Friday, December 6, 2013

ஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்


இன்ட்ரோ  
                          திருமணம் என்பதில் இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டிய விஷயங்களை கொஞ்சம் நகைச்சுவையுடனும், அதே சமயம் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும் எடுத்துச் சொன்ன இயக்குனருக்கு ஒரு ஷொட்டு. கமர்ஷியல் விஷயங்களை தூரப் போட்டுவிட்டு கதைக்கு துளியும் காம்ப்ரமைஸ் செய்யாமல் எடுத்திருப்பதே இந்தப் படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ்.

கதை         
                            இன்டர்நெட், சேட்டிங், டேட்டிங் என வேகமாக போய்க்கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும் அரேஞ்ச்டு மேரேஜ் செய்து வைக்க முயலும் பெற்றோர்கள். பெண்பார்த்து நிச்சயம் ஆன பின்னும் திருமணம் ஆகும் காலத்திற்குள் தன் மனதிற்கு பிடித்த ஆணாய் இருந்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கும் இன்றைய பெண்கள், மனசாட்சி, சமுதாயம் இவை ஒருபக்கம் இருந்தாலும் திருமணத்திற்கு முன்னரே அந்தப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைக்கும் இன்றைய ஆண்,  இவர்களுக்கிடையில் நிச்சயதார்த்தம் முடிந்ததிலிருந்து திருமணம் வரையிலான ஒரு காலகட்டம் தான் படத்தின் கதை.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           பொதுவாக இளம் நடிகர்கள் நடிக்கத் தயங்கும் கதாப்பாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கும் பிரசன்னா, வழக்கம் போல் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். லேகா வாஷிங்டன் இன்றைய அழகான நவநாகரீக மங்கையை திரையில் கொண்டு வருகிறார். அம்மணி இதுவரை நடித்த படங்களிலேயே இது இவர் நன்றாக நடித்த படமாக இருக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் தன் விருப்பபடி திருமணம் நடக்கும் போது ஆச்சர்யபடுவதாகட்டும், திருமணம் கிராமத்தில் நடக்க பிரசன்னா ஏற்பாடு செய்யும் போது அவருக்கு கண்களால் நன்றி கூறுவதாகட்டும், காதல் மொழி பேசும் போதும் லேகாவுக்கு தவுசண்ட் லைக்ஸ்.                               டெல்லி கணேஷ் நல்ல கேரக்டர் என்றாலும் தன் மருமகனுக்கு ஆண்மை குறைவுள்ளதை தெரிந்து கொண்டு அவரிடமே அதற்கு தீர்வு சொல்வது டூ மச். டாக்டராக வரும் கிரேஸி மோகன் கொஞ்சம் இரட்டை அர்த்த வசனத்தில் கதைக்கு தேவையென்றாலும் முகம் சுளிக்க வைக்கிறார். பிரசன்னாவின் அமெரிக்க நண்பன் ராகவ், உமா பத்மநாபன், பிரசன்னாவின் மற்ற நண்பர்கள் ஆகியோரும் நல்ல நடிப்பு..


இயக்கம்-தயாரிப்பு
                                அருண் வைத்தியநாதனின் தயாரிப்பில் R.S. பிரசன்னாவின் இயக்கத்தில் இன்றைய தலைமுறையினர் திருமணத்தில் உணர வேண்டிய "புரிதல்" என்னும் விஷயத்தை கொஞ்சம் பொறுமையாக சொல்லி இருந்தாலும் நல்ல முயற்சி என்றே கொள்ள வேண்டும். ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களும், நேரடியாக சொல்லப்பட்டிருக்கும் நெளிய வைக்கும் வரிகளும் குடும்பத்தோடு படம் பார்க்கும் சூழலை கெடுப்பதை இயக்குனர் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 கிளைமாக்ஸ் காட்சியில் லேகாவிடம் மன்னிப்பு கேட்க வரும் போது அவர்களுக்குள் ஏற்படும் காதல் கெமிஸ்ட்ரி அருமை.. இன்றைய ட்ரெண்டுக்கு தகுந்தவாறு FB ஸ்டேட்டஸ்களை கொண்டே பெண் பார்ப்பதிலிருந்து  நிச்சயம் வரையிலான கதையை நகர்த்திய விதம்.

                  Aavee's Comments - Tasty wine in a Ugly Bottle.
22 comments:

 1. // குடும்பத்தோடு படம் பார்க்கும் சூழலை கெடுப்பதை... //

  Ok... Ok...

  ReplyDelete
 2. வணக்கம்

  விமர்சனம் மிக அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. எப்படித் தான் இப்படி தேடிப் போய் விழறீங்களோ!

  ReplyDelete
  Replies
  1. மற்ற ரசிகர்கள் விழுந்திடக் கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான்!

   Delete
 4. அருமையான விமர்சனம்...

  ReplyDelete
 5. Tasty wine in a Ugly Bottle.
  டேஸ்ட் ஆ இருக்கு அப்படின்னு டெஸ்ட் பண்ணாம
  குடிச்சது பெஸ்ட் ஆகிடுச்சோ?

  ஆரூர் மூனா செந்தில் அவர்கள் எழுதியதை படித்தீர்களா?

  ReplyDelete
  Replies
  1. இல்லை தாத்தா.. இப்போவே போய் பார்க்கிறேன்..

   Delete
 6. //Tasty wine in a Ugly Bottle.//

  ரசித்தேன்....

  விமர்சனம் நன்று.

  த.ம. 6

  ReplyDelete
 7. விமர்சனம் நச்சுன்னு இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்.. நன்றி அக்கா..

   Delete
 8. விமர்சனம் அருமை.
  படம் மொக்கைன்னு சொன்னாங்களே...

  ReplyDelete
  Replies
  1. அது பார்க்கிறவங்களை பொறுத்தது பாஸ்.. சில இடங்கள் சலிப்பு தட்டினாலும் மசாலா இல்லாத இயல்பான படம்.. எனக்கு ஓக்கேவா தான் இருந்தது..

   Delete
 9. நல்ல கதைதான் போல.. ஆனால் கொஞ்சம் சொதப்பிவிட்டார்கள் என நினைக்கிறேன் . முழுவதுமே 'அவா' பாசை என்று கேள்விபட்டேன்... அப்படியா..?

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க.. "அவா"வை தான் "அவா" நிறைய கிண்டல் அடிச்சுருக்கா..

   Delete
 10. படம் நல்லாருக்கோ நல்லா இல்லையோ ஆனால் உங்கள் விமர்சனம் நல்லாருக்கு...

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...