Tuesday, December 3, 2013

ஆவி டாக்கீஸ் - மதயானைக் கூட்டம் (Music)

                                       

புதுமுகம் கதிர், ஓவியா நடித்து பாலு மகேந்திராவின் உதவியாளராக இருந்து இயக்குனராகியிருக்கும் விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்கியிருக்கும் படமென்பதாலும் இசையமைப்பாளர் ஜீவி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம் என்பதாலும் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாயிருக்கிறது. தவிர தென்மேற்கு பருவக்காற்று, சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை படங்களுக்கு இசையமைத்த ரகுநாதன் இசையில் வெளிவரும் படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டது.


         1. "உன்னை வணங்காத" வேல்முருகன் பாடியிருக்கும் மதயானைக் கூட்டத்தின் அறிமுகப் பாடல் ஒரு குறிப்பிட்ட சமூகத்து மக்களின் புகழ் பாடும் பாடல்.              

                           " தழும்புகள் இல்லாத தலைமுறை இல்லையப்பா,
                              ஜெயிலுங்க கட்டியது இவர்களால் தானப்பா" 

                              எனும் வரிகள் வீரத்தை பறைசாற்றுவது போல் இருந்தாலும் வஞ்சப் புகழ்ச்சி அணி போலும் தோன்றுகிறது.


            2. ஜீ.வி பிரகாஷ் பாடியிருக்கும் "கோணக் கொண்டக்காரி" பாடல் காதல் நோய் வந்த ஒருவன் தன் சந்தோஷ உணர்வுகளை துள்ளலுடன் பாடியிருக்கும் பாடல்.

             3. "கொம்பு ஊதி" பாடல் புஷ்பவனம் குப்புசாமி, விக்ரம் சுகுமாரன் குரல்களில் கிராமத்து சாதிப் பெரியவரின் மகள் திருமண வரவேற்பு பாடல். கிராமத்து தாரை தப்பட்டை, கொம்பு என நம் காதுகளுக்கு விருந்து படைக்கிறது. இடையில் இழைந்தோடும் ஆனந்த் அரவிந்தாக்ஷன் மெல்லிய வரிகள் பாடலுக்கு மெருகேற்றுகிறது. பாடல் நமக்கு "காதல்" படப் பாடலை நினைவுபடுத்தி செல்கிறது.

             4. ஊரை விட்டு செல்லும் சோகத்தை மனதை உருக்கும் வகையில் தஞ்சை செல்வியின் குரலில் ஒலிக்கிறது "எங்க போறே" பாடல். நான்கு நிமிட பாடலில் ரகுநாதன் அந்த சோகத்தை நமக்கும் ஏற்றி விடுகிறார்.


              5. 'யாரோ யாரோ"  பாடல் ஹரிசரண், மோனாலி தாக்கூர் பாடியிருக்கும் டூயட் பாடல்.  இசை முன்பே "எங்கேயோ, எப்போதோ" கேட்டது போல் இருக்கிறது.

               6. "முக்குலத்து" - திருவுடையான் பாடியிருக்கும் இந்த பாடல் தேவர் புகழ் பாடும் ஒப்பாரி பாடலாக வருகிறது.

                    சமீப காலங்களில் படங்களில் ஒப்பாரி பாடல்கள் இடம்பெறுவது எதார்த்தத்தை நோக்கிய தமிழ் சினிமாவின் பயணமாக இருக்குமோ? சாதிகள் தேவையில்லை என்று ஒருபுறம் பண்பட்டுக் கொண்டிருக்கும் மனித சமுதாயத்தை பின்னோக்கி இழுக்கும் முயற்சியோ? எனவும் தோன்றுகிறது.
மொத்தத்தில் சாதிச் சாயம் பூசப்பட்ட இந்த மதயானைக் கூட்டம் கம்பீரமாக தான் இருக்கிறது.
15 comments:

 1. உங்களது,பாடல்கள் விமர்சனம் கேட்கத் தூண்டுகிறது,கேட்போம்!

  ReplyDelete
  Replies
  1. கேளுங்க. கேளுங்க.. கேட்டுகிட்டே இருங்க..

   Delete
 2. பாடல்களைக் கேட்கிறேன் நன்றி நண்பரே

  ReplyDelete
 3. எப்படி ஆவி? உங்க கடமை உணர்ச்சி கண்கலங்க வைக்குது....

  ReplyDelete
  Replies
  1. நாலஞ்சு நாட்களா வாசகர்களை தவிக்க விட்டுட்டோம்ல.. அதான் (பதிவு இல்லாம ஜாலியா இருந்தாங்கன்னு உங்க மைன்ட் வாய்ஸ் சொல்றது கேக்குது)

   Delete
 4. மலையேர்றப்ப பாட்டைக் கேட்டுக்கிட்டே போனியளோ...? வந்த சுருக்கோட பதிவப் போட்டுட்டீரு! சினிமாவுல யதார்த்தம்னு ரொம்ப «ந்ச்சுரலா எடுததாலும் சகிக்காது வேய்! மியூசிக்க வெச்சு படத்தயும் ஜட்ஜ் பண்ணிர முடியாது. அதனால இப்பம் இசைய மட்டும் ரசிப்போம்ங்கேன்...!

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க வாத்தியாரே! கொஞ்சம் சாதி தூக்கலா இருந்தது கொஞ்சம் உறுத்தலா இருந்தது..

   Delete
 5. இனிமேல் தான் கேட்க வேண்டும்... ஒவ்வொரு பாடலுக்கு உங்களின் கருத்துகளும் அருமை...

  ReplyDelete
 6. // நம் காடுகளுக்கு விருந்து படைக்கிறது. // காது ?

  ReplyDelete
  Replies
  1. வாய்யா.. டை கட்டுன நக்கீரா.. இப்போவே மாத்திர்றேன்..

   Delete
 7. சாதி சாதி சாதி ன்னு நீர் எழுதியிருக்குறத பாத்தா அடுத்த அக்கப்"போர்"க்கு மத(யானை)க்கூட்டம் தயாராகிட்டு இருக்கு போல .....! நடக்கட்டும்

  ReplyDelete
  Replies
  1. போர் நடக்குதோ இல்லையோ, அது ஆரோக்யமான விஷயம் இல்லைங்கிறது என் தனிப்பட்ட கருத்து..

   Delete
 8. ஆவி.... பாடலைக் கேட்க உங்க பக்கத்தில் ஒரு லின்க் கொடுக்கலாமே.....

  கூகிள் செய்து கேட்கிறேன்....

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails