வெண்ணிலவே,
உனைத் தோள்களில் தாங்கிப் பிடித்தேன்,
'அட்லஸாய்' மாற்றிவிட்டாய்..
சந்த்ரிகையே,
ஒரு சர்க்கிளுக்குள் சிறைப்படுத்த முயன்றேன்,
ஸ்லிப்பாகி போனாய்..
பால்நிலவே,
உனக்கு வெள்ளையடிக்க எண்ணினேன்,
பால்வீதியில் மாயமானாய்..
வெண்'மீனே',
உனை பிடிக்க வலை வீசினேன்,
பிறையாய் தேய்ந்து நழுவினாய்..
வட்டப் பூப்பந்தே,
உனை வீசி விளையாட நினைத்தேன்,
காற்றில் கரைந்து போனாய்..
திங்கள் ஒளி விளக்கே,
உனை டேபிள் லேம்ப்பாக்க ஆசைப்பட்டேன்,
விடியலில் அணைந்து போனாய்..
அழகான சந்திரமுகியே,
உனை "போட்டோ பிரேமுக்குள்" மாட்டிவிட துடித்தேன்,
காலையில் நீ காணாமல் போனாய்..
மூன் எனும் ஏஞ்சலே,
உனை தொட்டுவிட ஏணியில் ஏறினேன்,
என் பிடிக்கெட்டா தூரத்தில் ஒளிந்து கொண்டாய்..
தூய நிறம் படைத்தவளே,
இன்றும் உனைக் காணவேண்டி கருக்கலில் காத்திருக்கிறேன்,
விண்ணைத்தாண்டி எனைக்காண வருவாயா?
( போட்டோ உபயம் : 'இனியவை கூறல்' கலாகுமரன் அவர்கள்.. )
வணக்கம்
ReplyDeleteஆகா....ஆகா...கவிதையின் கற்பனை அருமை ......படங்களும் அருமை வாழத்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துகளுக்கு நன்றி ரூபன்..
Deleteமூன் -ஐ பதிவிட்டதற்குப் பாராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றி அம்மா!!
Deleteமூன் எனும் ஏஞ்சலே...
ReplyDeleteசூப்பர்.... வாழ்த்துக்கள்...
தலைவர் இஸ் பேக்.. குட் நியுஸ்..
Deleteபடங்களும் அதற்கான கவிதையும்
ReplyDeleteமிக மிக அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
நன்றி ஐயா..
Deletetha.ma 3
ReplyDeleteஅதென்ன மூன் எனும் ஏஞ்சல்!?
ReplyDeleteநிலவுத் தேவதையை ஆங்கிலப் படுத்தியிருக்கேன் அக்கா.. :)
Deleteநல்லா படுத்தியிருக்கீங்க மிஸ்டர் ஆவி :)
Deleteஜீவன் - :)
Deleteஎனக்கு பிடிச்ச இந்த படத்தை பகிர்ந்து கொண்டேன் ஆ.வியிடம் அடுத்த பத்து நிமிடங்களில் இந்த கவிதை கிட்டியது என்பதை விட கொட்டியது...கவிதை ஊற்று ஏதுனா உள்ளத்துக்குள்ள இருக்கோ...
ReplyDeleteபிடிச்ச பொண்ண மணிக்கணக்கா பார்க்கிறதுக்கும், பிடிச்ச விஷயத்த சட்டுன்னு பண்றதுக்கும் திறமையெல்லாம் தேவையில்ல சார்.. (தன்னடக்கமாம்!!)
Deleteஹக்....
Delete:)
Deleteஎன்ன மிஸ்டர் கலா ...! இருமலா ?
Deleteஇல்ல விக்கலா ... உடனே தண்ணிய குடிங்க பாஸ் :)
Deleteஇல்லை நக்கலா?? :)
Deleteகவிதை நன்றாகவே(எழுதுகிறீர்கள்) சொல்கிறீர்கள் ஆவி!
ReplyDeleteநன்றிங்க..
Deleteஅருமை இதுவே அதைவிட உண்டோ
ReplyDeleteபெருமை நிலவும் பெறுமே! - தருகின்ற
இன்கவி என்றும் இனிமை! சிறக்குமே
உன்பா உலகில் உயர்ந்து!
மிகவும் அருமை உங்கள் கவிதை!
நல்ல கற்பனை! ரொம்பவே ரசித்தேன்!
வாழ்த்துக்கள் சகோ!
த ம.4
நன்றி இளமதி.. தூய தமிழ்ல உங்க கவிதை பார்க்கிற போது நெஞ்சில் ஒரு குற்ற உணர்ச்சி.. இனி வரும் காலங்களில் தமிழில் மட்டும் என் கவிதைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளனும்னு எனக்கு நானே சொல்லிகிட்டேன். :)
Deleteகவிதையால் குட்டு (good) கிடைக்கனுமே....
Deleteஆ..வி!..ஹையோ... இதென்னதிது..
Deleteநான் எழுதியது உங்களை நொகடிச்சிட்டுதோ... மன்னிச்சுக்கோங்க சகோ..
ஆனாலும் உங்க தமிழ்ப் பற்று என்னை நெகிழச்செய்கிறது.
அப்போ இனி தனித்தமிழில் கவிமழையைப் பொழியவிடுங்கள்.. முற்கூட்டியே வாழ்த்துக்கள்!
//கவிதையால் குட்டு (good) கிடைக்கனுமே....//
Deleteஆமாம் கலாகுமரன் குட் கிடைக்க நான் இன்னும் கற்க வேண்டும்.
அதற்குள் அதீத ஆர்வம்...
அங்கங்கே கவிதைகளைக் கண்டால் எனை மறந்து ஏதாவது கிறுக்குத்தனமாய் கிறுக்கிவிடுகிறேன்...:)
இல்லை சகோ.. உங்க கவிதை ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.. வாழ்த்துக்கு நன்றி..
Deleteஹஹா சூப்பர் (y)
ReplyDeleteநன்றி காயத்ரி..
Deleteநிலாக்கவிதை ஹனிமூன்! சூப்பர்!
ReplyDeleteரசித்து படித்ததற்கு நன்றி நண்பா..
Deleteகவிதை அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி ஜெயகுமார் ஸார்.
Deleteபடம் ரசிக்க வைத்துவிட, கவிதை தங்கு தடையின்றி அருவியாய்க் கொட்டியிருக்கிறது ஆவியிடம்! தொடர்ந்து எழுதி இன்னும் நிறையப் பாராட்டு பெற வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி வாத்தியாரே!! இது இன்ஸ்டன்ட் காப்பி மாதிரி இன்ஸ்டன்ட் கவிதை.. முகநூல்ல கலாகுமரன் சார் கேட்டப்போ எழுதினது.. அவர்தான் இங்கேயும் பகிரச் சொன்னார். "உங்க வார்த்தைகள" மனசுல வச்சு அடுத்த முறை இன்னும் சிறப்பா எழுத முயற்சிக்கிறேன்.
Deleteஅழகான ஹைகூக்கள் ....
ReplyDeleteவலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!
தொடர வாழ்த்துக்கள் ...!!!