இன்ட்ரோ  
                        தொடர் தோல்விகளுக்கு பின் துவண்டு போயிருந்த விஷாலும், ஆதலால் காதல் செய்வீர் படம் சிறப்பாக விமர்சிக்க பட்டபோதும் வசூல் தோல்வி சந்தித்த சுசீந்திரனும் இணைந்து எழுச்சி கண்டிருக்கும் படம். த்ரில்லர் வகையராவுக்குள் A, B, C என அனைத்து சென்டர் ரசிகர்களுக்கும் தேவையான மசாலாக்களுடன் ஒரு கனமான கதையுடன் களமிறங்கியிருக்கும் படம் தான் பாண்டியநாடு.
கதை         
                              பாண்டிய மன்னனின் தேசமான மதுரை மாபியாக்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கும்பலின் தலைவன் ஒருவன் இறந்ததும் கோஷ்டிப் பூசலில் தமது ஆட்களையே வெட்டி சாய்த்துவிட்டு தலைமை பதவிக்கு வரும் ஒருவன் தனது வழியில் குறுக்கிடும் நேர்மையான அதிகாரிகளை எல்லாம் கொலை செய்கிறான். அப்படி ஒரு விபத்தில் நாயகனின் அண்ணனும் பலியாகிறார். அந்தக் கொலைக்கு வயது முதிர்ந்த நாயகனின் தந்தையும், பயந்த சுபாவமுள்ள நாயகனும் எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதே கதைக் கரு. இதன் நடுவே மெல்லியதாய் தன் வீட்டு மாடியில் குடியிருக்கும் பெண்ணுடன் காதல், காமெடி  என இடையிடையே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கிளிஷேக்கள்..
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              சண்டைக்கோழி, திமிர் படங்களுக்கு பின் விஷாலிடம் இந்த படத்தில் நல்ல நடிப்பு தெரிகிறது. இதற்கு முன் வந்த இவரது படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கதையின் நாயகனாய் மிளிர்கிறார். காதல் காட்சிகளில் சுமார் தான் என்றாலும் படம் நெடுக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாரதிராஜா விஷாலின் தந்தை, வீரத்தை முகபாவத்திலேயே காட்டி நம்மை அசர வைக்கிறார். ஒரு நல்ல குணச்சித்திர நடிகனை தமிழ் சினிமா இதுவரை பயன்படுத்தாமல் இருந்துவிட்டதென தோன்றியது. கிளைமாக்ஸ் காட்சியில் இவர் நடிப்பு நம் கண்களில் ஓரிரு துளி நீரை வரவழைப்பதே இவரது நடிப்பின் உச்சம். அண்ணனின் குழந்தையாக வரும் குழந்தை ரக்க்ஷனா படு சுட்டி.குறை சொல்ல முடியாத நடிப்பு லக்ஷ்மி மேனனுடையது. ஆனாலும் அம்மணி இன்னும் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் முயற்சி செய்யலாம். "பரோட்டா" சூரி சப்தம் அதிகம் இல்லாமலே நம்மை சிரிக்க வைப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம். சில இடங்களில் சீரியஸ் நடிப்பு கூட சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக வரும் சரத் ( எதிர்நீச்சலில் நந்திதாவின் அப்பாவாக வருவாரே,அவரேதான்) நம்மை மிரட்டுகிறார். வில்லன் கும்பலால் விஷால் குடும்பத்துக்கு என்ன ஆகுமோ என்ற ஒரு பயம் படம் முடியும் வரை நமக்கு இருக்கும்படி செய்தது இவர் தனித்திறன். விஷாலின் நண்பனாக வரும் விக்ராந்த் மனதில் நிற்கிறார். விஷாலின் அண்ணனாக நடிப்பவர் கதாப்பாத்திரத்துக்கு தெரிந்த முகம் யாரையாவது போட்டிருந்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்பது ஆவியின் கருத்து.
இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 இமான் இசை இனிமை. "ஏலே ஏலே மருது", "டையாரே", "பை பை", "ஒத்தக்கடை மச்சான்" பாடல்கள் சூப்பர். "நீங்களா பாஸ் ராஜபாட்டை எடுத்தது" என்று கேட்கும் அளவிற்கு பிரமாதப் படுத்தியிருக்கிறார் சுசீந்திரன். குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படத்தை கொடுத்ததற்காக அவருக்கு ஒரு ஷொட்டு. சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்யும் விஷாலுக்கு  (விஷால் பிலிம் பேக்டரி) வாழ்த்துகள்..
                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                சித்தப்பா விஷாலை "மாப்பிள்ளை பார்க்க" வரும் பெண்ணை நிராகரிக்க பேபி ரக்க்ஷனா சொல்லும் காரணங்கள் ஒவ்வொன்றும் அருமை. கடைசியாக "இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்" என்ற விஷாலின் கேள்விக்கு "ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்கு தானே தெரியும்" என்று சொல்வது ஸோ க்யூட். சோகத்திலிருக்கும் சூரியிடம் "கட்டிங்" போட விஷால் அழைக்கும் காட்சி. தந்தை மகன் உரையாடலை வார்த்தைகளின்றி நெகிழ வைத்த காட்சி.
                  Aavee's Comments - Slow Tortoise wins Diwali Race..

 
 
 
 
No.. i feel PN is 2013rd "EE"
ReplyDeleteNice Review Style, U Make it simple ;-)
Thanks Harry!
Deleteகுடும்பத்தோடு சினிமா பார்த்து ரொம்ப நாளாச்சு. போலாம்ன்னு ஒரே தூயாவின் நச்சரிப்பு. தீபாவளி ரிலீஸ்ல எந்த படம் பார்க்கலாம்ன்னு சொல்லு ஆவி. மேடம் விஜய்யின் தீவிர ரசிகை. சின்ன மேடம் சூர்யா. அதனால, பார்த்து குடும்பத்துல குழப்பம் வராம சொல்லு ஆவி
ReplyDeleteபாண்டிய நாடு நல்ல சாய்ஸ் அக்கா.. எல்லாரும் பார்க்ககூடிய படம். (உங்க வீட்டுல தல ரசிகர் யாரும் இல்லையா? ))
Deleteதல ரசிகர் நாந்தான்.
DeleteNice and simple review... Btw, the "brother" character is played by Somasundaram of Aaranya Kaandam fame (Kaalayan) :-)
ReplyDeleteஒ.. எங்கேயோ பார்த்தது மாதிரி இருந்தது.. அவரும் நல்லா தான் செய்திருந்தார்.. ;-)
Deleteநல்ல விமர்சனம்!தீபாவளிப் படங்களில் ஒன்றாவது தேறியதே!
ReplyDeleteஆரம்பத்துக்கு என்ன குறைச்சல் பாஸ்.. அழகுராஜாவை தவிர இரண்டும் நல்லா தான் இருந்தது.
Deleteதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,
ReplyDeleteதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.
தகவலுக்கு நன்றிங்க..
Deleteஅழகுராஜாவால் காயம்பட்ட சென்னை ரசிகர்கள் பலர் பாண்டிய நாடு மூலமாக தங்கள் காயத்தை ஆற்றிக் கொண்டதாகச் சொன்னார்கள். இப்போது ஆவியின் விமர்சனம் அழகாக்ப் புரியவைத்து விட்டது படம் ஓ.கே. என்று! நல்லது.... (பார்யா... ஆவிக்கு தேடி வந்து வருமானம் தர்ற ஆளுங்கல்லாம் மாட்றாங்க...!)
ReplyDeleteஎல்லாம் உங்க ஆசிர்வாதம் வாத்தியாரே!!
Deleteசூப்பர் விமர்சனம். கண்டிப்பா படம் பாத்துட வேண்டியது தான்
ReplyDeleteபாருங்க காயத்ரி.. குடும்பத்தோட பார்க்கலாம்.. அதுக்கு ஆவி கேரண்டி.. ஹிஹி.. :-)
Deleteநன்று.இங்கேயும் மதுரைதானா?
ReplyDeleteநன்றி பாஸ் விமர்சனத்திற்கு விரைவில் பார்த்து விடுவேன்
ReplyDelete