Friday, November 22, 2013

ஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம்


இன்ட்ரோ  
                          இயக்குனர் செல்வராகவனின் கனவுத் திரைப்படம் என பரவலாக பேசப்படும் இந்தப் படம் நிச்சயம் "Fantasy" திரைப்பட வரிசையில் ஒரு தனியிடம் பெறும் என்பதில் ஐயமில்லை. இன்னும் கொஞ்சம் தரமான CG மற்றும் பின்னணி இசை அமைந்திருந்தால் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருந்திருக்கும்.




கதை         
                             திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன - இது பழமொழி. நிச்சயிக்கப்பட்ட இருவர் நிச்சயம் இவ்வுலகத்தில் சேர இயலாமல் போனாலும் இரண்டாவதாய் இருக்கும் மற்றொரு உலகத்தில் சேர்ந்தே ஆவார்கள் என்பதை காதலுடனும், கத்திரிக்காயுடனும் (அனுஷ்கா ஒரு காட்சியில் சாப்பிடுவார்)  விளக்குகிறது கதை.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                               'நான் கடவுள்' திரைப்படத்திற்கு பிறகு ஆர்யா 'நடித்திருக்கும்' படம் இது. ஆங்காங்கே செல்வராகவனின் வழக்கமான சைக்கோ கதாநாயகன் எட்டிப் பார்த்தாலும் இரு வேறு உலக ஆர்யாக்களும் சுமார் ஆறு வித்தியாசங்களுடன் வருகின்றனர்.  அதிலும் தற்கால ஆர்யா அனுஷ்கா மனதில் மட்டுமல்லாது நம் மனதிலும் இடம் பிடிக்கிறார். வேற்றுலக ஆர்யா கொஞ்சம் முரடன், மூர்க்கன், முட்டாள் என பல்வேறு பரிமாணங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.  அனுஷ்கா அசத்தல் நடிப்பு. மருத்துவராக வரும் அனுஷ்கா "தாண்டவம்" படத்தில் வருவது போலவே முகபாவங்களுடன் வந்த போதும் நடிப்பில் ஒரு படி முன்னேறி இருக்கிறார். கோவாவில் இவர் ஆர்யாவை வெறுக்கும் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார். வேற்றுலக வர்ணாவாக பெண்ணடிமைத் தனத்தை எதிர்ப்பவராய் வரும் போது கண்களில் ஒரு கணம் ஜான்சி ராணியை நினைவு படுத்துகிறார்.



                                இவர்கள் இருவர் தவிர ஆர்யாவின் அப்பா, அனுஷ்காவின் தோழி, மேடம், ஆர்யாவின் நண்பர் (சுட்டகதை ஹீரோ), கடவுளாக வரும் பெண்  ஆகியோரும் சிறப்பாக செய்துள்ளனர். கெட்ட சக்திகளாக வரும் ஆட்கள் ஒவ்வொரு முறையும் அடிவாங்கி போவதால் அவர்களிடத்தில் ஒரு பயம் ஏற்படவே இல்லை. படத்திற்கு ஒரு முக்கிய கதாப்பாத்திரம் அது என்ற போதும் இயக்குனர் அதை கண்டுகொள்ளாமல் விட்டதேனோ?

                                                                                              CG        
                                    தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பார்த்ததை விட சிறப்பான தொழில்நுட்பத்துடன் வந்திருக்கிறது. ஆனாலும் ஹாலிவுட் தரத்தை ஒப்பிடும் போது நாம் இன்னும் பின்னில் தான் இருக்கிறோம். ஓரளவு தயாரிப்பாளரின் கையைக் கடிக்காத அளவிற்கு அதே சமயம் தான் கற்பனை செய்த அந்த இரண்டாம் உலகத்தை வடிவமைத்ததற்காக செல்வராகவனுக்கும், CG தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுகள். மூன்றாண்டுகளுக்கு முன்னர் வந்த அவதார் திரைப்படத்தில் வரும் மிருகத்தை பார்க்கும்போது நமக்கு மனதிற்குள் பயம் வரும். ஆனால் ஒரு நாடே அடக்க பயப்படும் இராட்சத சிங்கம் எவ்வளவு டெர்ரர்ராக இருக்க வேண்டும். ஆனால் "நான் கடவுள்" ராஜேந்திரனுக்கு மோஷன் கேப்சர் செய்தது போல் இருந்தது. இரண்டு உலகங்களையும் ஒன்று சேர்த்த இடத்தில் CG கைதட்டல் பெறுகிறது.

இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 செல்வராகவனின் மிக மெச்சூர்டான ஒரு படைப்பாய் இதைப் பார்க்கிறேன். ஓரிரு வசனங்கள், காட்சியமைப்புகள் குறைபாடுகளைத் தவிர ஒரு நல்ல தெளிவான திரைக்கதை. ஆனால் இதுபோன்ற கமர்ஷியல் விஷயங்கள் குறைவாயுள்ள  படங்கள் வெற்றி பெறுவது ரசிகனின் அன்றைய மனநிலையை பொறுத்தே அமையும். இசை- பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ், பின்னணிக்கும் இரண்டு பாடல்களுக்கும் அனிருத்.  ஒரு பீரியட் படத்திற்கு அனிருத்தின் இசை கொஞ்சம் அமெச்சூர் தனமாக இருந்தது. ஏ.ஆர். ரகுமான் அல்லது இளையராஜாவின் கைவண்ணத்தில் இன்னும் சிறப்பாய் வந்திருக்கும் என்பது ஆவியின் எண்ணம். பாடல்கள் இளமை, இனிமை, குளுமை. தாராளமாய் செலவு செய்திருக்கும் தயாரிப்பாளருக்கு ஒரு ஷொட்டு!

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 'கனிமொழியே' பாடல் காண்பவர் மனதை கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. வர்ணாவுக்கும், மதுபாலகிருஷ்ணனுக்கும் இடையே அமைந்த காட்சிகள் அருமை. சில செல்வராகவன் "டச்" வசனங்கள். இரண்டாம் உலகம் கொஞ்சம் பொறுமையாய் இம்மை மறுமையில் நம்பிக்கையோடு நிதானமாக பார்க்க வேண்டிய படம். ஜாலியான பொழுதுபோக்கு சித்திரம் எதிர்பார்த்து செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

Aavee's Comments -Selva's dreamworld not for common man!

30 comments:

  1. இவர் இனி மூடிக் கொண்டிருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
    இயக்குனர்கள் தங்கள் பவுசை2 அல்லது 3 படங்களிலேயே தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    http://asokarajanandaraj.blogspot.in/2013/11/blog-post_22.html

    உங்களுக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. எனது கணினி Mother Board கோளாறு...

      Just visit : http://babyanandan.blogspot.in/2013/11/blog-post.html

      Comments From Android phone...

      see U

      Delete
    2. ஜாலியான படம் இது இல்லை. செல்வராகவன் என்ற இயக்குனரைப் பற்றி அவருக்கு சரியாக தெரியவில்லை போலிருக்கு. அதான் அவருக்கு ஏமாற்றம். மற்றபடி படம் அவ்வளவு மோசமில்லை.

      Delete
  2. நல்ல விமர்சனம் ஆவி..படம் ஓடுவது கஷ்டம் தானா?

    ReplyDelete
    Replies
    1. ஆமா பாஸு கொஞ்சம் கஷ்டம் தான்.. ஆனா எல்லாரும் எழுதியிருக்கிற அளவுக்கு மோசமில்லை. படத்தின் கண்டிப்பா ஒரு கற்பனை கதையை பார்த்து/ வாழ்ந்த பீலிங் கிடைக்கும்..

      Delete
  3. ஒரு முறை பார்க்க முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. தாராளமா பார்க்கலாம் ரூபக். நல்ல தியேட்டரில் பாருங்க.. விஷுவல்ஸ் அவ்வளவு அருமையா இருக்கு. கதை, திரைக்கதை இசையை தவிர பல விஷயங்கள் இருக்கு இதிலே ரசிக்க.. கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும் ரூபக். நம்பி போலாம்!

      Delete
  4. விமர்சனத்திற்கு நன்றி நண்பா படம் பார்த்து விடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. பார்த்துட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க நண்பா!

      Delete
  5. வேகமான விமர்சனம் ஆவி. அனுஷ்காவுக்காகவே படத்தை அவசியம் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா ஸ்ரீராம் சார் கட்டாயம் பாருங்க. நீங்க அனுஷ்கா ரசிகரா இருந்தா கண்டிப்பா படம் பிடிக்கும்..

      Delete
  6. வணக்கம்
    அண்ணா

    விமர்சனம் படித்த போது படம் பார்த்தது போல உணர்வு பதிவு நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அப்படினா பாத்துருவோம் படத்த

    ReplyDelete
    Replies
    1. பாருங்க காயத்ரி.. Rapunzel கதை பிடிச்ச உங்களுக்கு இந்த படமும் பிடிக்கும்.. :)

      Delete
  8. செல்வராகவன் ‘டச்’! யூ மீன்... சைக்கோத்தனம்? இருக்கும், இருக்கும்...! அப்புறம்... விஷுவல்ஸ் நல்லா இருக்குன்றதாலயும், அனுஷ்(அ)க்கா இருக்கறதாலயும் பாக்கலாம்னு தோண வெக்குது. படம் பாத்தப்புறம் எந்த உலகத்துல இருக்கோம்னு குழப்பம் வரலையா ஆவி?

    ReplyDelete
    Replies
    1. இல்ல ஸார். எனக்கு அந்த டவுட் வரல. சில சமயம் ரியாலிட்டி தாண்டி நாம இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு ஒரு உலகத்தை கற்பனை/ கனவு செய்து பார்ப்போம் இல்லையா.. அதுதான் இந்த இரண்டாம் உலகம். கண்டிப்பா பார்க்கலாம் சார்.. உங்களுக்கும் பிடிக்கும்.. :)

      Delete
  9. நாடே அடக்க பயப்படும் இராட்சத சிங்கம் எவ்வளவு டெர்ரர்ராக இருக்க வேண்டும். ஆனால் "நான் கடவுள்" ராஜேந்திரனுக்கு மோஷன் கேப்சர் செய்தது போல் இருந்தது. இரண்டு உலகங்களையும் ஒன்று சேர்த்த இடத்தில் CG கைதட்டல் பெறுகிறது.

    ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாஸ்.. எங்கே இந்த ஆவியின் நையாண்டிய யாரும் கவனிக்காம போயிடுவாங்களோன்னு பயந்துட்டே இருந்தேன். நல்ல வேளை நீங்க சிரிச்சு வச்சீங்க.. :)

      Delete
  10. சாதாரண மனிதனுக்குப் புரியாது என்றால் படம் ஓடாதே...

    ReplyDelete
    Replies
    1. அந்த பய தான் எனக்கும்!

      Delete
  11. விமர்சனத்துக்கு நன்றி!

    ReplyDelete
  12. எனக்கு படம் பிடித்திருந்தது.. Interval scene பிரமாதம்..!! bgm தான் சரியில்ல..

    ReplyDelete
  13. பார்க்க ஆசைதான் நேரம் தான் பாஸ்...ம் பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. மனமிருந்தால் மார்க்கபந்து பாஸ்!!

      Delete
  14. மிகவும் அருமையான விமர்சனம்...
    செல்வராகவனின் மிக மெச்சூர்டான ஒரு படைப்பாய் இதைப் பார்க்கிறேன். ஓரிரு வசனங்கள், காட்சியமைப்புகள் குறைபாடுகளைத் தவிர ஒரு நல்ல தெளிவான திரைக்கதை.
    இரண்டாம் உலகம் கொஞ்சம் பொறுமையாய் இம்மை மறுமையில் நம்பிக்கையோடு நிதானமாக பார்க்க வேண்டிய படம்.

    உலக தரத்தில் சினிமாவை முயற்சித்த இயக்குனரை
    எவ்வளவு பாராட்டினாலும் தகும்

    ReplyDelete
    Replies
    1. உலகத் தர சினிமாவான்னு கேட்டா நிச்சயம் இல்லேன்னு சொல்லுவேங்க.. நல்ல படம்/முயற்சி அவ்வளவுதான்.. உலக சினிமா Category அந்தஸ்து கொஞ்சம் டூ மச் ஆ படுது எனக்கு.. சாரி.

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...