திரை உலகை பொறுத்தவரை வெளியே நண்பர்களாக பழகினாலும் உள்ளே ஒரு போட்டி, பொறாமை எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு தலைமுறையிலும் இதுபோன்ற போட்டி தொடர்ந்து கொண்டே தான் வந்திருக்கிறது. எம்ஜியார்-சிவாஜி, ரஜினி-கமல் தாண்டி இப்போது அஜித்-விஜய் இருவருக்குமான போட்டி இன்று உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது.
வரும் பொங்கல் திருநாள் அன்று அஜித் நடித்த "வீரம்" திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே விஜய் மோகன்லால் இணைந்து நடிக்கும் "ஜில்லா" படமும் அதே நாளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வீரம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியிடுவது என ஆரம்பம் பட வெளியீட்டிற்கு முன்னரே தீர்மானிக்கப் பட்ட ஒன்று. இப்போது சூப்பர் குட் பிலிம்ஸ் அதே தினத்தில் வெளியிடுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆரம்பம் படத்தின் அட்டகாசமான வெற்றிக்கு பின் கம்பீரத்துடன் பெயருக்கேற்றார் போல் களமிறங்குகிறது "வீரம்". இப்படத்தின் டிரைலர் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது எல்லோரும் அறிந்ததே.தலைவா சுமாராக ஓடிய போதும், மோகன்லால் உடன் நடித்திருப்பதால் ஜில்லா படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆகையால் வரும் பொங்கலுக்கு மக்களுக்கு சுவையான பொங்கலாக இருக்குமென்று தெரிகிறது.
திரையில் போட்டியும் பொறாமையும் நிறைந்திருந்த போதும் அஜித் மற்றும் விஜய் வெளியில் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர். அவ்வப்போது குடும்பத்துடன் சந்தித்துக்கொண்டும், மகிழ்ச்சியான நேரங்களை பகிர்ந்துகொண்டும் தான் இருக்கின்றனர். ஆகையால் இரு படங்களும் வெற்றிபெற ஆவிடாக்கீஸ் சார்பில் வாழ்த்துகிறோம்.
//வாழ்த்துகிறோம்//
ReplyDeleteநானும் நானும்
வாப்பா, சேர்ந்தே வாழ்த்துவோம்!
Deleteகோச்சடையான் வருவதால் இரண்டு படமும் தள்ளி போக வாய்ப்புள்ளது. கண்டிப்பா 3 படமும் ஒறே நாளில் வராது.
ReplyDeleteமாஸ்டர், காமெடி கீமெடி பண்ணலையே.. கோச்சடையான் ட்ரைலர் பார்த்ததுக்கு அப்புறமும் இப்படி சொல்றீங்களா? உங்க மன தைரியத்தை பாராட்டுறேன்.. ரெண்டாவது 'கார்ட்டூன்' படங்களால் பெரிய பாதிப்பு ஒன்றும் வந்துவிடாது என்பதால் ஜில்லா-வீரம் இரண்டுமே பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகும். சொல்லுங்க எவ்வளவு பெட் வச்சுக்கலாம்? :)
Delete
Deleteமக்களே எனக்கும் ரஜினி படங்கள் பிடிக்கும், ஆனா கார்ட்டூனில் வரும் ரஜினி அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதே என் கருத்து. எதுவானாலும் பேசி தீத்துக்கலாம்!
வணக்கம்
ReplyDeleteஆவி..அண்ணா
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி...ஆவி அண்ணா...
புதி பதிவாக என்பக்கம்...
http://2008rupan.wordpress.com/2013/11/21/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%88/
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்..
Deleteஹிட்ஸ்க்கான பதிவுன்னு தெரியாம உள்ள வந்துட்டேன்.. :)
ReplyDeleteவாங்க அனுஷ்யா. ரெகுலரா வந்தீங்கன்னா நல்ல பதிவுகளும் படிக்கலாம்.. ;-)
Deleteஆமென்
Deleteஆமென்
Deleteஹிட்ஸ்க்கான பதிவுன்னு தெரியாம உள்ள வந்துட்டேன்.. :)
ReplyDeleteஅதுக்காக அத ரெண்டு தடவ சொல்லிக் காட்டுறது எல்லாம் நல்லா இல்லே! ;-)
Deleteஅவங்க ஃப்ரண்டாத்தான் இருக்கறதா காட்டிக்கிறாங்க...இதுக்கு முன்னாடி அவங்க வெறியர்களை(!) உருவாக்கி சொறிஞ்சிக்க வச்சாங்க...நல்லா செட்டில் ஆனதும் நட்பு பாராட்டுறாங்க...வாழையடி வாழையாக இதே தொடர்கிறது...இன்னா ஒன்னு தேவையற்ற அரசியல் சொறிதல் இல்லாததால் அஜீத் மேலே மக்களுக்கு கொஞ்சம் அபிப்ராயம் நல்லா இருக்கு...உசுப்பேத்துதல் இல்லாததால்..
ReplyDeleteகரெக்டு, கரெக்டு..
Deleteஆவி. . .ரஜினி எனும் மாஸ் மற்றும் பெரிய தியட்டர்கள் அனைத்தும் புக் செய்யபட்டுவிடும் என்பதால் சொன்னேன். பெட் வைத்துகொள்ளளாம். 3 படமும் ஒன்றாக வந்தால் நான் என் மொபைலை தருகிறேன். இல்லனா நீங்க தரனும் ஒகேயா??
ReplyDeleteஎன் பெட் அது அல்ல.. வீரம் மற்றும் ஜில்லா திரைக்கு கண்டிப்பாக வரும் என்பதே என் பெட்..அது சரி இந்த ரெண்டு படமும் பொங்கலுக்கு வராது தள்ளிப் போகும்னு தானே நீங்க சொன்னீங்க. கோச்சடையான் வராது. வந்தாலும் மூணு படமா வரும்னு தானே நான் சொல்றேன். இந்த பெட்டுக்க நீங்க ஓக்கேன்னா நீங்க ஜெயிச்சா கோச்சடையானுக்கு FDFS டிக்கட் நான் எடுத்து கொடுக்கறேன். நான் ஜெயிச்சா வீரத்துக்கு FDFS டிக்கட் நீங்க எடுத்து கொடுங்க, சரியா? ;--)
Deleteஎனது வாழ்த்துகளும்...
ReplyDeleteDD, உங்க வாழ்த்துகள் தல-தளபதிக்கா இல்ல ஆவி-ராஜாவுக்கா ?
Delete;)
ஜில்லா&கோச்சடையான் ஒரே நாளிலும்,வீரம் அறிவிக்கப்பட்ட தேதியிலும் வருகிறதாக தெரிகிறது.
ReplyDeleteஜில்லாவும் பொங்கலுக்கு வருவதாக தான் சொல்லியிருக்காங்க கோகுல்!
Deleteதல ரசிகராக,நானும் வாழ்த்துகிறேன்!
ReplyDeleteநானும் தல ரசிகன் தான் பாஸ். கஷ்டப்பட்டு படம் எடுக்கறாங்க.. ரெண்டையுமே வாழ்த்துவோமே!
Deleteபாஸ் நான் சொன்னது 3 படமும் ஒரே நாளில் வராது என்றுதான். இன்றய் காலை தகவல்படி கோச்சடையான் ரீலிஸ் தேதி தள்ளி போவதாக தகவல். மற்றும் இரண்டு மாஸ் ஹீரோகல் படங்களை ஒரே நாளில் விட்டு வசூலை குறைத்து கொள்ள தயாரிப்பாளரும் விரும்பமாட்டார். கண்டிப்பா ஒரு படம் தான் வரும். அது நம்ம தல படம்தான்
ReplyDeleteஹஹஹா.. நான் சொன்னேன்ல கோச்சடையான் ரஜினி படம் அல்ல. ரஜினி உருவம் கொண்ட கார்ட்டூன். இன்னும் பெட் வச்சுக்கலாம். இந்த பொங்கலுக்கு ரெண்டு படமும் வருது பாஸு.
Deleteஇப்போ இது ஒரு மாதிரி ஈகோ பிரச்சனை ஆயிடுச்சு.. யாரும் பின் வாங்க மாட்டாங்க..
Deleteவரட்டும் வெற்றி பெறட்டும்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி
Delete//ஹிட்ஸ்க்கான பதிவுன்னு தெரியாம உள்ள வந்துட்டேன்.. :)//
ReplyDeleteசேம் பீலிங்.... பட், ஐ வான்ட் மோர் எமோசன்...
அப்பால புச்சா ஒரு இடுகை போட்டுக்கிறேன்... நேரம் கெடச்சா... கடையாண்ட வந்து கர்த்து சொல்லிட்டு போ நைனா...
வர்றேன் பா.. தல நியுஸ் வாசகர்களுக்கு கொடுக்கணும்னு தான் போட்டேன். தலைப்பு அந்த மாதிரி அமைஞ்சிடுச்சு..
Deleteஆமாமா, எல்லோரும் வாழ்த்துவோம்
ReplyDelete:)
Delete