ கொஞ்சம் கழண்ட கேஸ் போல சைக்கோத்தனத்துடன் உலவ வேண்டாமா? பேன்டஸி படம்கிறதுக்காக உங்களுடைய டிரேட் மார்க்கை விட்டுக் கொடுத்தா எப்படி செல்வா சார்?

                    தப்பு 4.   குத்துப்பாட்டு/டாஸ்மாக் சாங் இப்படி எதுவுமே இல்லையே.. அப்படி இருக்கிற ஒரு சாங்கும் பீலிங்க்ஸோட பாடி கெடுத்துட்டாரே தனுஷு.

                    தப்பு 5.  படத்துல வில்லன் எங்கேன்னு தேட வேண்டியிருக்குது. மூச்சு விடாம மூணு நிமிஷத்துக்கு பேசிட்டே போய் வில்லனுக்கு முன்னாடி இருக்கிற பெஞ்ச தட்டி தூசி கிளம்பி வில்லன் தும்ம தயாரா இருக்கும் போது ஹீரோ ஒரு பஞ்ச் டயலாக் சொல்ல வேணாமா?  இதைக் கூட செய்யாம "பஞ்ச்"மகா பாவத்தை செய்துட்டாரே இயக்குனர்.

                     இதெல்லாம் விடுங்கப்பா, கடைசிக்கு அருவாளால டயர வெட்டுறது, வெள்ளைச்சட்டை போட்டுகிட்டு பத்துபேரை வெட்டி சிவப்பு  சட்டையா மாத்திறது, ஸ்கார்ப்பியோவ தலைக்கு மேல பறக்க விடறது, கிளைமாக்ஸ் காட்சிய ரயில்வே ஸ்டேஷன்லேயோ, ஹாஸ்பிடல்லயோ வைக்காததுன்னு ஒரு நல்ல தமிழ் சினிமாவின் இலக்கணம் எதுவுமே இல்லாம சும்மா காதல்ன்ற ஒரு விஷயத்த மட்டும் சொன்னா நாங்க ஏத்துக்குவமா? போங்கப்பு.. போய் நல்ல கதையா ரெடி பண்ணிட்டு வாங்க.. முடிஞ்சா நாலு ஒலக சினிமாவ உல்டா பண்ணுங்க.. இல்லே பிளாக் காமெடின்னு சொல்லி எல்லாரையும் பைத்தியக்காரனாக்குங்க. இது எதுவுமே இல்லாம படம் பார்க்க சொன்னா நாங்க எப்புடி பார்க்குறதாம். இப்பல்லாம் முப்பது ரூபாயக்கு வித்துட்டு இருந்த டிவிடி நாப்பது ரூபாயக்கு விக்கிறாங்க.






36 comments:

  1. வணக்கம்
    ஆவி(அண்ணா)

    நல்ல கற்பனை முதலில் வாழ்த்துக்கள்..... கதையாசிரியர் கதை எழுதும் போது நீங்கள் இல்லாதது.... ஒரு குறை என்று நான் கருதுகிறேன்....வருங்கால படங்களில் கட்டாயம் உங்களுக்என்று ஒரு இடம் எடுத்து தருகிறேன்.......ஓ........ஓ......அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்.. கற்பனை அல்ல.. இந்த படத்தைப் பற்றி தவறாக எழுதுவபவர்கள் மீதான என் கோபம்!

      Delete
  2. ஒரு சிலர் பாராட்டத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க.. இதுபோன்ற முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும்..

      Delete
  3. வணக்கம்
    ஆவி(அண்ணா)
    அப்படியா சம்பவம்... அந்தப்படம் எடுப்பதற்கு எத்தனை வருடங்கள் எத்தனை நாட்கள் மழை என்றும் வெயில் என்றும் சிரமப்பட்டு.... பெரிய பணச் செலவில் வெளியாகிய படம் நாம எல்லோரும் 30ரூபாய் டிக்கட் வேண்டி 2மணித்தியாலயம் அல்லது 3மணித்தியாலயம் பார்த்த பின் சரி இல்லை என்று சொல்லுகிறோம்... இது நாயமா? பாரட்ட வேண்டிய விடயம்....

    ஒரு பொருள் இருக்கும் போது அதன் அருமை புரிவதில்லை இல்லாமல் போகும் போதுதான் அதன் அருமை பெருமை புரியவரும்..... சரிதானே..ஆவி(அண்ணா)

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சரிதான் ரூபன்.. குற்றம் சொல்லி தலையில் குட்டலாம் தவறில்லை.. ஆனால் மோசம் என்று முழுவதுமாக ஒதுக்குவதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. புரிதலுக்கு நன்றி..

      Delete
  4. சாமியோவ்....அதான் தியேட்டர் பக்கம் போயிட்டு தலைதெறிக்க ஓடியாந்துட்டேன் சாமியோவ்...ஒன்னும் பிரியல.

    ReplyDelete
    Replies
    1. அண்ணே, நீங்களே இப்படி சொன்னா எப்படி அண்ணே? ;-)

      Delete
  5. என்னமோ போடா,மாதவா!படம் எடுக்குறாங்களாம்,காசு குடுத்து டைம் வேற வேஸ்ட் பண்ணிப் பாக்குறாங்களாம்!அப்புறம்..............சரி விடுங்க,நாங்க பாக்காத ரணகளமா?ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  6. நல்லவேளை ஆவி... எங்க உங்க கோவத்துல அனுஷ்கா இல்லாம வேற ஹீரோயின் சொல்லிடுவீங்களோன்னு பார்த்தேன்! பார்த்துடறேன்... நான் படம் பார்த்துடறேன்... சீக்கிரமே டவுன்லோட் பண்ணியோ, டிவிடி யாராவது வாங்கியிருந்தா ஓ ஸி வாங்கியோ பார்த்துடறேன்... ஓகே?

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. ஸ்ரீராம் சார்.. பார்த்துட்டு தியேட்டர்ல பார்த்திருக்கலாம்ன்னு கண்டிப்பா பீல் பண்ணுவீங்க.. எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க அப்புறம்!

      Delete
  7. நான் படம் பார்த்த திரையரங்கில் கடைசிவரை எல்லோரும் எதையோ எதிர்பார்த்து இருந்தனர்...அவர்கள் எதை எதிர்பார்த்து படம் பார்க்க வந்தார்கள்....? என்று தெரியவில்லை...உங்கள் பதிவை படித்தப்பிறகுதான் தெரிகிறது....வாழ்க தமிழ் சினிமா

    ReplyDelete
    Replies
    1. ஆமா பாஸ்! அதுதான் பிரச்சனையே!

      Delete
  8. selva வின் ரசிகனாக படிக்க சூப்பரா இருக்கு..... ஒரு புது முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை....செல்வா எப்போதும் செய்வதே...

    ஆனால், தோய்வா இருக்கு படம்ல....

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான முயற்சி.. இது வெற்றி பெற்றால் கண்டிப்பாக இது போல் பல முயற்சிகள் வரத் தொடங்கும்!

      Delete
  9. Replies
    1. அதானேக்கு பக்கத்துல புள்ளி வைக்க மறந்துட்டீங்க! ஹஹஹா .. :)

      Delete
  10. படித்த விமர்கனங்களிலேயே தங்களுடைய விமர்சனம் மட்டும்தான்
    படத்தினைப் பாராட்டுவதாக உள்ளது. நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.. நல்லா இருக்கு படம்.. வழக்கமான பாணியில் இல்லாமல் போனது கொஞ்சம் மாறுபட்ட கருத்துகளைப் பெற்றுத் தந்து விட்டது.

      Delete
  11. ரசிகனின் ரசனையை உயர்த்தும்
    முயற்சி என்பது தற்கொலைக்கு சமம்

    ReplyDelete
    Replies
    1. ரசிகனின் ரசனையை யாரும் உயர்த்த வேண்டாம். அவன் எண்ணங்கள் உயர்ந்து தான் இருக்கின்றது.. ஆனால் அவனால் தமிழ் சினிமாவில் இவற்றை ஜீரணிக்க முடியவில்லை என்பது மட்டுமே உண்மை.

      Delete
  12. "எதுவுமே" இல்லாம படம் பார்க்க சொன்னா நாங்க எப்புடி பார்க்குறதாம்....? அதானே...?!!!

    ReplyDelete
  13. செல்வா இனி படம் எடுப்பாரா.ஏற்கனவே தன படங்கள் கொண்டாடப்படவில்லை என்று புலம்பி ,இனி படம் எடுக்கணுமா என்று யோசனையை இருப்பதை விகடனில் சொல்லி இருந்தார்.இந்த உலக படம் வேறு மக்களால் நிராகரிக்க பட்டுள்ள நிலையில் அவர் இனி படம் எடுப்பது கேள்விக்குறி.
    என் பதிவை நேரம் இருந்தால் வரவும் உங்களுக்கு பிடித்த விஷயம் தான் இப்போது என் புதிய பதிவு
    அஜித்,வீரம்,இரண்டாம் உலகம் ,மக்கள் ரசனை --ஜுகல்பந்தி

    http://scenecreator.blogspot.in/2013/11/blog-post_23.html

    ReplyDelete
    Replies
    1. ஐ..தல நியுசா.. இதோ வந்துட்டேன்..

      Delete
  14. உங்கள் கோபமும் ஓரளவு நியாயம்தான் .

    ReplyDelete
  15. ஆவிச் சகோதரா நாங்க இந்தப் படம் வந்தால் போதும் இப்போது
    சொன்னதையே நினைவில் வைத்துக் கொள்வோம் .பகிர்வுக்கு
    மிக்க நன்றி :))

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ.. ரொம்ப நாள் ஆச்சு வலைப்பக்கம் வந்து!!

      Delete
  16. பேன்டஸி படங்கள் எடுக்கிற புதிய முயற்சி செய்திருக்கிறார் என்கிற ஒரே விஷயத்துக்காக மட்டும் செல்வராகவனைத் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா ஆவி? அதை செம்மையாகச் செய்திருக்க வேண்டாமா என்பதுதான் பலரது கோபமும்.... இல்லை.... வருத்தமும்! & இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. பார்த்துட்டீங்களா ஸார்.. இல்லைன்னு நினைக்கிறேன்.. பார்த்திருந்தா இப்படி சொல்லியிருக்க மாட்டீங்க.. படத்துல நான் குறையா பார்க்குறது "காதல்" ங்கிற ஒரு விஷயத்துக்கு கொடுக்கப்பட்ட அதீத முக்கியத்துவம்.. ஆனா அதுவும் இல்லேன்னா படம் ரெண்டாவது நாளே பெட்டிக்குள் போயிருக்கும்..

      Delete
  17. ஆவி,
    நீங்க சொன்ன விசியங்கள் போக செல்வா இன்னும் சில அக்மார்க் தமிழ் சினிமா சீன்ஸ் வேறு சேர்த்து இருந்தார்..அப்படியும் மக்களை படம் கவரவில்லை...
    1) ஹீரோ ரோட்ல அடிபட்டு சாக கிடக்கிறவங்களை ஆஸ்பத்ரியில் சேரத்துறதை பார்த்து ஹீரோயின்க்கு காதல் வரது..சுறா படத்துல விஜய் கண்ணு தெரியாதவங்களை ரோடு கிராஸ் பண்ணி விடுறதை பார்த்து தமன்னாவுக்கு காதல் வர அக்மார்க தமிழ் சினிமா காட்சி..
    2) வில்லன் (!!) ராஜாவை பார்த்து ஹீரோ, சாக போற நேரத்துல குப்பை ராஜான்னு பஞ்ச் டயலாக் பேசுறார்..இது வில்லனை பார்த்து வழக்கமான ஹீரோ பேசுற வசனம் தானே..
    3) கெட்ட ராஜா ஆளுங்க லைன் கட்டி வந்து ஹீரோ கிட்ட அடிவாங்குற அக்மார்க் தமிழ் சினிமா மரபு மீறாத காட்சிகள்.
    4) சொத்தை ஹீரோ, ஹீரோயின்க்குகாக Hercules மாதிரி மாறுறது, இதுவும் எல்லா தமிழ் படத்திலும் வர காட்சி தானே.. :-)

    ReplyDelete
    Replies
    1. ஒத்துக்கறேன்.. பணம் போட்ட ப்ரோட்யுசர் கேக்கறதையும் வைக்கணும் இல்லையா ராஜ்?

      Delete
  18. இந்த ஆளோட சோதனை முயற்சிகளுக்காக படம் பார்க்கிரவங்களை எல்லாம் சாவடிதால் எப்படி சார்...................

    ReplyDelete
    Replies
    1. வேணுகோபாலன் ஸார், செல்வராகவன் படங்கள்னா இப்படித்தான் இருக்கும்ன்னு ஒரு ட்ரெண்ட் இருக்கு.. அது பிடிக்காதவங்க ஏன் படம் பார்த்துட்டு கழுவி ஊத்தணும்? பார்க்காமலேயே இருந்துடலாமே?

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...