இதில் வரும் சம்பவங்கள் கற்பனையே யார் மனசையும் புண்படுத்துவதற்காக அல்ல
உ.சி.ர : தீவெட்டி பசங்க சொன்ன எடத்துக்கு சொன்ன நேரத்தில வர மாட்டானுக.
கோ.நே: அண்ணே நேரமாகிடுச்சா என்னமோ தீ..தீ சொல்லீட்டு இருந்தீங்க
உ.சி.ர : ஒன்னும் இல்ல எல்லாம் கொண்டு வந்திருக்கீங்கல்ல
கோ.நே: எல்லான்னா..
உ .சி.ர : என்ன எழவுடா...பொஸ்தகத்தல்லாம் எடுத்துட்டு வர சொன்னனே
கோ.நே: வீடு வீடா கேட்டேன், போன் போட்டு கேட்டேன் எவனும் இல்லனிட்டான். அது மட்டுமில்ல யாரவன்னு கேட்டாங்க?
உ.சி.ர :உன்னையவா ?
கோ.நே: இல்ல பொஸ்தகம் எழுதினவன
உ.சி.ர: கெடக்கரானுக விடு, கே.கே எங்க ?
கோ.நே: ஆடிட்டு இருக்கற ஆணிய புடுங்கனுமாம் வரல..
உ.சி.ர: கவிதாயினி ?
கோ.நே: அவங்க ரெண்டு கைலேயும் மருதாணி போட்டிருக்காம் வரல..
உ.சி.ர: இன்னொரு கவிதாயினி ?
கோ.நே: அவங்க பேஸ்புக் கவிதை எழுதறதுல பிஸி, அது மட்டுமில்ல
ஒவ்வொருத்தனும் பல கேள்வி கேட்டிட்டு இருக்கானாம், அதுக்கு பதில் எழுதிட்டிருக்காங்க இப்ப அவங்கனால வரமுடியாது...
உ.சி.ர : புரட்சி பெண்மணி ?
கோ.நே: அவங்க இன்னொரு மீட்டிங்கிலே ப்ளாக் அகிட்டாங்க
உ.சி.ர : ஆ.ஆ சொக்கா..உனக்கு வந்த சோதனை..
கோ.நே: அது யாருண்ணே...
உ.சி.ர : சொன்னா புரியாது விடு...ஸ்டேட்டஸ் போட்டியா ?
கோ.நே: அப்பவே போட்டுட்டண்ணே பேச பேச...
உ.சி.ர : லைக்கு ?
கோ.நே: நூத்தி நுப்பத்து நாலு...
உ.சி.ர : (மனதிற்குள் புலம்புகிறார்..) வெறும் லைக்க வைச்சுகிட்டு என்ன பன்ன..பொஸ்தகம் கிடைக்கலயே...கையறுந்த நிலை நான் என் செய்வேன், சொக்கா...பொன்னா கேட்டேன் பொஸ்தகம் தானே கேட்டேன்...இவன் எங்க போய்ட்டான்
கோ.நே: அண்ணே கிடச்சிடுச்சி
உ.சி.ர : அஹா..எப்படி, எப்படி எங்கே?
கோ.நே: சிங்கம் டிக்கில இருந்தது, ரொம்ப நாளக்கி முன்னாடி புத்தக
கண்காட்சியில வாங்குனது..மறந்தே போய்ட்டேன்.
உ.சி.ர: து..டிக்கில ஏன் வெச்சிருந்தே...போன போட்டு ஆ.விய வரச்சொல்லு
கோ.நே: பயமா இருக்கு....
உ.சி.ர: நண்பன கூப்பிட என்னப்பா பயம்..
கோ.நே: அதில்ல நாம செய்ய போற காரியத்த நெனனச்சா...பொலீஸ்..கீலீஸ்..ஜெகன்மோகினி
உ.சி.ர : ஒன்னும் பிரச்சினை இல்ல சட்ட ஆலோசகர்கள் கிட்ட நான் ஏற்கனவே டிஸ்கசன் பன்னிட்டேன். ஆ.வி வந்தாதான் நம்ம போராட்டம் சக்ஸஸ் ஆகும்.
கோ.நே: அவன் நுப்பத்துரெண்டு பேரோட சாட்டிங்கில இருந்தான் வரச் சொல்லிட்டேன்.
உ.சி.ர : இன்னுமா...வரல
ஆ.வி : முன்னாடி பார்த்திட்டு இருந்தீங்க நான் பின்னாடி இருந்தேன்.
உ.சி.ர : அங்க யார பார்த்திட்டு இருக்க வா பத்த வை
கோ.நே: நான் இப்ப சிகரெட் பிடிக்கரதில்ல
உ.சி.ர : நீ இப்படி சொல்வேன்னு தெரியும் நானே கொண்டாந்திருக்கேன், இந்தா...
கோ.நே : அண்ணே நல்லா பத்திடுச்சி...ஆ.வி. என்ன செஞ்சிட்டிருக்கே சீக்கரம் புடி எரியறது நல்லா தெரியோனும்...
உ.சி.ர : வெற்றிவேல்....வீரவேல்...
ஆவி : வால்டர் வெற்றிவேலை ஏன் கூப்பிடரீங்க...எடுத்தாச்சி..
உ.சி.ர : ஏ...ஏ..எங்க எங்க போட்ட காம்பவுண்டுக்கு உள்ளார போட்டுட்டே...அதென்ன பயர் சர்வீஸ் வண்டி மாதிரி தெரியுது... எட்றா உன் சிங்கத்த...
ஆ.வி: சார் இருங்க...என்ன விட்டுட்டு போறீங்களே நானும் வந்திடரேன்....
( இந்த பதிவை எழுதியது ஒரு பிரபல பதிவர்.. விளையாட்டா சொன்னாலும் சமூக நலன் கருதி ஒருத்தர் மேற்கொண்ட முயற்சில பங்கெடுக்க எல்லோரும் முன் வர வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது இது... )
சந்தடிச் சாக்குல எல்லோரையும் சந்தில இழுத்து விட்டாச்ச்சு போல!?
ReplyDeletehahaha.. ஹஹஹா.. அக்கா இந்த பதிவ நான் எழுதல.. அந்த பிரபல பதிவர் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.
Delete:))
ReplyDelete'அந்தி மழை' இதழில் உங்களைப்பற்றிய, உங்கள் வலைத்தளம் பற்றிய அறிமுகம் பிரசுரமானதற்கு இந்தயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநன்றி அம்மா, லிங்க் கொடுக்க முடியுமா ப்ளீஸ்..
Deleteநேக்கு ஒன்னும் புரில :(
ReplyDeleteஜெகன் மோகினி எபிசொட் பற்றியது நண்பா..
Deleteஎன்ன நடக்குது இங்க? ஆமா நான் எங்க இருக்கேன்? அவங்கெல்லாம் யாரு?
ReplyDeleteஹஹஹ்ஹா.. காயத்ரி நாங்க நாங்கதான்.. நீங்க நீங்கதான்.. அவங்க எல்லாம் அங்க தான் இருக்காங்க.. இப்ப புரிஞ்சிடுச்சா? :)
Deleteஇத எல்லாம் புரிஞ்சுக்குற மாதிரி டிஸ்னரி எதுவும் இருக்கா?
Deleteஎரிக்கறதுக்குக் கூட ‘அவரோட’ புத்தகம் எதும் கிடைக்கலையா? பரிதாபம்தான் ஆவி! அதுசரி... நீங்க பிரபல பதிவர்ன்னுதான் எல்லாருக்கும் தெரியுமே... அதை கடைசில வேற பின்குறிப்பா சொல்லிக்கணுமாக்கும்...!
ReplyDeleteஹஹஹா.. இந்த பதிவ நான் எழுதல வாத்தியாரே.. அந்த பிரபல பதிவர் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம். கடைசில அந்த "Seventh World" ஐ சிங்கம் எரிச்சிட்டதா கேள்வி..
DeleteEnakku nerukkamana peyar sonnale 'inikkum' antha nabar ai naan kandupidikkanuma enna? poyya!
Delete