யு டிவி மற்றும் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் "எங்கேயும் எப்போதும்" புகழ் சரவணன் இயக்கியிருக்கும் படம். C.சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோவை சோனி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
1. "மலைய பொரட்டலெ" ராக் ஸ்டைலில் அமைந்திருந்திருக்கும் இந்த பாடல் திப்பு, ஹைடி மற்றும் பிஸ்மாக் ஆகியோரின் குரல்களில் ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நடிக்க வரும் விக்ரம் பிரபுவுக்கு நல்ல அறிமுகப் பாடல்.
2. "என்ன மறந்தேன்" என்று மதுஸ்ரீ காதல் வயப்பட்ட ஒரு பெண் தன் காதலன் நினைவில் அவன் நினைவையன்றி மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டதாய் காதல் ரசம் சொட்ட தன் தேன்மதுர குரலில் பாடியிருக்கும் பாடல் இனிமை. நா.முத்துகுமாரின் எழுத்துகள் மெல்லிசைக்கு உயிரோட்டம் கொடுக்கிறது.
3. "ரங்கா ரங்கா" என்ற இளமைத் துள்ளும் பாடலை ரீட்டா பாடியிருக்கிறார். கொஞ்சம் "வத்திக்குச்சி" படப் பாடலை நினைவூட்டினாலும் சில முறை கேட்ட பின்பு பிடித்துப் போகிறது.
4. விவேகா எழுதிய "தனிமையிலே " பாடல் தமிழ் சினிமா சமீப காலமாய் மறந்து விட்டிருந்த சோகப் பாடலை மீண்டும் ரசிகர்களுக்கு படைக்கிறது. பிரிந்து சென்ற காதலியின் நினைவில் நாயகன் பாடுவதாய் அமைந்த இந்த பாடலை ஆனந்த் அரவிந்தாக்ஷன் உச்சஸ்தாயியில் பாடும் போது நம் மனதிலும் சோகம் ஒட்டிக் கொள்கிறது.சத்யாவின் வயலின் இசை சோகத்தை இன்னும் கூட்டுகிறது.
5. "எங்கேயும் எப்போதும் " படத்தில் மாசமா ஆடி மாசமா பாடல் ஹிட் கொடுத்த தைரியத்தில் இதிலும் "லவ்வுல லவ்வுல " என்று தொடங்கும் பாடல் பாடியிருக்கிறார் சத்யா..
" எலும்பொடிஞ்சா மாவுக்கட்டு போட்டு திருத்த முடியும்.
இதயத்துக்கு மருந்து போட காதலுக்கு தெரியும்"
போன்ற தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கிளிஷே வார்த்தைகளுடன் ஒலிக்கிறது இந்த பாடல்.
6. "இதுதானா" என்று ஒரு நிமிட பாடலை "புதியதோர் கவிதை செய்வோம் டீம்" எழுதியிருக்கிறார்கள். மனிதம் மனிதனுக்கு தேவை என்பதை பல்ராம் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பாடுகிறார்.
அட... இன்னொரு ஆடியோ விமர்சனமா? எங்கேயும் எப்போதும படப் பாட்டுகள் காட்சிப்படுத்தியிருந்த விதம் நல்லா இருந்துச்சு. அதனால(யும்) மனசுல ஒட்டிக்கிச்சுங்கறது என் அபிப்பிராயம். இந்தப் படத்தோட பாடல்ளையும் கேட்காம, நேரடியா படத்துல பாத்தா இம்பாக்ட் கூட இருக்குமோன்னும் தோணுது. பாக்கலாம்..!
ReplyDeleteமே.. பி சார்.. தனியா கேட்கவும் நல்லா தான் இருக்கு.
Deleteநல்ல மாதிரின்னு சொல்லிட்டீங்க, டவுன்லோடு பண்ணி கேக்க வேண்டியதுதான்...
ReplyDeleteகேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க,..
Delete:) பாட்டு நல்லா இருக்குனா கேட்டுற வேண்டியது தானே...
ReplyDeleteவரவர ஆவியின் வலைபூ காக்டெயிலாக மாறிக் கொண்டுள்ளது :-)))))))
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநல்ல தகவல்.... தொடருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாட்டுலாம் நல்லா இருக்குன்னு சொல்லீட்டீங்க. சரி, கேட்டு பார்க்குறேன்
ReplyDeleteபாடல் விமர்சனப் பகிர்வுக்கு,நன்றி!
ReplyDeleteபாட்டு ரசிக்கும்படியா இருக்குன்னு சொல்லியிருக்கீங்க...
ReplyDeleteகேட்டுப் பார்க்கனும்...
வாழ்த்துக்கள்.