Wednesday, November 6, 2013

காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-2)

பாகம்-1                                            மறுநாள் காலை சுந்தர் போம் மெத்தையில் இனிதான தூக்கத்தில் இருக்க போன் அலறியது. எரிச்சலோடு கண்விழித்த சுந்தர் போனை காதுக்கு கொடுத்து "ஹலோ, சுந்தர் ஹியர்." என்றான். மறுமுனையில் சிவஞானத்தின் குரல் கேட்டது. விஷயத்தைக் கேட்ட சுந்தரின் முகம் சுருங்கியது. "இஸ் இட்.. நான் உடனே அங்க வர்றேன்" என்றபடி போனை வைத்துவிட்டு அவசர அவசரமாக உடைமாற்றிக் கொண்டு தன் ஹீரோ ஹோண்டாவில் பறந்தான். GOLDEN EAGLE DETECTIVE AGENCY முன் வண்டி நின்றது. அதை ஸ்டாண்ட் இட்டு நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்த ஆனந்த் ஆச்சர்யத்துடன் " என்ன பாஸ், இன்னைக்கு நேரத்திலேயே வந்துட்டீங்க? " என்று கேட்க " ஆனந்த், உடனே கிளம்பு.. வளசரவாக்கத்துல இன்னொரு மர்டர் நடந்திருக்கு. அந்த ரெண்டு கொலை நடந்த மாதிரியே நெஞ்சில் கத்தி இறக்கப்பட்டு க்ரூயலா கொல்லப்பட்டிருக்கார்." "யார் அந்த மூணாவது பாக்கியசாலி" என்று கிண்டலாக கேட்க " சென்னையில பல ஜவுளிக் கடைகளுக்கு அதிபரான சின்னச்சாமி."

                                 ஹீரோ ஹோண்டாவும் யமகாவும்  சம்பவ இடத்தை அடைந்தது. சுந்தரை வாசலில் கண்டவுடன் நடந்த சம்பவத்தை விளக்கிக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார் சிவஞானம். ஹாலின் மத்தியில் சோபாவில் சின்னச்சாமி மெளனமாக தூங்கிக் கொண்டிருந்தார். இதயத்தில் செருகப்பட்டிருந்த கத்தியினூடே வெளிவந்த ரத்தத் துளிகள் இதய வடிவில் தெரிந்தது. சிவஞானம் மெலிதான குரலில் "இந்த கேஸ்லையும் எந்த தடயமும் கிடைக்கல. இதையும் அதே கொலைகாரன் தான் செஞ்சிருக்கணும். கொலை செய்யப்பட்ட ஸ்டைல், கத்தி இறக்கப்பட்ட இடம், கொலைக்கு பயன்படுத்திய சிவப்பு நிற பிடியுள்ள அந்தக் கத்தி இப்படி மூணு கொலைகளுக்கும் மேட்ச் ஆவுது. ஐ வான்ட் டு கெட் தட் பேஸ்$%&*" என்று ஒரு கெட்ட வார்த்தையை உதிர்க்க சுந்தர் அவர் சொல்வதைக் கேட்டபடி அறையை நோட்டமிட்டான். பின்னர் அறையின் ஓரத்தில் நின்று சிந்தித்துக் கொண்டிருந்த ஆனந்திடம் வந்து " உனக்கு ஏதாவது க்ளூ கிடைச்சுதா ஆனந்த்" என்றான். "எஸ் பாஸ்" என்ற ஆனந்தை ஆவலாய் பார்த்த சுந்தர் "என்ன" என்றான் அதை தெரிந்து கொள்ளும் பொருட்டு.

                                 "கொலைகாரன் என்னை விட புத்திசாலியா இருப்பான் போலிருக்கு பாஸ். ஒரு தடயம் கூட விடலையே"  என்ற ஆனந்திடம் பொங்கி வந்த தன் கோபத்தை மறைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்று மேசை டிராயர்கள், கப்போர்டுகள் என எல்லாவற்றையும் சோதனையிட்டான். அதே சமயம் ஆனந்த் வீட்டின் வெளியே சென்று சுற்றிப் பார்த்தான். அங்கே ஆளுயர காம்பவுண்டில் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்துக் கொண்டே வந்த ஆனந்த் ஓரிடத்தில் மட்டும் கண்ணாடி பதிக்கப்ப்படாமல் இருப்பதை கவனித்தான். உள்ளே சுந்தர் வாட்ச் மேனை விசாரித்துக் கொண்டிருக்க ஆனந்த் அந்த வெற்றிடத்தை ஆராய்ந்தான். அதன் மேலே ஏறி காம்பவுண்டுக்கு வெளியே குதித்தான். அப்போது அவன் காலில் ஏதோ இடறியது. குனிந்தான். அதை எடுத்தான். தன் பேன்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான். சுந்தர் எவ்வித தடயமும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் அலுவலகத்திற்கு விரைந்தான்.

                               மாலை ஐந்து அடித்ததும் டான் என்று கிளம்பிய ஆனந்தை தடுத்து நிறுத்தி "டெய்லி அஞ்சு மணி ஆனா எங்க கிளம்பிப் போறே?" "டூட், டோன்ட் யு நோ வேர் ஐயம் கோயிங் ?" என்றவனை "தெரியாது சொல்லு"  "மை வுட்பி வில் பி வெயிட்டிங் பார் மீ இன் தி பீச்"  என்றவனிடம் "கமான், நம்ம கேஸ்ல ஒரு இம்ப்ரூவ்மெண்டும் இல்ல.. ஆனா நீ மட்டும் டைமுக்கு கிளம்பிடு தினமும். வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யுடா" என்ற சுந்தரை தன் கூலிங்கிளாஸை கீழிறக்கி அவனை நோக்கி கண்ணடித்துவிட்டு " டோன்ட் மேக் ஜோக்ஸ் லைக் திஸ்" என்று சொல்லிவிட்டு பறந்தான் சென்னையில் கடற்கரைக்கு பெயர் போன (??) மெரினாவில் வண்டியை நிறுத்தினான் ஆனந்த். அங்கு லாவண்யா அவனுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் "ஹாய்" என்றான். அவளும் பதிலுக்கு "ஹாய்" என்று கூறி கையசைத்தாள்.

                               பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் கடற்கரை மணலில் அமர்ந்தனர். எப்போதும் கலகலவென பேசிச் சிரிக்கும் ஆனந்த் அன்று வழக்கத்திற்கு மாறாக மெளனமாக அமர்ந்திருந்தான். அந்த நிஷ்டையை கலைக்கும் விதமாக லாவண்யா "என்ன துப்பறியும் புலி இன்னைக்கு அமைதி காக்குது?" என்றாள். சட்டென்று அவள் புறம் திரும்பிய ஆனந்த் "அதெல்லாம் ஒண்ணுமில்லை பேபி" என்றான். "இப்போ சொல்லப் போறீங்களா, இல்லையா"  "இப்ப எடுத்திருக்கிற கேஸ்ல கொஞ்சம் சிக்கல். அவ்வளவுதான்" " அவ்வளவுதானே, டோன்ட் ஒர்ரி உங்க சூப்பர் பிரைன் ஏதாவது வழி சீக்கிரம் கண்டுபிடிச்சு கொடுக்கும்" என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே "ஆ கண்ல மணல் விழுந்திடுச்சு பார்" என்றான். அவள் அவன் அகல விரித்த கண்களை நோக்கி ஊதச் செல்ல, சற்றும் எதிர்பாரா நேரத்தில் அவன் அவள் இதழில் இதழ் பதித்தான்.  "ச்சீசீய்.. நாட்டி பாய்" "ஐயோ, நான் பாய் இல்லை, பக்கா ஹிந்துவாக்கும்"  என்ற அவனை நோக்கி வாய்விட்டு சிரித்த அவள் "சார் இப்போ பார்முக்கு வந்துட்டார்.. டைம் ஆயிடுச்சு நான் கிளம்பறேன்." என்றாள். ஆனந்த் கிளப்பிய யமஹாவின் பின் சீட்டில் லாவண்யா அமர்ந்து கொள்ள வேகமாய்ப் பாய்ந்தது.

                                 அவளை ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டலில் இறக்கி விட்டுவிட்டு தன் வீட்டிற்கு சென்றான். யமஹாவை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்து அன்று காலை கிடைத்த "அந்த" தடயத்தை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து டேபிள் டிராயரில் போட்டு வைத்தான். பின்னர் சட்டையை மாற்றிவிட்டு டி-ஷர்ட்டுக்குள் நுழைந்தான். அப்போது சிணுங்கிய அவன் செல்போனை எடுத்து "ஹலோ, ஆனந்த் ஹியர்.." என்றான். "ஹலோ ஆனந்த் நான் பாஸ் பேசறேன். மார்னிங் நேரத்துல வந்திடு" என்றான். "ஒக்கே பாஸ்" என்று கூறி போனை வைத்தான்.  போனை வைத்த போதும் மாலை சுந்தர் அவனிடம் கடுமையாக நடந்து கொண்டது நினைவுக்கு வந்தது. அந்த நினைவுகள் அவனை உடனே தூங்க விடாமல் துரத்தியது.          

தொடரும்..                6 comments:

 1. தலைப்பே மிரட்டுகிறது..

  ReplyDelete
  Replies
  1. கதையையும் படிங்க மணிமாறன்.. ;-) (சும்மா காமெடி)

   Delete
 2. ம், அப்புறம் என்னாச்சு? அந்தத் தடயம் என்ன? ஆவலுடன் அடுத்த பாகத்துக்கு....

  ReplyDelete
  Replies
  1. வருது.. வருது.. விரைவில்..

   Delete
 3. ஆவின்னாலே டெரர்தான்...! இதுல ரத்தம் பொங்கற க்ரைம் கதை வேறயா...! கதையில ரத்தம் வருதோ இல்லையோ... ஆனந்தின் கடி ஜோக்குகள் எங்களுக்கு ரத்தத்தை வரவழைச்சிடுது... ஹி... ஹி...!

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. நோக்கமே அதுதானே..

   Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails