Wednesday, November 13, 2013

காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-3)

பகுதி-1 
பகுதி-2 

                           காலை ஐந்து மணி சுமாருக்கு நன்கு உறங்கிக் கொண்டிருக்க நேற்றைப் போலவே போன் அலறியது. தூக்கம் கலைந்த எரிச்சலுடன் போனை எடுக்க போனில் அதே சிவஞானம். அவர் கூறியதை கேட்டுவிட்டு போனுக்கு விடை கொடுத்தான். அதே பரபரப்புடன் கிளம்பி ஹீரோ ஹோண்டாவை உசுப்பினான். அலுவலகத்தின் முன் நிற்கவும் எதிரில் ஆனந்த் வந்து சேரவும் சரியாக இருந்தது. "ஆனந்த், சீக்கிரம் ரெடியாயிடு, ராயப்பேட்டையில் சேம் மர்டரர் இன்னொரு தொழில் அதிபரை கொலை பண்ணியிருக்கான். பீ க்விக்." என்றான்.                            இருவரும் சம்பவ இடத்தை அடைந்தனர்.இருவரும் வீட்டினுள் நுழைய வாசலில் தர்மராஜ் என்ற நேம் போர்டு அவர்களை வரவேற்றது. சடலத்தின் அருகே சிவஞானம் கவலை தோய்ந்த முகத்தோடு நின்றிருந்தார். மறுபுறம் ஒரு பெண்மணி அழுது கொண்டிருந்தார். தர்மராஜின் மனைவியாக இருக்கலாம். தர்மராஜ் இதயத்தில் கத்தியை  வாங்கி  கடைசி உறக்கம் மேற்கொண்டிருந்தார். பல பிரமுகர்கள் மலர் மாலைகளை வைத்துவிட்டு நகர்ந்தனர். வழக்கமான விசாரணைகள், தேடுதல் போன்றவற்றிற்கு பிறகு எல்லோரும் மகத்தான தோல்வி கண்டனர். வழக்கம்போல் ஆனந்த் வீட்டின் பின்புறம் சென்று சுற்றிப்பார்க்க அங்கு ஒரு பகுதியில் சக்தி நிறைந்து காணப்பட்டது. ஆனந்த் அந்த சேற்றின் அருகே வந்தான். அங்கு ஒரு வண்டியின் டயர் நின்றதற்கான அடையாளம் தெரிந்தது. அதைத் தன் மனதில் குறிப்பெடுத்துக் கொண்டான்.

                             மாலை மெரீனா பீச்சில் ஆனந்தும் லாவண்யாவும் சுண்டலை கொறித்துக் கொண்டிருக்க, "ஆனந்த், எனக்கு புடிக்கல" என்றாள் லாவண்யா. "அப்ப கீழ போட்டுடு" என்றான் ஆனந்த். "அய்யோ நான் சுண்டலை சொல்லல. உங்க உத்தியோகத்தை சொன்னேன்." "ஏன்" "டெய்லி உயிருக்கு பயந்துகிட்டு வாழ்க்கை நடத்தணும்" "ஏய், இதுக்கே இப்படி சொல்றே, இன்னைக்கு காலைல எனக்கு வந்த ஒரு லெட்டர் பத்தி சொல்லட்டுமா?" "என்ன லெட்டர்?" "இந்த கேஸை எடுத்து நடத்தினால் இது உனக்கு கடைசி கேஸாக இருக்கும்ன்னு இருந்தது" என்றான். "மிரட்டல் கடிதம் உங்களுக்கா?" என்றாள் லாவண்யா.  "ம்" என்றான். "அவங்க உங்க பாஸுக்கு அனுப்பாம ஏன் உங்களுக்கு அனுப்பியிருக்காங்க?" என்று கேட்டாள். "இது கூடவா தெரியல?" "தெரியல" என்று அவன் கூறப் போவதை ஆவலுடன் எதிர்நோக்கினாள் லாவண்யா. அவன் "எனக்கும் தெரியல" என்றான். ஆனந்த் அவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு கேஸ் விஷயமாக பேச சுந்தர் வீட்டுக்கு சென்றான். அங்கு பூட்டு தொங்கியது. ஏமாற்றத்துடன் திரும்பிய ஆனந்த் சட்டென்று சுந்தர் வீட்டு வாசலில் குப்பை தொட்டியில் 'அதை' பார்த்தான். உடனே சென்று 'அதை' எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான்.

                              ஒரு வாரம் ஓடியது. ஏழு நாட்களிலும் ஏழு கொலைகள். சிவஞானம் சுந்தர், ஆனந்த் இருவரையும் கேஸ் விஷயமாக வரச் சொல்லியிருந்தார். சிவஞானம் கவலையுடன் எதிரில் இருந்த இருவரையும் நோக்கி "சுந்தர், இன்னையோட ஏழு நாள், ஏழு கொலை நடந்திடுச்சு. கொலைகாரனைப் பத்தி உங்க ஒப்பினியன் என்ன?" என்றார். ஆனந்த் குறுக்கிட்டு " ஸார், கொலைகாரன் ஒரு எலிமெண்டரி ஸ்கூல் டீச்சரா இருக்கணும்.  பாருங்க, அழகேந்திரன், பத்ரிநாத், சின்னசாமி, தர்மராஜ், இளங்கோவன், பரூக் அப்துல்லாகான், கங்காதரன்னு ABCD வரிசையிலேயே கொலை செஞ்சுட்டு வர்றான்." என்றதும் "தட்ஸ் எ குட் பாயின்ட்" என்ற சுந்தர் "ஸார் பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டே தீரணும். எப்படியும் ஏதாவது ஒரு தடயத்தை விடாம போகமாட்டான்." என்று கூறினான்.

                              உடனே சிவஞானம் "அவன் தடயம் விடற வரைக்கும் நாம பொறுத்திருக்க கூடாது. ஏழு நாள் ஏழு கொலை, இத எப்படி தடுக்கிறது" ஆனந்த் குறுக்கிட்டு "ரொம்ப ஈஸி ஸார். வாரத்துக்கு ஏழு நாள்ங்கிறதை கொறச்சிட்டா கொலைகளும் கொறஞ்சிடும்" என்ற ஆனந்தை சுந்தர் முறைத்துவிட்டு "ஸார் இல்லேன்னா இப்படி பண்ணலாமே?  'H' ல ஆரம்பிக்கிற, கொலைகாரன் அடுத்து குறிவைக்கப்போற ஏதாவது தொழிலதிபர் இல்ல பெரிய பதவில இருக்கிற எல்லாருக்கும் பாதுகாப்பு ஏற்பாட்டை செய்திடணும். போலிஸ் போர்ஸ் மூலம் இவ்வளவு பேருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாட்டா லோக்கல் செக்யுரிட்டி கன்செர்ன்களிலிருந்து ஆட்களை பாதுகாப்புக்கு அனுப்பனும்." "இட்ஸ் எ வெரிகுட் ஐடியா"  என்றார் சிவஞானம்.


தொடரும்..

12 comments:

 1. திகில் தொடரட்டும் ஆவிசார்., தொடர்கின்றேன்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க..வாங்க.. ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க.. தொடர்ந்து வாங்க..

   Delete
 2. அருமை.தொடருங்கள் தொடர்கின்றேன்

  ReplyDelete
 3. ஒரு நாளைக்கு ஒரு கொலை.... டெய்லி காஃபி குடிக்கற மாதிரி இப்படி நடந்தா... ஐயய்யோ, உயிர் போயிடுச்சாங்கற பதட்டத்தைவிட இன்னிக்கு யார்ப்பா? என்று அசால்ட்டாக எடுத்துக் கொள்ளும் தன்மை வந்து விடும்னு தோணுது.

  ReplyDelete
  Replies
  1. அப்போ ரொம்ப வயலென்ஸ் ன்னு சென்சார் தடை பண்ணாதில்லே.. :) ஹஹஹா..

   ஜோக்ஸ் அபார்ட்.. இப்போ பதிவு டைப் பண்ணும்போதே அந்த அபத்தம் எனக்கும் பட்டுது சார்.. தவிர காலையில் சம்பவ இடத்த விசாரிச்சிட்டு, மாலையில் காதலியுடன் காலாற நடக்கிற அபத்தத்தையும் யாராவது சுட்டிக் காட்டுவாங்கன்னு பார்த்தேன்.. ம்ஹூம்.. தமிழ் சினிமா எல்லாரையும் அதுக்கு பழக்கப் படுத்தி வச்சிருக்குங்கிறதை நான் உணர்ந்தேன்..

   Delete
 4. சிறப்பான பகிர்வு

  ReplyDelete
 5. கொஞ்சம் போரடிக்கற மாதிரி இருக்கு ஆனந்த்... வரிசையா கொலை ...கொலையைத் தவிர வேறெதுமில்லைன்ற மாதிரி.. ஏதோ ஒரு சுவாரசியம் குறைகிறது.... நானும் முன்பெல்லாம் கிரைம் கதைகள் படிப்பேன்... ராஜேஷ்குமாருடையதைத் தவிர மற்றவர் கதைகளில் பொறுமை இழந்து முடிவைப் பார்த்து விட்டு திரும்பப் பக்கங்களை வேகமாகத் திருப்பிவிடுவேன்...

  ReplyDelete
  Replies
  1. வெளிப்படையாக குட்டியதற்கு நன்றி.. நான் முன்னமே சொன்ன மாதிரி அந்தக் காலத்துல எழுதினது. ஒரு வரி கூட மாத்தாம அப்படியே இங்கே போட்டிருக்கேன். அடுத்த பாகத்துல உங்களுக்கு ஒரு ட்விஸ்ட் காத்துகிட்டு இருக்கு...

   Delete
 6. அருமை... தொடருங்கள்... தொடர்கிறோம்.

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails