இன்ட்ரோ
கதை
குடிப்பழக்கம் இன்றைய காலகட்டத்தில் அநேகமாக எல்லா இளைஞர்களிடமும் பரவிக் கிடக்கிறது. குடிப்பது நாகரீகமாகவே கருதப்படும் நிலையும் உருவாகி வருகிறது. இன்றைய இளைஞர்களை வழிநடத்த, குடிப்பழக்கம் தவறானது என்று உணர்த்த கடவுள் நடத்தும் சித்து விளையாட்டு தான் படத்தின் கதை. இதனிடையே ஜெய்-நிவேதா தாமஸ் இடையே மெல்லியதாய் ஒரு காதல் கதையும்..
ஆக்க்ஷன்
படத்தின் எதார்த்த ஹீரோ VTV கணேஷ் தான். மனிதர் தனக்கு கிடைத்த வாய்ப்பினை வெளுத்து வாங்கியிருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் படத்தை நகர்த்திச் செல்வது இவர்தான். ஓரிரு படங்களுக்கு பிறகு இவர் ஹீரோவாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ராஜா ராணியின் வெற்றிக்கு பின் ஜெய் நடித்து வந்திருக்கும் படமென்பதால் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார். சத்யன் இடையிடையே சிரிப்பை வரவழைத்தாலும் இன்னும் கொஞ்சம் உழைத்தால் மட்டுமே நிலைத்திருக்க முடியும்.சுப்பு பஞ்சு சிவபெருமான் வேடத்திற்கு அருமையாக பொருந்தியிருக்கிறார். இவரும் மனோபாலாவும் வரும் காட்சிகள் கலகல.. பார்வதி வேடம் தேவதர்ஷினிக்கு, அம்மணி காமெடியில் கலக்குகிறார். கேரள இறக்குமதி நிவேதா தாமஸ் பெரிய வேடம் இல்லையென்றாலும் தமிழில் ஒரு ரவுண்ட் வருவதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளது. மனோபாலா, படவா கோபி, சித்ரா இலட்சுமணன், ராஜ்குமார் என ஒவ்வொருவரின் தேர்வும் அருமை.
"கோவை காமராஜ் சித்த வைத்தியசாலை", வாரிசு அரசியல், விலை கொடுத்து வாங்கும் தண்ணீர் என தற்போதைய தமிழ்நாட்டு நிலவரங்களை கிண்டல் செய்வதில் துவங்கி, நகைச்சுவையாய் நகர்ந்தாலும் நான்கே கதாபாத்திரங்கள் கொண்டு கதை நகர்த்த முற்படும் போது இன்னும் கொஞ்சம் வலுவான திரைக்கதை இருந்திருக்கலாம். வசனங்களில் சிக்ஸர்கள் அடித்த போதும் காட்சியமைப்புகள் சில இடங்களில் தள்ளாடுவதை தவிர்த்திருக்கலாம்.
இசை-இயக்கம்-தயாரிப்பு
ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப்படத்தில் பிரேமின் இசை பாடல்களில் இனிமையாக இருந்த போதும் பின்னணி, முன்னணியில் குறைவாகவே இருந்தது. தனித்தீவில் சிக்கிக் கொண்ட நால்வர் செய்யும் சேட்டைகளை துறுதுறு இசையால் இன்னும் சிறப்பாய் மீட்டியிருக்கலாம். சந்துருவின் இயக்கம் எழுத்தாளர் சந்துருவின் எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கவில்லை. ஆனால் நல்ல முயற்சி என்றே சொல்லலாம்.
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
தேங்காய் தலையில் விழுந்து செந்தமிழ் பேசும் கணேஷின் காமெடி. வைத்திய குடும்பத்தை கிண்டல் செய்து வரும் காட்சிகள். "தமிழ் கடவுள்" முருகன் ஆங்கிலம் பேசும் காட்சி என பல இடங்கள் நல்ல நகைச்சுவை. சில இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் காட்சிகளை தவிர்த்திருந்தால் பேமிலி ஆடியன்ஸும் ரசித்திருக்க வாய்ப்பிருந்தது.
Aavee's Comments - Saraswathi's Challenge brings lots of fun.
//ஓரிரு படங்களுக்கு பிறகு இவர் ஹீரோவாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. // அவர் ஹீரோவாக நடிக்கிறார் அதில் தான் சிம்புவும் ஆண்ட்ரியாவும் ஒரு காட்சிக்கு நட்புக்காக வருகிறார்கள்.. படம் பெயர் இங்க என்ன சொல்லுது
ReplyDeleteஆவி ஜோதிடம் பலிச்சிருச்சு பாருங்க..;-)
Deleteவிமர்சனத்துக்கு,நன்றி!பார்ப்போம்,வரட்டும்!
ReplyDeleteஎங்க பாஸ், டி.விக்கா? ;)
Deleteவேற வழி?இங்க சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆவுறதில்ல!
Delete// சுப்பு பஞ்சு சிவபெருமான் வேடத்திற்கு அருமையாக பொருந்தியிருக்கிறார்// எனக்கு பிடிக்கல , கம்பீரம் இல்ல.. பிரகாஸ் ராஜ் பொருந்தியிருக்கலாம்
ReplyDelete//கோவை காமராஜ் // பெயரில் இருக்கும் டபுள் மீனிங் கர்மவீரரை இந்த சமுதாயதிற்கு என்ன ஒரு தாக்கத்தைக் கடத்தப் போகிறது என்று தெரியவில்லை, மற்றொரு காட்சியில் சரஸ்வதியை சரஸ் என்று கூப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை என்பது தனிப்பட்ட பார்வையாளனின் கருத்து
யோவ், காமெடிய காமெடியா பாருங்கப்பு.. நீங்க சொன்னதுக்கப்புறம் தான் எனக்கு பெருந்தலைவர் நினைவுக்கு வந்தார்.. அதுவரை அந்த நிஜ கும்பலின் பெயர் மட்டுமே நினைவில் இருந்தது.. பார்வதி தானே கூப்பிடுகிறார்.. என்ன பிரச்சனை?
Deleteநவீன சரஸ்வதி சபதம்
ReplyDeleteஎதற்கும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளமால் சற்றும் வித்தியாசமில்லாமல் எடுக்கபட்டிருக்கும் படம்...
பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்தால் அவ்வப்போது சிரிக்கலாம் (நல்ல சீனை எல்லாம் நிச்சயம் டிவியில் போடுவார்கள்)
நியாயமாய்ப் பார்த்தால் நவீன திருவிளையாடல் என்ற பெயரில் வந்திருக்க வேண்டிய பேண்டசி படம்
இல்லையப்பா.. சரஸ்வதி சபதம் படத்திலும் திருவிளையாடல் இருக்கும். நீங்க இப்படி சொல்லக் கூடாதுன்னு தானே சரஸ்வதி ரெண்டு சீன்ல வர்றாங்க..
Delete//Saraswathi's Challenge brings lots of fun. // thare was no Saraswathi's Challenge which brought lots of fun for audience. :-))))))))))))
ReplyDeleteசெம்ம காண்டுல வெளிய வந்த மாதிரி தெரியுது..
Deleteகாமெடினு கத்தி கத்தி கழுத்துல கத்தி வைக்காம சிரிக்கவச்சா போதும். . .
ReplyDeleteஹஹஹா.. வீட்டுல உட்கார்ந்து பார்த்து ரசிக்கலாம்..
Deleteகடவுள் நடத்தும் சித்து விளையாட்டு கொடுமை...
ReplyDeleteஆமா DD, சித்துவோட விளையாட்டு எப்பவுமே கொடுமை தான்!!
Deleteமுடிவா என்னதான் சொல்ல வர்ரீங்க...தியேட்டரில் பார்க்கலாமா? உலகத் தொலைக்காட்சியில பார்க்கலாமா?
ReplyDeleteதொலைகாட்சி போதும்!
Deleteஹே... நீ... ரொம்ப நல்லா ரிவியூ பண்ணுது மேன்...
ReplyDeleteசான்சு கேட்ச்சா கண்டுக்க்றேம்பா...
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு... +1
கரீட்டா வந்துகினியே.. சூப்பரு.. +1 க்கும் டேங்ஸுப்பா..
Deleteகாமெடி படம் நல்ல கருத்தோடு வந்துருக்கும் போல ...அப்படித்தானே
ReplyDeleteகருத்தோட இருக்கு.. ஆனா காமெடி அங்கங்க தான் இருக்கு.. ஒரு முறை பார்க்கலாம் பாஸு.
Deleteஜெய் கொஞ்சம் இளைக்கணும்கறதைச் சொல்லவே மாட்டீங்களா! நிவேதா தாமஸ் சென்னைல படிச்ச பொண்ணுன்னு கேள்விப்பட்டேனே...இல்லையா?
ReplyDeleteஇருக்கலாம் ஸார். அந்தப் பொண்ணு மலையாளத்துல சூப்பரா ஒரு படத்துல நடிச்சுட்டு எப்படி தனக்கு ஸ்கோப்பே இல்லாத இந்த படத்துக்கு ஒத்துகிச்சுன்னு தெரியல.
Deleteகண்டிப்பா பாத்தே ஆகணுமா?
ReplyDeleteஇல்ல சாமி, எப்படியும் டி.வில காமெடி போட்டுடுவாங்க.. அதுல பார்த்துக்கலாம்.
Deleteசாமி சரணம்..நல்ல மெசேஜை விறுவிறுப்பு இல்லாம சொல்லிட்டாங்களா சாமி? விடியும் முன் பார்க்கலியா?
ReplyDeleteநல்ல மெசேஜ், சில காமெடிகளும் நல்லா இருந்தது. சில இடங்களில் மட்டும் இழுவை.. ஆனால் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் எனும் அளவுக்கு ஒளிப்பதிவோ இசையோ இல்லை..
Deleteநாளை (சனி) மாலை மலைக்கு.. வந்ததுக்கு அப்புறம்தான் மீதிப் படங்கள்.. சரணம் ஐயப்பா!
Deleteவிமர்சனம் நல்லா இருக்கு. படம் எப்படி இருந்தா எனக்கென்ன!?
ReplyDeleteஹஹஹா. இந்த படம் குட்டிப் பசங்களுக்கு பிடிக்கும் அக்கா.. ஒரு எட்டு வயதுப் பையன் என்னருகில் அமர்ந்திருந்தான்.. கிட்டத்தட்ட எல்லா காட்சிகளையும் சிரித்து ரசித்தான்.. நாம்தான் சில லாஜிக்குகளை யோசித்து சிரிக்க மறந்து விடுகிறோம்.
Deleteஎந்த லாஜிக்கும் யோசிக்காமல் இரண்டாம் உலகம் படத்தை நான் ரசித்து பார்த்தேன்...
Deleteகுட் பாய்..
Deleteஓட்டு போட்டாச்சு. விரல்ல மை வைக்குறவங்களைத்தான் காணோம்.
ReplyDeleteஇதோ வந்துகிட்டே இருக்காங்க அக்கா.. ஒரு சாமியார் வருவாரு பாருங்க.. ;-)
Deleteவணக்கம்
ReplyDeleteஆவி அண்ணா
பட விமர்சனம் நன்று உண்மையாக சொன்னால் நீங்கள் எழுதும் பட விமர்னம் தனிச் சிறப்பு....வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.. உங்க தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள் பல..
Deleteநகைச்சுவையும் கருத்தும் இணைந்த படம்.
ReplyDeleteஅவசியம் பார்க்கின்றேன் நண்பரே
த,ம.7
பாருங்க.. நல்லா தான் இருக்கு..
DeleteAvasiyam parthudaren - dvd kidaikum pothu. hee... hee...!
ReplyDeleteஹஹஹா..
Deleteநல்ல விமர்சனம். தொலைக்காட்சியில் வரும்போது தான் பார்க்கணும்!
ReplyDeleteநல்ல விமர்சனம்...
ReplyDeleteஅருமை.